1 00:00:06,000 --> 00:00:12,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 2 00:00:50,592 --> 00:00:53,011 “வீட்டைவிட்டுப் பிரிந்து வாடும் சாலி.” 3 00:01:03,146 --> 00:01:05,147 சரி. என்னால் இது முடியும். 4 00:01:07,025 --> 00:01:08,986 நான் செம்மறி ஆடுகளை எண்ணலாம். 5 00:01:09,069 --> 00:01:10,988 முகாமில் செம்மறி ஆடுகளை எண்ணுவார்களா? 6 00:01:11,071 --> 00:01:13,407 ஒருவேளை ரக்கூன்களை எண்ணலாம். 7 00:01:13,949 --> 00:01:15,117 போகட்டும் விடு. 8 00:01:16,285 --> 00:01:18,954 தூங்குவது என்பது மனவுறுதி சம்பந்தப்பட்டது. 9 00:01:19,037 --> 00:01:21,123 நான் தூங்கிவிடுவேன். 10 00:01:21,206 --> 00:01:23,000 இப்போதிலிருந்து. 11 00:01:24,251 --> 00:01:26,253 இப்போதிலிருந்து. 12 00:01:31,466 --> 00:01:33,135 இப்போதிலிருந்து. 13 00:01:33,760 --> 00:01:35,762 இப்போது! இப்போது! 14 00:01:41,018 --> 00:01:43,604 இது நம்ப முடியாததாகிறது. 15 00:01:43,687 --> 00:01:45,230 நான் விரைவில் தூங்க வேண்டும். 16 00:01:45,314 --> 00:01:48,567 சில மணிநேரத்தில் விடிந்துவிடும். 17 00:01:52,571 --> 00:01:54,823 அனைவரும் எழுந்திருங்கள். 18 00:01:54,907 --> 00:01:58,118 இது முகாமில் இன்னொரு அற்புதமான காலை. 19 00:02:01,288 --> 00:02:02,915 மோசமான படுக்கை. 20 00:02:03,707 --> 00:02:05,083 குட் மார்னிங், சாலி. 21 00:02:05,167 --> 00:02:07,336 அதில் என்ன நல்ல விஷயம் உள்ளது? 22 00:02:07,419 --> 00:02:08,503 மோசமான இரவா? 23 00:02:08,586 --> 00:02:10,672 முகாமில் என் முதல் ஆண்டு நினைவுள்ளது. 24 00:02:10,756 --> 00:02:14,301 வீட்டைவிட்டுப் பிரிந்து வாடியதால், முதல் சில இரவுகள் என்னால் தூங்க முடியவில்லை. 25 00:02:14,384 --> 00:02:16,261 வீட்டைவிட்டுப் பிரிந்து வாடுவதாக யார் கூறியது? 26 00:02:16,345 --> 00:02:19,056 சிறுவர்கள்தான் வீட்டைவிட்டுப் பிரிந்து வாடுவார்கள். 27 00:02:19,139 --> 00:02:22,643 இந்தப் படுக்கைகள் தூங்குவதற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பது என் தவறா? 28 00:02:22,726 --> 00:02:24,228 அப்படியா? 29 00:02:25,062 --> 00:02:26,146 அப்படியா? 30 00:02:28,899 --> 00:02:31,485 கண்டிப்பாக வீட்டைவிட்டுப் பிரிந்து வாடுகிறாள். 31 00:02:53,590 --> 00:02:55,801 இதெல்லாம் ஒரு காலை உணவா? 32 00:02:55,884 --> 00:02:59,555 இந்த ஜூஸில் நிறைய சதை உள்ளது, இதை சாப்பிட ஃபோர்க்தான் தேவை. 33 00:02:59,638 --> 00:03:02,015 ஜூஸ் இப்படி கட்டி கட்டியாக இருக்கக் கூடாது. 34 00:03:02,099 --> 00:03:05,060 இந்த ஓட்மீல் பற்றிக் கேட்கவே வேண்டாம். 35 00:03:06,770 --> 00:03:08,856 நீ வீட்டில் எப்போதும் ஓட்மீல் சாப்பிடுவாயே. 36 00:03:08,939 --> 00:03:12,150 இது மிகவும் ஓட்ஸாக உள்ளது. 37 00:03:12,234 --> 00:03:14,152 நீ முட்டைகள் சாப்பிடலாமே? 38 00:03:14,236 --> 00:03:15,445 மிகவும் கலக்கப்பட்டுள்ளது. 39 00:03:15,529 --> 00:03:18,282 கோழி கூட இந்த முட்டைகளைச் சாப்பிடாது. 40 00:03:18,365 --> 00:03:20,659 கோழிகள் முட்டை சாப்பிடுமா? 41 00:03:20,742 --> 00:03:22,744 நான் விவாதத்திற்கு வரவில்லை. 42 00:03:22,828 --> 00:03:25,080 நான் சாப்பிடக்கூடிய காலை உணவைத் தேடுகிறேன். 43 00:03:25,163 --> 00:03:26,248 விடு. 44 00:03:30,836 --> 00:03:34,673 நீ எதுவும் கூறும் முன், நான் வீட்டைவிட்டுப் பிரிந்து வாடவில்லை. 45 00:03:35,174 --> 00:03:37,718 நான் யாராவது வெண்ணையை எடுத்துக்கொடுங்கள் என்று கூற வந்தேன். 46 00:03:37,801 --> 00:03:40,179 அனைவரும் எதற்காக முகாமிற்கு வருவார்கள்? 47 00:03:40,262 --> 00:03:43,348 ஆம், இந்த இயற்கை அழகாக உள்ளது, 48 00:03:43,432 --> 00:03:45,517 ஆனால் அது மாறுவதே இல்லை. 49 00:03:46,018 --> 00:03:49,146 குறைந்தது வீட்டில், டிவி சேனல்களை மாற்றலாம். 50 00:03:49,938 --> 00:03:52,024 அந்த முயல் மிகவும் கஷ்டப்படுகிறது. 51 00:03:53,025 --> 00:03:56,320 புரிகிறது. நீ அழகாக இருக்கிறாய். முயற்சியைக் குறை. 52 00:03:59,656 --> 00:04:01,325 நான் வீட்டைவிட்டுப் பிரிந்து வாடவில்லை. 53 00:04:02,367 --> 00:04:06,705 வீட்டில் எல்லாம் சிறப்பதாக நினைக்கிறேன், அதை மிஸ் செய்கிறேன். 54 00:04:06,788 --> 00:04:08,790 அதில் வாடுவதற்கு என்ன இருக்கிறது? 55 00:04:18,007 --> 00:04:20,594 நான் திரும்பிப் போக வேண்டும். 56 00:04:20,677 --> 00:04:24,014 என்னை மான் சாப்பிடுவதை நான் விரும்பவில்லை. 57 00:05:15,691 --> 00:05:16,567 விநோதமாக உள்ளதே. 58 00:05:16,650 --> 00:05:19,820 இந்தப் பை கீச்சிடக்கூடியது இல்லையே. 59 00:05:24,283 --> 00:05:25,659 நீ எங்கிருந்து வந்தாய்? 60 00:05:31,748 --> 00:05:34,209 நீ விநோதமான குட்டிப் பறவை. 61 00:05:34,293 --> 00:05:36,420 நீ பாதி கம்பளிப்புழு போல இருக்கிறாய். 62 00:05:36,503 --> 00:05:38,338 நீ எப்படி என் பைக்குள் வந்தாய்? 63 00:05:42,593 --> 00:05:46,430 நானும் நீயும் இருக்கக் கூடாத இடத்திற்கு வந்துவிட்டோம் போல. 64 00:05:47,055 --> 00:05:50,184 நாம் சௌகரியமாக இருக்க ஒருவருக்கொருவர் உதவலாம். 65 00:05:50,267 --> 00:05:51,643 என்ன நினைக்கிறாய்? 66 00:05:56,356 --> 00:05:59,818 இது, எங்கள் வீட்டில் உள்ள என் அறையைப் போலவே இருக்கிறது. 67 00:05:59,902 --> 00:06:03,363 நான் எப்போதும் விரும்பிய டிவியைச் சேர்த்துள்ளேன். 68 00:06:03,447 --> 00:06:06,408 நீ இங்கே மிகவும் சௌகரியமாக இருக்கலாம். 69 00:06:07,784 --> 00:06:09,620 உனக்குப் பிடிக்கும் எனத் தெரியும். 70 00:06:09,703 --> 00:06:13,081 வீட்டின் சௌகரியம் போல சிறப்பானது எதுவுமே இல்லை. 71 00:06:13,165 --> 00:06:15,334 நாம் இப்போது என்ன செய்வது? 72 00:06:57,543 --> 00:06:58,543 ஹாச்சூ! 73 00:07:08,303 --> 00:07:11,139 நான் முகாமில் அப்போதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 74 00:07:11,223 --> 00:07:13,392 அதற்கு நீதான் காரணம், விநோதப் பறவையே... 75 00:07:13,475 --> 00:07:16,228 பறவையா? அது பறவையா? 76 00:07:16,311 --> 00:07:18,564 இது என் பையில் கிடைத்தது. 77 00:07:19,481 --> 00:07:22,025 காட்டேஜுக்குள் வனவிலங்குகள் வரக் கூடாது. 78 00:07:22,109 --> 00:07:23,485 ஆனால்... 79 00:07:23,569 --> 00:07:25,279 லுசில் கூறுவது சரிதான், சாலி. 80 00:07:25,362 --> 00:07:29,241 பறவைகள் எவ்வளவு விநோதமாக இருந்தாலும் வீட்டிற்குள் இருக்கக் கூடாது. 81 00:07:29,324 --> 00:07:30,784 அவை இயற்கையின் பகுதி. 82 00:07:30,868 --> 00:07:32,452 அது அவற்றுக்கு நியாயமில்லை. 83 00:07:36,832 --> 00:07:39,918 மார்ஸியும் லூசியும் கூறுவது சரிதான், குட்டி நண்பா. 84 00:07:40,002 --> 00:07:42,087 நீ இங்கே இருக்க வேண்டியவன் இல்லை. 85 00:07:43,589 --> 00:07:45,966 நாம் இருவருமே அப்படித்தான். 86 00:07:47,551 --> 00:07:51,847 நமக்குள் இருக்கட்டும், நான் கொஞ்சம் வீட்டைவிட்டுப் பிரிந்து வாடலாம். 87 00:07:53,182 --> 00:07:55,601 வருகிறேன், விநோதமான குட்டிப் பறவையே. 88 00:08:00,606 --> 00:08:01,606 ஹாச்சூ! 89 00:08:22,503 --> 00:08:24,755 கத்துவதை நிறுத்து. 90 00:08:27,174 --> 00:08:29,468 இது பார்க்க அழகாக உள்ளது, ஆனால்... 91 00:08:29,551 --> 00:08:32,261 குறைந்தது, வீட்டில் டிவி சேனல்களை மாற்றலாம். 92 00:08:32,346 --> 00:08:34,222 அதேதான்! 93 00:08:34,722 --> 00:08:37,058 இது உன் முதல் கோடை முகாமா? 94 00:08:37,142 --> 00:08:38,977 ஆம். 95 00:08:39,061 --> 00:08:42,523 நமக்குள் இருக்கட்டும், இது எனக்கு ஏற்றதா எனத் தெரியவில்லை. 96 00:08:43,023 --> 00:08:45,192 நான் ஒன்றும் வீட்டைவிட்டுப் பிரிந்து வாடவில்லை. 97 00:08:46,360 --> 00:08:47,611 நான் நயோமி. 98 00:08:47,694 --> 00:08:49,154 சாலி. 99 00:08:49,238 --> 00:08:51,823 நாம் மகிழ்ச்சியாக இருக்காத ஒரு விஷயம், அதை இன்னொருவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக 100 00:08:51,907 --> 00:08:55,118 இருக்காதபோது, இன்னும் வேடிக்கையாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டேன். 101 00:08:55,744 --> 00:08:58,497 நாம் டின்னரை ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியின்றி சாப்பிடலாம். 102 00:08:58,580 --> 00:09:01,500 நல்ல திட்டம். எப்படியும் இருட்டத் தொடங்குகிறது. 103 00:09:01,583 --> 00:09:04,002 என்னை மான் சாப்பிடுவதை விரும்பவில்லை. 104 00:09:04,086 --> 00:09:06,338 நான் அதேதான் யோசித்தேன். 105 00:09:34,408 --> 00:09:35,284 பீகிள் ஸ்கௌட் கையேடு 106 00:09:35,367 --> 00:09:40,289 “பீகிள் ஸ்கௌட் என்பது: நம்பகமானது.” 107 00:09:42,708 --> 00:09:45,836 ஸ்நூப்பி, என் ஐஸ் கிரீமைப் பார்த்துக்கொள்கிறாயா? 108 00:09:45,919 --> 00:09:47,087 ம்ம் ஹ்ம்ம். 109 00:09:48,380 --> 00:09:50,674 நினைவிருக்கட்டும், உன்னை நம்பித்தான் இதைக் கொடுக்கிறேன். 110 00:09:50,757 --> 00:09:54,636 நீ இதைச் சாப்பிட்டால் எனக்குத் தெரிந்துவிடும், ஏனெனில் இது இருக்காது. 111 00:10:42,976 --> 00:10:45,979 இந்த எலுமிச்சைச் சாறுக்கு கொஞ்சம் ஐஸ்தான் தேவை. 112 00:10:49,525 --> 00:10:50,859 என்ன செய்கிறாய்? 113 00:10:52,569 --> 00:10:57,157 ஃப்ரீஸர் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு நிற்பது நல்ல யோசனை இல்லை. 114 00:10:57,241 --> 00:10:59,326 அதனால் மொத்தமாக... 115 00:11:00,160 --> 00:11:01,537 ஷார்ட் சர்கியூட் ஆகலாம். 116 00:11:18,095 --> 00:11:21,098 என் கோன் ஐஸ் கிரீம்! அது காலியாகிவிட்டது! 117 00:11:21,181 --> 00:11:23,767 என் ஐஸ் கிரீமைப் பார்த்துக்கொண்டதற்கு வெகுமானமாக இந்த கோன் ஐஸ் கிரீமை 118 00:11:23,851 --> 00:11:25,686 கொண்டு வந்தேன் பார். 119 00:11:25,769 --> 00:11:27,896 உன்னை நம்பினேன். 120 00:11:30,023 --> 00:11:32,818 மேலும், இன்று மிகவும் சூடாக உள்ளது. 121 00:11:32,901 --> 00:11:35,654 ஐஸ் கிரீமானது உருகக்கூடியது. 122 00:11:35,737 --> 00:11:38,615 ஒன்று சொல்கிறேன், ஆளுக்கொரு ஸ்கூப் எடுத்துக்கொண்டால், 123 00:11:38,699 --> 00:11:42,244 அவை மீண்டும் உருகுவதற்குள் சாப்பிட நமக்கு நேரம் கிடைக்கும். 124 00:11:51,295 --> 00:11:54,506 நான் இதற்கு முன் நகரத்திற்கு வெளியே பறவைகளைக் கண்காணித்ததில்லை. 125 00:11:55,007 --> 00:11:56,842 நாம் பால்ட் ஈகிளைப் பார்க்க முடியுமா? 126 00:11:56,925 --> 00:11:58,927 அல்லது தங்கநிறச் சிறகுடைய ஆஸ்பிரே? 127 00:11:59,011 --> 00:12:01,346 அல்லது மெக்ஸிகன் கழுகு? 128 00:12:01,430 --> 00:12:04,892 மெக்ஸிகன் கழுகைப் பார்ப்பது அற்புதமானதாக இருக்குமல்லவா, சார்? 129 00:12:04,975 --> 00:12:09,146 நடக்கும் ஐந்து மஞ்சள் பறவைகள் பற்றி என்ன நினைக்கிறாய்? 130 00:12:15,861 --> 00:12:18,614 அவை தங்களுக்குரிய பாணியில் அற்புதமானவை. 131 00:12:20,282 --> 00:12:23,202 “சிவப்பு முடியுடைய கடித நாள்.” 132 00:12:27,873 --> 00:12:29,541 என்ன செய்கிறாய், சார்லி பிரவுன்? 133 00:12:29,625 --> 00:12:32,294 அந்தச் சிவப்பு முடியுடைய சிறுமி 134 00:12:32,377 --> 00:12:35,005 ஏரியின் அந்தப் பக்கமுள்ள முகாமிற்குச் செல்கிறாள் என்பது இப்போதுதான் தெரிந்தது. 135 00:12:35,088 --> 00:12:36,882 நான் அவளுக்கொரு கடிதம் எழுத முயல்கிறேன். 136 00:12:36,965 --> 00:12:39,468 உலகத்தில் எத்தனையோ முகாம்கள் இருக்கும்போது, 137 00:12:39,551 --> 00:12:43,347 நமக்குப் பிடித்த பெண், நம் முகாமிலிருந்து ஏரியின் அடுத்த கரையின் முகாமில் இருக்கிறாள். 138 00:12:43,430 --> 00:12:46,558 நான் அவளை கார்ட்போர்ட் படகுப் போட்டிக்கு அழைக்க விரும்புகிறேன், 139 00:12:46,642 --> 00:12:50,229 ஆனால் எப்படிக் கூறுவதெனத் தெரியவில்லை. 140 00:12:50,312 --> 00:12:52,648 ”நீ கார்ட்போர்ட் படகுப் போட்டிக்கு வருகிறாயா?” 141 00:12:52,731 --> 00:12:55,901 என்பது எப்படி உள்ளது? 142 00:12:56,485 --> 00:12:57,945 அற்புதம்! 143 00:12:58,028 --> 00:13:01,240 கார்ட்போர்ட் படகுப் போட்டி என்றால் என்ன? 144 00:13:01,323 --> 00:13:03,367 அது ஒரு முகாம் பாரம்பரியம். 145 00:13:03,450 --> 00:13:05,536 கேம்பர்கள் கார்ட்போர்ட் மூலம் படகுகள் செய்து, 146 00:13:05,619 --> 00:13:10,082 அது உடைந்து மூழ்குவதற்குள், எது தூரமாகப் போகிறது என்று பார்ப்பார்கள். 147 00:13:10,165 --> 00:13:12,835 மூழ்குவதும் போட்டியின் ஒரு பகுதிதானா? 148 00:13:12,918 --> 00:13:14,753 அது படகு போலவே தெரியவில்லையே. 149 00:13:14,837 --> 00:13:16,505 அவ்வளவுதான். முடிந்தது. 150 00:13:16,588 --> 00:13:18,632 இப்போது இதை அவளிடம் கொடுக்க வேண்டும். 151 00:13:18,715 --> 00:13:20,384 அதை எப்படிச் செய்யப் போகிறாய்? 152 00:13:20,467 --> 00:13:22,761 நாம் கண்காணிப்பின்றி முகாமிற்கு வெளியே செல்ல அனுமதியில்லை. 153 00:13:22,845 --> 00:13:24,179 உண்மைதான். 154 00:13:24,263 --> 00:13:30,561 ஆனால் முக்கியமான மிஷன்களில் திறமைசாலியான ஒரு பீகிளை எனக்குத் தெரியும். 155 00:13:30,644 --> 00:13:33,480 ”முடியாது” என்றால் என்ன அர்த்தம்? அது ஏரியின் அந்தப் பக்கம் உள்ளது. 156 00:13:33,564 --> 00:13:35,148 உனக்கு என்ன வேலை இருக்கிறது? 157 00:13:41,655 --> 00:13:44,825 நீ உன் பீகிள் ஸ்கௌட் ட்ரூப்பைக் காப்பாற்ற பேட்ஜ்களைப் பெற வேண்டும் என நினைத்தேன். 158 00:13:48,954 --> 00:13:51,957 தேவைப்படும்போது நண்பனுக்கு உதவுவதற்கு ஒரு பேட்ஜ் இருக்க வேண்டும். 159 00:13:53,166 --> 00:13:55,502 இதோ. உதவும் கரம் பேட்ஜ். 160 00:13:55,586 --> 00:13:59,298 “பீகிள் ஸ்கௌட் எப்போதும் கனிவாகவும், சுயநலமின்றியும் இருக்க வேண்டும், 161 00:13:59,381 --> 00:14:01,967 மேலும், நண்பணுக்கு தேவைப்படும்போது, முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்.” 162 00:14:06,346 --> 00:14:07,431 குட் லக். 163 00:14:07,514 --> 00:14:11,310 பதட்டம் வேண்டாம், ஆனால் என் வாழ்க்கை உன் கையில்தான் உள்ளது. 164 00:14:11,810 --> 00:14:15,898 இது வேலை செய்தால், நீ அந்தச் சிவப்பு முடியுடைய சிறுமியை நேருக்கு நேர் பார்ப்பாய். 165 00:14:15,981 --> 00:14:18,650 நீயும் அவளும் மட்டும் ஒன்றாக. 166 00:14:19,151 --> 00:14:20,569 நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. 167 00:14:20,652 --> 00:14:22,404 நான் என்ன கூறுவது? 168 00:14:22,487 --> 00:14:24,781 நான் வழக்கமாக “ஹலோ” என்று தொடங்குவேன். 169 00:14:24,865 --> 00:14:29,536 தெரியும். நான் கார்ட்போர்ட் படகுப் போட்டியில் கலந்துகொள்வதோடு, அதில் ஜெயிப்பேன். 170 00:14:29,620 --> 00:14:31,496 பிறகு நான் எதுவும் கூற வேண்டியதில்லை. 171 00:14:31,580 --> 00:14:34,708 நான் ஈர்க்கும் விதத்தில் அங்கே நிற்பேன். 172 00:14:36,001 --> 00:14:39,213 நீ அப்போதும் “ஹலோ” என்று கூற வேண்டும். 173 00:15:44,653 --> 00:15:46,363 உன் படகு வேலை எப்படிப் போகிறது? 174 00:15:46,446 --> 00:15:48,782 நல்ல முன்னேற்றம் உள்ளது. 175 00:15:50,492 --> 00:15:54,204 உனக்கும் எனக்கும் “முன்னேற்றம்” என்ற சொல்லிற்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது போல. 176 00:15:54,288 --> 00:15:58,166 நீ பார்ப்பது கச்சிதமான படகின் தயாரிப்பு முறை. 177 00:15:58,250 --> 00:16:00,419 அவற்றை ஒன்றாகச் சேர்க்க வேண்டும். 178 00:16:10,596 --> 00:16:12,890 நான் இன்னும் கொஞ்சம் கார்ட்போர்டு எடுத்து வருகிறேன். 179 00:17:54,157 --> 00:17:56,326 எப்படி இருக்கிறது? 180 00:17:58,287 --> 00:18:01,665 இது கண்டிப்பாக கார்ட்போர்டால் ஆனதுதான். 181 00:18:04,251 --> 00:18:07,254 ஸ்நூப்பி அந்தக் கடிதத்தைக் கொடுத்திருப்பான் என நம்புகிறேன். 182 00:18:10,132 --> 00:18:13,093 ஸ்நூப்பி, அந்தச் சிவப்பு முடியுடைய சிறுமி வருகிறாளா? 183 00:18:13,177 --> 00:18:14,761 அவளுக்கு என் கடிதம் பிடித்திருந்ததா? 184 00:18:16,346 --> 00:18:18,974 அது உன் கையில்தான் இருக்கிறது, இல்லையா? 185 00:18:19,725 --> 00:18:23,562 நீ திரும்ப இங்கே வருவதற்காக ஏரியைச் சுற்றிச் சென்றாயா? 186 00:18:23,645 --> 00:18:25,272 அது எப்படி நடந்தது? 187 00:18:29,443 --> 00:18:33,614 ஸ்நூப்பி, இது சாலியின் ஆக்டிவிட்டி புத்தகத்தின் பக்கம். 188 00:18:35,532 --> 00:18:36,950 சாலி 189 00:18:41,121 --> 00:18:43,207 அவள் என் கடிதத்தைப் பெறப் போவதில்லை. 190 00:18:43,290 --> 00:18:47,044 அந்தச் சிவப்பு முடியுடைய சிறுமியைச் சந்தித்து, அவளைக் கவர்வதற்கான என் சிறந்த வாய்ப்பு 191 00:18:47,127 --> 00:18:49,213 சொதப்பிவிட்டது. 192 00:18:49,296 --> 00:18:53,800 அதுவும் அவள் ஏரிக்கு அந்தப் பக்கம்தான் இருக்கிறாள். 193 00:18:56,386 --> 00:18:57,971 சோர்ந்து போகாதே, சார்லி பிரவுன். 194 00:18:58,055 --> 00:19:02,434 அந்தக் கடிதம் கண்டிப்பாக சிவப்பு முடியுடைய சிறுமியை அடையும் எனத் தோன்றுகிறது. 195 00:19:02,518 --> 00:19:05,187 அது எப்படி நடக்கிறது என்பது உனக்குப் பிடிக்காமல் போகலாம். 196 00:19:06,688 --> 00:19:07,940 என் படகு. 197 00:19:08,649 --> 00:19:10,651 ஸ்நூப்பி! இல்லை! 198 00:19:10,734 --> 00:19:14,363 கார்ட்போர்ட் படகுகள் ஏரியைக் கடப்பதற்கானவை இல்லை. 199 00:19:26,500 --> 00:19:29,586 கார்ட்போர்ட் படகுப் போட்டி தொடங்கப் போகிறது. 200 00:19:29,670 --> 00:19:33,382 நம் முதல் போட்டியாளர்கள் பெப்பர்மின்ட் பேட்டி மற்றும் மார்ஸி. 201 00:19:34,758 --> 00:19:36,426 ஸ்நூப்பி, சீக்கிரம் வா! 202 00:19:37,094 --> 00:19:39,805 அவன் எங்கே போனான்? அவன் கொடுத்துவிட்டானா? 203 00:19:39,888 --> 00:19:42,224 சிவப்பு முடியுடைய சிறுமியை அழைத்து வந்தானா? 204 00:19:42,307 --> 00:19:43,517 அவள் ஏற்கனவே இங்கே வந்துவிட்டாளா? 205 00:19:46,562 --> 00:19:48,438 கப்பலைவிட்டுக் குதியுங்கள்! 206 00:19:50,816 --> 00:19:53,819 உண்மையில் நீ இதில் வென்றிருக்கலாம். 207 00:19:54,403 --> 00:19:55,487 இதோ வருகிறான். 208 00:20:08,542 --> 00:20:11,503 அவளிடம் என் கடிதத்தைக் கொடுத்தாயா? அவள் வருகிறாளா? 209 00:20:14,089 --> 00:20:17,384 இது அந்தச் சிவப்பு முடியுடைய சிறுமி கொடுத்ததா? 210 00:20:20,304 --> 00:20:22,806 ”அன்புள்ள சார்லி பிர...” 211 00:20:30,105 --> 00:20:32,399 அவளுக்கு என் பாதி பெயராவது தெரிந்துள்ளது. 212 00:20:32,482 --> 00:20:35,027 அதற்கு உதவும் கரம்தான் காரணம். 213 00:20:35,110 --> 00:20:36,111 அருமை. 214 00:20:46,997 --> 00:20:48,540 அவளுக்கு என் பாதிப் பெயர் தெரியும். 215 00:20:48,624 --> 00:20:51,335 இதுதான் என் வாழ்வின் சிறந்த நாள்! 216 00:20:51,835 --> 00:20:53,170 ஹுரே! 217 00:20:59,176 --> 00:21:00,936 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 218 00:21:24,117 --> 00:21:26,119 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 219 00:21:29,206 --> 00:21:31,124 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள். 219 00:21:32,305 --> 00:22:32,310 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm