1 00:00:06,000 --> 00:00:12,074 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=- 2 00:01:07,985 --> 00:01:09,486 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 3 00:01:46,023 --> 00:01:49,025 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 4 00:01:49,026 --> 00:01:52,445 பேரரசே, நீங்கள் எங்களை கௌரவப்படுத்துகிறீர்கள்... 5 00:01:52,446 --> 00:01:53,780 உளவியல் வரலாறு. 6 00:01:54,531 --> 00:01:55,740 நான் மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 7 00:01:55,741 --> 00:01:58,159 எங்களிடம் சில ஆரம்ப தொகுதிகள் இருக்கின்றன... 8 00:01:58,160 --> 00:02:00,412 காலேவின் மடிப்புக்கான ஒன்பதாவது ஆதாரம். 9 00:02:01,121 --> 00:02:03,665 இதுதான் அடிப்படை கோட்பாட்டுக்கான உத்வேகம் என்று புரிகிறது. 10 00:02:04,458 --> 00:02:09,837 பேரரசருக்கும் புரியும் என்று நம்புகிறேன், இதை தடை செய்தது... 11 00:02:09,838 --> 00:02:11,715 பன்னிரண்டாம் க்ளியோனா? 12 00:02:12,633 --> 00:02:13,926 சரி. 13 00:02:14,968 --> 00:02:16,761 அது அரிதான புத்தகங்களின் தொகுப்பில் இருக்கும். 14 00:02:16,762 --> 00:02:19,097 இந்தப் பக்கம். நீங்கள் விரும்பியபடி. 15 00:02:21,600 --> 00:02:23,602 ஒரு நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 16 00:02:25,854 --> 00:02:27,648 கண்டிப்பான வெப்பநிலை கட்டுப்பாடு. 17 00:03:01,765 --> 00:03:05,435 ஹேரி செல்டனின் மரபு ஒரு மென்மையான விஷயமாகவே இருக்கிறது. 18 00:03:07,354 --> 00:03:12,276 வெளிப்படையாக, இவை வாசிப்புப் பொருள் என்பதைவிட கலைப்பொருட்களாகவே வைக்கப்படுகின்றன. 19 00:03:12,818 --> 00:03:15,070 இது என் மனதை கெடுப்பதை என்னால் தவிர்க்க முடியும் என்று நினைக்கிறேன். 20 00:03:16,196 --> 00:03:17,906 எனக்கு வரலாறைப் பார்த்து பயம் கிடையாது. 21 00:03:24,079 --> 00:03:25,914 எனக்குக் கையுறைகள் தேவையா? 22 00:03:26,498 --> 00:03:28,416 பழைய புத்தகத்தைக் கையாள உங்களை ஒரு நூலகர் 23 00:03:28,417 --> 00:03:31,836 கையுறைகளை அணியச் செய்கிறார் என்றால், அதற்கு அவர் உங்களிடம் நற்பெயர் வாங்க முயற்சிப்பதாக அர்த்தம். 24 00:03:31,837 --> 00:03:34,922 உங்கள் கைகளால் தொடுவதைவிட கையுறை அணிவதால் பக்கங்கள் 25 00:03:34,923 --> 00:03:36,341 சேதமடைய அதிக வாய்ப்பிருக்கின்றன. 26 00:03:37,509 --> 00:03:41,847 என் பாதுகாவலர்களின் சூடான மூச்சுக்காற்றைவிட என் கையால் தொடுவது மென்மையானது. 27 00:03:43,599 --> 00:03:45,058 அது எதிர்பாராதது. 28 00:04:09,082 --> 00:04:14,046 ரேவன் செல்டன் அச்சுறுத்துகிறார் என்பதைவிட எச்சரிக்க முயன்றதாகத்தான் எனக்கு எப்போதும் தோன்றியது. 29 00:04:15,380 --> 00:04:21,303 பேரரசு மூன்று நபர்களைக் கொண்டது. எல்லோரும் இது போன்ற யோசனைகளை ஏற்றுக்கொள்வார்களா? 30 00:04:31,063 --> 00:04:35,691 அசல் கையெழுத்துப் பிரதி த்ராக்ஸில் நெய்யப்பட்ட பட்டு பக்கங்களில் 31 00:04:35,692 --> 00:04:37,486 எழுதப்பட்ட ஒற்றை உரை என்று சொல்லப்படுகிறது. 32 00:04:42,115 --> 00:04:43,408 இவை த்ராக்ஸியன் பட்டு. 33 00:04:44,993 --> 00:04:49,623 அசல் கையெழுத்துப் பிரதியை செல்டன் இதே நூலகத்தில் இருந்து கேல் டோர்னிக்கிடம் கொடுத்துவிட்டார். 34 00:04:50,207 --> 00:04:54,753 அவள் அதை டெலிவரன்ஸில் தன்னோடு எடுத்துச் சென்றாள், ஆனால் ஒருபோதும் டெர்மினஸை அடையவில்லை. 35 00:04:56,505 --> 00:04:58,674 எனவே எப்படி இந்த தொகுதி இங்கே திரும்பி வந்தது? 36 00:05:00,425 --> 00:05:02,261 அது ஒரு சுவாரஸ்யமான கதை. 37 00:05:03,136 --> 00:05:04,930 ஆனால் அதைச் சொல்ல வேண்டியவள் நான் இல்லை. 38 00:05:05,597 --> 00:05:07,014 பிறகு யார் சொல்வார்கள்? 39 00:05:07,015 --> 00:05:08,392 ஒரு சக பணியாளர். 40 00:05:10,018 --> 00:05:12,728 இந்தப் புத்தகத்தைப் பற்றி யார் கேட்டாலும், 41 00:05:12,729 --> 00:05:15,439 எவராக இருந்தாலும், அந்த நபரை சந்திக்க 42 00:05:15,440 --> 00:05:16,859 அவர் மிக ஆவலாக இருப்பதாக 43 00:05:17,609 --> 00:05:19,945 எனக்கு அறிவுறுத்திய அதே சக ஊழியர். 44 00:05:23,615 --> 00:05:26,660 ஈரி மாவட்டத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. 45 00:05:27,995 --> 00:05:29,245 நாளை இரவு. 46 00:05:29,246 --> 00:05:30,372 வேலை நேரத்திற்குப் பிறகு. 47 00:05:31,832 --> 00:05:33,333 மேஜையில் கிளிஞ்சல்கள் இருக்கும். 48 00:06:11,788 --> 00:06:14,917 அவர்கள் தங்கள் தேயிலைகளை ஜோவனில் இருந்து வாங்குவதாக சொல்கிறார்கள். 49 00:06:15,459 --> 00:06:17,335 நிச்சயமாக உண்மையில்லை. 50 00:06:17,336 --> 00:06:19,421 ஜோவன் இப்போது ஃபவுன்டேஷனின் கிரகம். 51 00:06:20,172 --> 00:06:24,551 தேநீர் மோசமாக இருக்கும், ஆனால் இந்த இடத்தை எப்படியோ எனக்குப் பிடித்திருக்கிறது. 52 00:06:27,179 --> 00:06:28,430 நீதான் கேல் டோர்னிக். 53 00:06:31,642 --> 00:06:34,269 முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஹேரி செல்டனின் விசாரணை ஹாலாகிராமில் 54 00:06:35,229 --> 00:06:36,479 நான் உன்னைப் பார்த்தேன். 55 00:06:36,480 --> 00:06:38,064 முன்னூற்று இருபத்தி ஒன்று. 56 00:06:38,065 --> 00:06:40,609 - எனவே, எப்படி இருக்கிறாய்... - இங்கேயா? 57 00:06:41,401 --> 00:06:42,861 உயிருடன் என்று சொல்ல வந்தேன். 58 00:06:44,071 --> 00:06:46,197 உயிருடன் இருக்க நிறைய வழிகள் இருக்கின்றன. 59 00:06:46,198 --> 00:06:49,159 கிரையோஸ்லீப்பில் நிலையாகத் தூங்கி விழிக்கும் சுழற்சிகள், ஒரு வழி. 60 00:06:49,785 --> 00:06:52,120 நீ உன் ஹாலோகிராமில் பார்த்த அதே கேல் டோர்னிக்தான் நான். 61 00:06:54,665 --> 00:06:56,500 அப்படியென்றால் நீ சாத்தியமற்றதை செய்திருக்கிறாய். 62 00:06:57,417 --> 00:07:00,295 நீ ஒரு க்ளியோனை நீண்ட ஆயுள் இல்லாத ஒருவராக உணர வைத்துவிட்டாய். 63 00:07:01,129 --> 00:07:03,090 அது மதிப்புமிக்க விஷயம். 64 00:07:03,757 --> 00:07:05,259 அதை ஒரு தோழி எனக்குக் கற்றுக்கொடுத்தாள். 65 00:07:09,596 --> 00:07:11,722 நான் ஒன்பதாவது ஆதாரத்தைக் கேட்பேன் என்று உனக்குத் தெரியுமா? 66 00:07:11,723 --> 00:07:16,687 அது ஒத்த சிந்தனை கொண்டவர்களை அடையாளம் காண உதவும் என்று நினைத்தோம். 67 00:07:17,855 --> 00:07:20,857 அதை வைத்து ஒரு பேரரசையே பிடிப்போம் என்று நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை. 68 00:07:20,858 --> 00:07:23,401 நாங்கள் என்றால் ஃபவுன்டேஷனா? 69 00:07:23,402 --> 00:07:24,570 ஒரு வகையில். 70 00:07:25,487 --> 00:07:27,488 நான் இருப்பது புதிய டெர்மினஸுக்குத் தெரியாது. 71 00:07:27,489 --> 00:07:30,492 அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன், உனக்குப் பிரச்சினை இல்லை என்றால். 72 00:07:31,869 --> 00:07:33,995 அல்லது நான் உன்னை கைது செய்ய வைக்கலாம். 73 00:07:33,996 --> 00:07:35,455 நீ செய்ய மாட்டாய். 74 00:07:36,373 --> 00:07:37,541 நீ இங்கே இருக்கிறாய். 75 00:07:38,292 --> 00:07:41,211 உன்னை யாரும் இங்கே அடையாளம் காணாமல் இருக்க முயற்சி செய்திருக்கிறாய். 76 00:07:42,379 --> 00:07:44,006 அது தெரிந்துகொள்ளும் ஆர்வம்தான். 77 00:07:45,757 --> 00:07:47,843 நான் அதை அப்படி நினைக்கவில்லை. 78 00:07:48,760 --> 00:07:50,721 உன் மாறுவேடத்தைப் பார், 79 00:07:51,805 --> 00:07:56,559 எளிமையான உடைகள், நிறம் மாற்றிய கண் லென்ஸ்கள், செயற்கை தாடி, மீசை... 80 00:07:56,560 --> 00:07:59,271 சொல்லப்போனால், அது கொஞ்சம் சரியாக ஒட்டப்படவில்லை. 81 00:08:01,565 --> 00:08:03,774 ட்ராண்டோர் முழுக்க முகத்தை மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கக் கூடியது, 82 00:08:03,775 --> 00:08:05,151 அதற்காக என் முன்னோர்களில் ஒருவருக்கு நன்றி. 83 00:08:05,152 --> 00:08:10,282 எனவே, நீ இதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறாய். 84 00:08:15,370 --> 00:08:17,873 நூலகத்திற்கு ஏன் போனாய், பேரரசே? 85 00:08:19,666 --> 00:08:20,792 பிரைம் ரேடியண்ட். 86 00:08:21,460 --> 00:08:24,546 - ஆலோசகர் அதை அவள் பொறுப்பில் வைத்திருக்கிறாள். - ரேடியண்ட் உங்களிடம்தான் இருக்கிறதா? 87 00:08:25,214 --> 00:08:26,465 உனக்குத் தெரியாதா? 88 00:08:27,925 --> 00:08:31,637 டெர்மினஸ் அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு செல்டன் அதை டெமர்ஸலிடம் கொடுத்திருக்கிறார். 89 00:08:35,182 --> 00:08:37,267 அவள் அதை முதன்முறையாக பயன்படுத்தியதைப் பார்த்தபோது எனக்கு வயது ஐந்து. 90 00:08:39,477 --> 00:08:41,855 அந்த கணிதம் அப்படி காற்றில் நகர்ந்தபோது, அது... 91 00:08:44,399 --> 00:08:46,026 தேவதைகளின் மொழி போல இருந்தது. 92 00:08:50,906 --> 00:08:54,325 ஆனால் அவளுடைய கணக்குகள் மரபணு வம்சத்திற்கு எது சிறந்தது என்பதைப் பற்றியதுதான். 93 00:08:54,326 --> 00:08:56,828 - மீதமுள்ளவர்களைப் பற்றி இல்லை... - மனிதகுலம். 94 00:09:01,542 --> 00:09:03,669 மொத்த விண்மீன் மண்டலத்துக்கும் பொருத்தும் ஒரு சட்ட ஒழுங்கு அமைப்பு கிடையாது. 95 00:09:04,461 --> 00:09:07,089 நீ இதை எனக்கு எளிதாக்குகிறாய். 96 00:09:08,799 --> 00:09:14,513 நீ விரும்பினால் செய்யக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன. 97 00:09:16,181 --> 00:09:17,641 ஓ, நானே யூகிக்கிறேன். 98 00:09:18,809 --> 00:09:20,226 தேசத்துரோகம் செய்யவா? 99 00:09:20,227 --> 00:09:23,271 பேரரசை கவிழ்க்க உங்கள் ஃபவுன்டேஷன் போன்றவற்றுக்கு உதவுவதா? 100 00:09:23,272 --> 00:09:25,983 எல்லா பேரரசுகளும் வீழும், அவர்களுக்கு எங்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. 101 00:09:26,483 --> 00:09:30,779 எப்படியிருந்தாலும், விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால் அது தேசத்துரோகமா? 102 00:09:32,364 --> 00:09:36,117 தற்போதைய சகோதரர் டே அவருடைய கடமையை புறக்கணிப்பதால், உனக்கு அதிகாரம் கிடைக்க 103 00:09:36,118 --> 00:09:38,494 வாய்ப்பு இருப்பதாக கேள்விப்படுகிறேன். 104 00:09:38,495 --> 00:09:39,830 சீக்கிரத்தில். 105 00:09:40,414 --> 00:09:42,498 சகோதரர் டே பற்றி உனக்குத் தெரியக் கூடாது. 106 00:09:42,499 --> 00:09:44,668 எங்களுக்குத் தெரியக் கூடாத பல விஷயங்கள் எங்களுக்குத் தெரியும். 107 00:09:46,044 --> 00:09:47,880 என்னை பயன்படுத்திக்கொள்ள முயசிக்கும்போது அதை என்னால் உணர முடியும். 108 00:09:48,797 --> 00:09:52,008 நீ எனக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், என்னுடைய தொடர்பை இழந்துவிடுவாய். 109 00:09:52,009 --> 00:09:55,929 அந்த நாள் வரும்போது, நீ எங்களை அம்பலப்படுத்தி, என்னை அழிக்கலாம். 110 00:09:56,471 --> 00:09:58,390 உன்னைப் பார்க்க வந்து நான் எடுக்கும் ரிஸ்க் அதுதான். 111 00:10:00,142 --> 00:10:02,686 இன்னும் நீ எனக்கு எதுவும் கொடுக்கவில்லை. 112 00:10:03,937 --> 00:10:05,022 உனக்கு என்ன வேண்டும்? 113 00:10:09,026 --> 00:10:10,610 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 114 00:10:10,611 --> 00:10:15,364 பதினான்காவது டான் ஒரு தோட்டக்காரியுடன் அரண்மனையை விட்டு ஓட முயற்சித்தான், 115 00:10:15,365 --> 00:10:19,410 பதினெட்டாவது டான் ஒரு வேற்றுக்கிரக ராணியுடன் ட்ரான்டோரை விட்டு போனான்... 116 00:10:19,411 --> 00:10:20,745 அந்த டான்கள் எல்லோரும் தேசத்துரோகிகள். 117 00:10:20,746 --> 00:10:22,372 - ஓடிப்போனவர்கள். - இல்லை. 118 00:10:23,207 --> 00:10:27,252 அவர்கள் அவர்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கிய ஆண்கள். 119 00:10:28,086 --> 00:10:29,963 நீ கணிதத்தைப் பார்த்தாய். 120 00:10:30,839 --> 00:10:32,799 அது எப்படி வேலை செய்யும் என்று பார்த்தாய். 121 00:10:33,550 --> 00:10:35,802 அது உன்னை பெரிய விஷயங்களை யோசிக்க வைத்திருக்கிறது. 122 00:10:36,720 --> 00:10:39,014 அந்த ஆசை இன்னும் இருக்கிறது. 123 00:10:40,432 --> 00:10:43,352 உன் வயதில் இருக்கும் எல்லா க்ளியோன்களும் ஆசைப்பட்ட அதே விஷயம். 124 00:10:44,811 --> 00:10:46,438 தப்பிக்க ஒரு வழி. 125 00:10:48,023 --> 00:10:49,690 அதுவாக நான் உனக்கு இருக்க முடியும். 126 00:10:49,691 --> 00:10:53,487 நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். 127 00:10:55,322 --> 00:10:56,906 அவ்வளவுதானா? 128 00:10:56,907 --> 00:10:59,867 ஆடம்பர வடிவமைப்போ, பெரிய திட்டங்களோ இல்லையா? 129 00:10:59,868 --> 00:11:01,286 ஒரு காலம் வரும், 130 00:11:02,287 --> 00:11:03,746 மியூல் என்ற ஒருவன், 131 00:11:03,747 --> 00:11:05,582 ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துவான், 132 00:11:06,583 --> 00:11:09,710 ஆனால் அது வேறு உரையாடலுக்கானது. 133 00:11:09,711 --> 00:11:14,049 இப்போதைக்கு, நாம் தொடர்ந்து பேசுவோம். 134 00:11:15,008 --> 00:11:16,509 எப்போது திரும்பி வருவாய்? 135 00:11:16,510 --> 00:11:18,887 டான், ஒருபோதும் நான் இங்கே இருக்கவில்லை. 136 00:11:34,778 --> 00:11:38,448 இப்போது 137 00:12:25,662 --> 00:12:26,872 மியூல். 138 00:12:27,497 --> 00:12:29,790 நான் பெயரைக் கேட்டதும் நீ அழைப்பாய் என்று எதிர்பார்த்தேன். 139 00:12:29,791 --> 00:12:32,502 உன்னை பயனுள்ளவராக மாற்றிக்கொள்வதற்கான நேரம் இது, பேரரசே. 140 00:12:32,503 --> 00:12:34,296 அவன் வருவதை நீ கணித்தாய். 141 00:12:34,880 --> 00:12:36,214 ஆனால் ரேடியண்டால் முடியவில்லை. 142 00:12:36,215 --> 00:12:37,673 உனக்கு அவனைப் பற்றி என்ன தெரியும்? 143 00:12:37,674 --> 00:12:40,676 அவன் ஒரு விண்வெளி கொள்ளையன், சின்னக் குழு. 144 00:12:40,677 --> 00:12:42,929 பல ஆண்டுகளாக, அவனைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய், 145 00:12:42,930 --> 00:12:45,474 ஆனால் அவன் எப்படிப்பட்டவன் என்று நீ ஒருபோதும் சொல்லவில்லை. 146 00:12:46,183 --> 00:12:47,266 என்னால் உதவியிருக்க முடியும். 147 00:12:47,267 --> 00:12:49,018 அவன் ஏதாவது கோரிக்கைகளை வைத்தானா? 148 00:12:49,019 --> 00:12:50,854 ம், இன்னும் இல்லை. 149 00:12:51,980 --> 00:12:53,564 ஒரு எல்லைக்குள் நிறுத்த அழை. 150 00:12:53,565 --> 00:12:54,649 என்ன? 151 00:12:54,650 --> 00:12:57,610 கால்கனுக்குள் நிறுத்த அவனை அழைக்கச் சொல்கிறேன். 152 00:12:57,611 --> 00:13:00,071 முடியாது. கால்கன் எங்களுடையது இல்லை. 153 00:13:00,072 --> 00:13:02,198 ஃபவுன்டேஷன் அதைப் போர் நடவடிக்கையாக பார்க்கும்... 154 00:13:02,199 --> 00:13:03,783 ஃபவுன்டேஷனை நான் சமாளித்துக்கொள்கிறேன். 155 00:13:03,784 --> 00:13:07,203 எந்தவொரு கப்பல் படை நடவடிக்கைகளுக்கும் இன்னமும் எங்களுக்கு சபை ஒப்புதல் தேவை. 156 00:13:07,204 --> 00:13:09,539 அவர்கள் அந்த ஒப்புதலை வழக்க எந்த வாய்ப்பும் இல்லை. 157 00:13:09,540 --> 00:13:13,335 நீ செய்ய வேண்டியதெல்லாம் அவசரகால அமர்வுக்கு சபையைக் கூட்டுவதுதான். 158 00:13:14,378 --> 00:13:15,670 கவனத்தை சிதறவிடாதே. 159 00:13:15,671 --> 00:13:18,631 மியூல் இப்போது செயலில் இறங்கிவிட்டான். 160 00:13:18,632 --> 00:13:22,761 இந்த மிகக் குறுகிய நேரத்திற்கு, அவன் தனியாக இருக்கிறான். 161 00:13:24,471 --> 00:13:27,391 நாம் செயலில் இறங்குவோம் அல்லது தோற்போம். 162 00:13:28,600 --> 00:13:30,393 உன் தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கு. 163 00:13:30,394 --> 00:13:34,272 நீயே நேரடியாக மியூலை பார், உன்னால் முடிந்ததை தெரிந்துகொள், ஹோலோ மூலமாக மட்டுமே பேசு. 164 00:13:34,273 --> 00:13:36,858 தூதர்களை அனுப்பாதே, நேரில் சந்திக்காதே. 165 00:13:36,859 --> 00:13:38,068 ஏன்? 166 00:13:38,694 --> 00:13:40,027 அவனைப் பற்றிய வதந்திகளை நீ கேட்கலாம், 167 00:13:40,028 --> 00:13:43,532 அவன் தன்னுடைய எண்ணங்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்துவான் என்று. 168 00:13:44,533 --> 00:13:46,158 அந்த வதந்திகள் உண்மைதான். 169 00:13:46,159 --> 00:13:47,786 அதற்கு சாத்தியமே இல்லை. 170 00:13:50,455 --> 00:13:51,623 இல்லையா? 171 00:13:53,041 --> 00:13:54,042 சீக்கிரத்தில் கூடுதல் தகவல்களைத் தருகிறேன். 172 00:14:03,635 --> 00:14:09,516 கால்கன் 173 00:14:39,755 --> 00:14:43,633 எனவே, கேப்டன், நாம் இந்த மியூலைப் பார்த்தால் என்ன செய்வது? 174 00:14:43,634 --> 00:14:46,219 ஒன்றும் செய்ய வேண்டாம். உள்ளே நுழையத்தான் நீங்கள் எனக்குத் தேவை. 175 00:14:46,220 --> 00:14:49,680 என் பின்னால் இருங்கள், எதுவும் பேசாதீர்கள். இது உளவு பார்க்கும் வேலை. 176 00:14:49,681 --> 00:14:52,434 அவன் யார், அவனுக்கு என்ன வேண்டும் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். 177 00:14:57,064 --> 00:14:59,315 ஆயுதத்தைப் பார்த்தால் எனக்கு எச்சரிக்கை செய். 178 00:14:59,316 --> 00:15:00,734 இல்லையென்றால்... 179 00:15:18,669 --> 00:15:21,505 அதோ அவனுடைய பேலட் கலைஞன், மேக்னிஃபிகோ ஜைஜாண்டிகஸ். 180 00:15:22,464 --> 00:15:25,092 மியூல் போகும் இடங்களுக்கெல்லாம், போருக்குக் கூட அவனைக் கூட்டிப் போவதாக வந்தந்திகள் இருக்கின்றன. 181 00:15:25,926 --> 00:15:27,635 ஏன் யாரும் நம்மைப் பார்க்கவில்லை? 182 00:15:27,636 --> 00:15:29,179 இசைதான் அதற்கு காரணம். 183 00:15:29,888 --> 00:15:30,931 அது மயக்குவதாக இருக்கிறது. 184 00:15:32,266 --> 00:15:34,601 இசை ஆட்கொண்டது போல இருக்கிறது, இல்லையா, அன்பே? 185 00:15:35,394 --> 00:15:36,770 அதுதான் விஷயமாக இருக்கலாம். 186 00:15:38,647 --> 00:15:39,731 அவன் அங்கே இருக்கிறான். 187 00:15:40,232 --> 00:15:41,942 இப்போது நான் அவனுக்கு நெருக்கமாக போக வேண்டும். 188 00:15:59,710 --> 00:16:01,253 நீ என்னைப் போன்றவன். 189 00:16:02,838 --> 00:16:06,966 கேல் டோர்னிக் யார்? 190 00:16:06,967 --> 00:16:10,761 கேப்டன் ப்ரிட்சர்? 191 00:16:10,762 --> 00:16:11,930 என்ன ஆனது? 192 00:16:14,308 --> 00:16:15,809 நான் வந்திருக்கக் கூடாது. 193 00:16:18,562 --> 00:16:19,688 வீட்டிற்குப் போங்கள். 194 00:17:17,454 --> 00:17:19,080 அபாரம்! 195 00:17:22,251 --> 00:17:23,877 அபாரம்! 196 00:17:24,461 --> 00:17:25,921 அருமையாக இருந்தது. 197 00:17:26,421 --> 00:17:29,174 மேக்னிஃபிகோ ஜைஜாண்டிகஸ்! 198 00:17:33,804 --> 00:17:38,016 என்னுடைய செல்ல சொட்டைத்தலை முட்டாள் நன்றாக வாசிக்கிறான். 199 00:17:42,771 --> 00:17:43,772 நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? 200 00:17:58,287 --> 00:18:00,664 தயவுசெய்து, தொடருங்கள். 201 00:18:05,836 --> 00:18:07,086 நாம் நடனமாடலாமா? 202 00:18:07,087 --> 00:18:09,631 கேப்டன் "உள்ளே நுழையத்தான் நீங்கள் எனக்குத் தேவை" போய்விட்டார். 203 00:18:10,841 --> 00:18:13,385 கண்டிப்பாக. திடீரென, சரியா? 204 00:18:14,303 --> 00:18:16,971 ஒருவேளை என்ன நடக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம், தெரியுமா? 205 00:18:16,972 --> 00:18:21,184 அன்பே, இந்த குறிப்பிட்ட மியூல் நம்முடைய சூரிய ஒளியைத் தடுத்ததிலிருந்தே 206 00:18:21,185 --> 00:18:23,102 எனக்கு எரிச்சலூட்டுகிறான். 207 00:18:23,103 --> 00:18:24,229 தொடர்ந்து பேசு. 208 00:18:24,730 --> 00:18:26,899 அவனுக்கு கொஞ்சம் இடையூறு செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். 209 00:18:28,859 --> 00:18:31,360 கேப்டன் ப்ரிட்சர், மியூல் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள விரும்பினார். 210 00:18:31,361 --> 00:18:34,781 அந்த தகவல் தெரிந்த ஒருவனை நான் பார்க்கிறேன். 211 00:18:35,574 --> 00:18:38,368 என்னால் அவனிடம் பேச முடியும், ஆனால் திரு. மியூல் நான் பேசுவதைப் பார்க்கக் கூடாது. 212 00:18:39,786 --> 00:18:42,163 ஒரு கிரகத்தைக் கைப்பற்றி பார்ட்டி வைக்கும் ஒருவன், 213 00:18:42,164 --> 00:18:44,333 இப்போது கெட்டப்பெயர் எடுக்க விரும்புகிறான். 214 00:18:45,667 --> 00:18:48,294 அவனுக்கு புகழ் பற்றிய அக்கறை இருந்தால், என்னை சந்திக்க விரும்புவான். 215 00:18:48,295 --> 00:18:52,007 ப்ரிட்சரால் செய்ய முடியாதது உன்னால் முடியும். உனக்குத் தேவையானதெல்லாம் உன் வசீகரம்தான். 216 00:18:57,471 --> 00:18:59,723 மது! மது கொண்டுவா. 217 00:19:36,844 --> 00:19:39,513 அடடா, கவலை வேண்டாம், கொள்ளையர்களே. நான் அமைதி நோக்கத்தில் வருகிறேன். 218 00:19:43,308 --> 00:19:46,520 இவனை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். இவன் பிரபலமானவன். 219 00:19:47,855 --> 00:19:49,022 டோரன் மாலோ. 220 00:19:50,566 --> 00:19:54,235 நாம் நண்பர்களாக இருக்க முடியுமா? நான் மது மற்றும் கேளிக்கையை கொண்டு வருகிறேன், 221 00:19:54,236 --> 00:19:57,488 நான் எதிர்பார்த்ததைவிட உங்களிடம் நல்ல வாசனை வருவதில் நிம்மதி அடைகிறேன். 222 00:19:57,489 --> 00:19:59,949 - எனவே... - நீ எங்களை அவமதிக்கிறாய். 223 00:19:59,950 --> 00:20:04,955 இல்லை. நான் அவமதிப்பு செய்வது போல சிலருக்குத் தெரியலாம்... 224 00:20:05,622 --> 00:20:06,999 அவமதிப்பு. 225 00:20:15,007 --> 00:20:18,010 வாருங்கள். குடிக்கலாம். 226 00:20:42,701 --> 00:20:43,785 என்னை திரும்ப இழிவுபடுத்து. 227 00:20:44,286 --> 00:20:45,661 என்ன? 228 00:20:45,662 --> 00:20:46,955 என்னை இழிவுபடுத்து. 229 00:20:47,998 --> 00:20:52,294 என்னுடைய கிரகத்தில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது, வார்த்தைப் போர். 230 00:20:53,086 --> 00:20:56,632 இழிவுபடுத்தும் விளையாட்டு. என்னை இழிவுபடுத்து. 231 00:20:59,760 --> 00:21:01,260 நான் அதைச் செய்ய விரும்பவில்லை. 232 00:21:01,261 --> 00:21:02,930 நீ பொழுதுபோக்கிற்கு வாக்குறுதி அளித்தாய். 233 00:21:03,722 --> 00:21:06,767 என்னை சரியாக இழிவுபடுத்த இந்தப் பாடல் முடியும் வரை உனக்கு நேரம் தருகிறேன். 234 00:21:07,434 --> 00:21:09,853 நீ செய்யாவிட்டால், நான் சிரிப்பதை நிறுத்திவிடுவேன். 235 00:21:14,816 --> 00:21:16,902 உனக்கான நேரம் போய்க்கொண்டிருக்கிறது, பலகீனமானவனே. 236 00:21:17,819 --> 00:21:20,613 என்னை பலகீனமானவன் என்று அழைக்கிறீர்களா? 237 00:21:20,614 --> 00:21:23,157 இறக்கும் விலங்கு போல தோற்றமளிப்பவன் நான் இல்லை. 238 00:21:23,158 --> 00:21:25,452 பரிச்சியமானது. எதிர்பார்த்ததுதான். 239 00:21:26,161 --> 00:21:29,665 பாருங்கள், ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமான ஒன்றை நான் யோசிக்க வேண்டும். 240 00:21:30,832 --> 00:21:33,751 குடிபோதையில் இருக்கும் அந்த சிறுமியால்கூட அவற்றை உங்களுக்கு விளக்க முடியும். 241 00:21:33,752 --> 00:21:34,836 அவள் உங்கள் மகளா? 242 00:21:34,837 --> 00:21:38,089 இருக்காது, கோவேறு கழுதைகள் மலட்டுத்தன்மை கொண்டவை, இல்லையா? 243 00:21:38,090 --> 00:21:40,341 அதேதான், சரிதானே? 244 00:21:40,342 --> 00:21:44,011 படுக்கை சுகத்தில் ஏமாற்றமடைந்தவர்களோடு நிற்கும் 245 00:21:44,012 --> 00:21:46,472 பாவப்பட்ட, அன்பற்ற மியூல், வர்க்கப் பொறாமையுடன், 246 00:21:46,473 --> 00:21:48,724 யாராவது ஒருவர் தன்னை கவனிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு 247 00:21:48,725 --> 00:21:51,769 பால்வினை நோயைப் போலத் தோன்றும் ஒரு விண்கப்பலில் பறந்து வருகிறான். 248 00:21:51,770 --> 00:21:54,272 ஆனால் இறுதியில், தனது கால்களுக்கு இடையில் இருக்கும் 249 00:21:54,273 --> 00:21:55,982 சிஃபிலிஸால் பாதிக்கப்பட ஆணுறுப்பைப் பார்த்து 250 00:21:55,983 --> 00:21:58,442 ஒருவர் சிரிக்காமல் இருக்க கொடுப்பதற்கான பணத்துக்காக 251 00:21:58,443 --> 00:22:01,071 தட்டேந்தி கெஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு அற்ப சர்வாதிகாரிதான் நீ. 252 00:22:13,125 --> 00:22:16,628 அருமை. நான் இழிவுபடுத்தப்பட்டேன். 253 00:22:32,186 --> 00:22:34,396 அவன் உன்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டிருக்கிறான், இல்லையா? 254 00:22:35,522 --> 00:22:38,650 ஓ, நான் வருந்துகிறேன். மோசமான மியூல். 255 00:22:39,776 --> 00:22:41,278 நான் அவனிடம் கொஞ்சம் பேச வேண்டும். 256 00:22:44,948 --> 00:22:46,200 நீ என்னை பெய்டா என்று கூப்பிடலாம். 257 00:22:49,453 --> 00:22:51,955 நீ என்னை இழிவுபடுத்திவிட்டாய்... 258 00:22:53,248 --> 00:22:55,375 என்னுடைய திட்டங்கள் சிறியவை என்று கற்பனை செய்துகொண்டு. 259 00:23:00,881 --> 00:23:06,887 நான் இந்த கிரகத்தை மட்டும்தான் ஆள ஆசைப்படுகிறேன் என்று நினைக்கிறாயா? 260 00:23:08,847 --> 00:23:10,182 ஆனால் எனக்கு எல்லாம் வேண்டும். 261 00:23:11,099 --> 00:23:12,392 இது மிகவும் எளிமையானது. 262 00:23:13,101 --> 00:23:19,608 நான் முழு பேரரசு மீதும், ஃபவுண்டேஷன் மீதும் படையெடுத்து வருவேன். 263 00:23:20,275 --> 00:23:23,986 நான் எனக்குப் பிடித்த ஒன்றைப் பார்த்தால்... 264 00:23:23,987 --> 00:23:25,072 பூம்! 265 00:23:26,573 --> 00:23:29,826 நான் அதை எடுத்துக்கொள்வேன். இப்படி. 266 00:23:31,787 --> 00:23:33,205 எனக்குப் பிடிக்காத ஒன்றை... 267 00:23:35,165 --> 00:23:36,458 ஒன்றைப் பார்த்தால்... 268 00:23:57,729 --> 00:23:58,730 தயவுசெய்து. 269 00:23:59,731 --> 00:24:00,858 இது வலிக்கும். 270 00:24:01,900 --> 00:24:07,989 ஆனால் சீக்கிரத்தில் நீ, "தயவுசெய்து, தயவுசெய்து கூடுதலாக என் தோலை தருகிறேன்" என்று சொல்வாய். 271 00:24:07,990 --> 00:24:11,493 அந்த வேதனைதான் உன்னுடைய மிகச்சிறந்த நேரமாக இருக்கும். 272 00:24:12,244 --> 00:24:16,373 உன் தோல் உரிக்கப்பட்டு, நன்றியோடு இறந்து போவாய். 273 00:24:21,503 --> 00:24:25,215 நீ தயாரா? நீ இதை விரும்பத் தயாரா? 274 00:24:36,476 --> 00:24:37,561 ஃப்ளாஷ். 275 00:24:44,943 --> 00:24:46,194 பெய்டா! 276 00:24:46,195 --> 00:24:47,361 டோரன்! 277 00:24:47,362 --> 00:24:50,324 நகரு! போகலாம்! 278 00:24:51,742 --> 00:24:53,659 போ! போகலாம்! உனக்கு ஏதாவது தகவல் கிடைத்ததா? 279 00:24:53,660 --> 00:24:56,454 ஓ, ஆம்! மேகி! வா. மேகி, எங்களோடு வா. 280 00:24:56,455 --> 00:24:57,831 அது தகவல் இல்லை. 281 00:25:00,000 --> 00:25:02,126 மீண்டும் வரவேற்கிறேன். பானங்களை ஏற்பாடு செய்யட்டுமா? 282 00:25:02,127 --> 00:25:03,545 ஆம், தயவுசெய்து. 283 00:25:04,046 --> 00:25:05,505 என்ன நடந்தது? 284 00:25:05,506 --> 00:25:07,257 அவன் என்ன செய்தான்? 285 00:25:08,217 --> 00:25:09,550 அவன் எங்கே? நான் அவனைக் கொன்றுவிடுவேன். 286 00:25:09,551 --> 00:25:10,843 அவனைத் தொலைத்துவிட்டேன்! 287 00:25:10,844 --> 00:25:12,054 இல்லை, நீ செய்யவில்லை. 288 00:25:39,665 --> 00:25:41,083 நமக்கு ஒன்றுமில்லை. 289 00:25:44,545 --> 00:25:45,712 சரி, அது எப்படி? 290 00:25:46,421 --> 00:25:48,382 நாம் நிஜமாகவே பிரமாதமான ஜோடி, இல்லையா? 291 00:25:49,132 --> 00:25:50,133 நாம் மூவரும். 292 00:25:50,717 --> 00:25:52,176 நாம் மூவரும். 293 00:25:52,177 --> 00:25:54,512 எதிரி விண்கலம் வருகிறது. 294 00:25:54,513 --> 00:25:55,973 ஸ்லீப் பேட்ச்! 295 00:25:56,723 --> 00:25:58,892 - போ! ஜம்ப் செய்! - ஜம்ப் செய்யப்படுகிறது. 296 00:26:16,660 --> 00:26:17,661 அவர்கள் ஜம்ப் செய்துவிட்டார்கள். 297 00:26:19,079 --> 00:26:20,080 மேக்னிஃபிகோ? 298 00:26:21,206 --> 00:26:22,207 அவனும்தான். 299 00:26:28,130 --> 00:26:30,716 பரவாயில்லை. நாம் அவர்களைப் பிடிப்போம் அல்லது பிடிக்க மாட்டோம். 300 00:26:32,342 --> 00:26:34,761 விஷயங்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படித்தான் நடக்கும். 301 00:26:40,058 --> 00:26:41,185 அதற்கு ஒரு வார்த்தை இருக்கிறது. 302 00:26:41,935 --> 00:26:42,936 விதி. 303 00:26:44,271 --> 00:26:45,480 அதுதான் அந்த வார்த்தை, வேன்டாக். 304 00:26:46,398 --> 00:26:51,069 சில விஷயங்கள் விதிப்படி தீர்மானிக்கப்பட்டவை. 305 00:27:09,588 --> 00:27:10,589 பேரரசு 306 00:27:30,400 --> 00:27:32,945 பேரரசர் வருகிறார். 307 00:27:35,280 --> 00:27:36,323 ஒரு நிமிடம் கிடைக்குமா? 308 00:27:39,993 --> 00:27:41,787 இயல்பாக இருங்கள். டிஸ்மிஸ் செய்யப்பட்டீர்கள். 309 00:27:43,580 --> 00:27:45,581 இது யாருக்கும் தெரியக்கூடாது என்றால், 310 00:27:45,582 --> 00:27:48,960 நிர்வாணப் படைவீரர்களின் முன்புதான் இதைச் செய்ய வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. 311 00:27:48,961 --> 00:27:50,879 சரி, நான் புகழ்பெற்ற விசித்திரமானவன். 312 00:27:52,673 --> 00:27:56,050 எனக்கு உன் உதவி தேவை, கமாண்டர். இப்போது உன்னால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்? 313 00:27:56,051 --> 00:27:58,886 நான்தான் உன் முதல் கிளாவிஜெர், அதனால் ரொம்பக் குறைவாக? 314 00:27:58,887 --> 00:28:01,765 அவமானம். நாம் அரண்மனையைவிட்டு வெளியேற வேண்டும். 315 00:28:02,766 --> 00:28:05,142 நீ பேரரசர். நீ உன் இஷ்டப்படி செய்யலாம். 316 00:28:05,143 --> 00:28:08,063 இது வேறு. என் சகோதரர்களுக்குத் தெரியக் கூடாது. 317 00:28:08,814 --> 00:28:11,733 டெமர்ஸலுக்குத் தெரியக் கூடாது. 318 00:28:12,985 --> 00:28:14,443 நீ நிரந்தரமாக வெளியேறுகிறாயா? 319 00:28:14,444 --> 00:28:19,408 ஆம். நான் என் நினைவோடு அப்படியே இவருடன் இணைத்துக்கொள்வேன். 320 00:28:21,785 --> 00:28:25,037 அப்படியென்றால் என் நினைவை என்ன செய்வது? அவர்கள் எங்களை தணிக்கைச் செய்வார்கள். 321 00:28:25,038 --> 00:28:28,876 ஆபத்து இருக்கும் என்று சொன்னேனே. நீயும் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும். 322 00:28:29,668 --> 00:28:30,711 நிரந்தரமாக. 323 00:28:31,461 --> 00:28:33,796 ஸ்டேனலின் பழைய கோட்டை வரைதான் எங்களால் போக முடியும். 324 00:28:33,797 --> 00:28:36,884 வெளிப்புற மாவட்டம் வரை போக, எங்களுக்கு நீ தேவை. 325 00:28:37,509 --> 00:28:41,929 சரி, பேரரசே, அதுதான் என் பிரச்சினை. அது எனக்கு மட்டும் ஆபத்து இல்லை. 326 00:28:41,930 --> 00:28:43,014 எனக்கு அது தெரியும். 327 00:28:43,015 --> 00:28:44,766 மரியாதையுடன் சொல்கிறேன், உனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். 328 00:28:45,767 --> 00:28:49,688 நாங்கள் எல்லோரும் உறுதிமொழி எடுத்திருக்கிறோம், ஆனால் யாரும் வார்த்தைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. 329 00:28:50,314 --> 00:28:51,315 நாங்கள் விசுவாசமாக இருப்போம் என்று அவர்களுக்குத் தெரியும், 330 00:28:52,065 --> 00:28:54,902 ஏனென்றால் ஒவ்வொரு கிளாவிஜெருக்கும் இருக்க வேண்டிய ஒரே விஷயம் ஒரு குடும்பம். 331 00:28:56,069 --> 00:28:57,945 அரண்மனையின் இடத்தில் எங்களுக்கு வீடுகளைக் கொடுக்கிறீர்கள், 332 00:28:57,946 --> 00:29:02,159 அதன் மூலம் எங்கள் அன்புக்குரியவர்கள் பணயக்கைதிகள் என்பது எங்கள் நினைவில் இருக்கும் என்பதற்காக. 333 00:29:04,036 --> 00:29:07,289 நீ கேட்பதை என்னால் செய்ய முடியாது. நடு சிம்மாசனத்திற்குக் கூட முடியாது. 334 00:29:08,415 --> 00:29:12,251 நான் உன் குடும்பத்தையும் கருத்தில் கொண்டேன். அவர்களும் உன்னோடு வருவர்கள். 335 00:29:12,252 --> 00:29:14,420 - இந்த தியாகத்திற்காக... - என்னால் முடியாது... 336 00:29:14,421 --> 00:29:16,924 ...நான் உன் மகளின் நோயை குணப்படுத்துகிறேன். 337 00:29:19,927 --> 00:29:20,928 என்ன? 338 00:29:21,512 --> 00:29:25,974 என் ஏகாதிபத்திய நேனைட்கள். நீ எங்களுக்கு உதவினால், அது அவளுடையது. 339 00:29:26,600 --> 00:29:30,019 ஏகாதிபத்தியத்தில் இருக்கும் எந்த கிரகத்திலும் நீங்கள் குடியேறப் போதுமானப் பணத்தைத் தருகிறேன். 340 00:29:30,020 --> 00:29:34,608 ஆம், நான் உனக்குக் கொடுக்கும் பணத்துக்கு, நீ ஒரு கிரகத்தையே வாங்கலாம். 341 00:29:36,485 --> 00:29:37,778 அதை யோசித்துப் பார். 342 00:29:54,211 --> 00:29:55,211 நாம் அவனை நம்பலாமா? 343 00:29:55,212 --> 00:29:57,713 அநேகமாக நம்ப முடியாது. ஆனால் நமக்கு அவன் தேவை. 344 00:29:57,714 --> 00:29:59,091 அவன் நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டால்? 345 00:30:00,300 --> 00:30:04,888 நாங்கள் அவனுடைய குடும்பத்தைப் பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக அவன் சொன்னது தவறில்லை. 346 00:30:14,189 --> 00:30:15,607 அவளுக்குக் கேட்கும் என்று நான் நினைக்கவில்லை. 347 00:30:23,657 --> 00:30:26,743 அதோ. இப்போது அது கேட்க முடியாத தூரத்துக்கு போய்விட்டது. 348 00:30:32,457 --> 00:30:35,794 என்ன இது? 349 00:30:40,340 --> 00:30:42,467 நீ மேவோனிடம் அவளைப் பற்றி எச்சரித்தாய், இப்போது இதுவா? 350 00:30:45,971 --> 00:30:47,805 நீ ஏன் அவளைப் பார்த்து மிகவும் பயப்படுகிறாய்? 351 00:30:47,806 --> 00:30:49,515 எனக்கு இன்னும் கொஞ்சம் வித்துகள் தேவை. 352 00:30:49,516 --> 00:30:52,727 இல்லை. நீ ஏற்கனவே சித்தப்பிரமை பிடித்தது போல இருக்கிறாய். 353 00:30:52,728 --> 00:30:53,937 அட. 354 00:30:54,605 --> 00:30:58,400 அவள் உன் ஆலோசகர், இல்லையா? அவள் உன்னைக் காயப்படுத்த மாட்டாள். 355 00:30:59,151 --> 00:31:02,403 உனக்குப் புரியவில்லை. அதற்கு வேறு வழி இல்லை. அது... 356 00:31:02,404 --> 00:31:05,073 அது. ஏன் அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்? 357 00:31:06,783 --> 00:31:08,994 என்னால் முடியாது. கொடு. 358 00:31:12,706 --> 00:31:15,751 ஆம், உன்னால் முடியும். நீ என்னிடம் சொல்லலாம். 359 00:31:17,211 --> 00:31:18,795 நான்தானே. 360 00:31:19,755 --> 00:31:23,509 உலகமே அழியப் போகிறது என்றால், ஏன் இரகசியங்களை வைத்திருக்க வேண்டும்? 361 00:31:28,639 --> 00:31:30,390 டெமர்ஸல் ஒரு ரோபோ. 362 00:31:33,769 --> 00:31:35,102 என்ன? 363 00:31:35,103 --> 00:31:36,563 அது உண்மைதான். 364 00:31:39,525 --> 00:31:42,860 ரோபோக்கள் கிடையாது. அவை ஒழிக்கப்பட்டுவிட்டன. 365 00:31:42,861 --> 00:31:43,946 ஒன்றைத் தவிர. 366 00:31:47,574 --> 00:31:48,575 நீ பொய் சொல்கிறாய். 367 00:31:49,284 --> 00:31:51,702 டெமர்ஸல் ஒரு இயந்திரம். 368 00:31:51,703 --> 00:31:55,040 இந்த விண்மீன் மண்டலத்தில் அது தெரிந்தவர்கள் மூன்றே பேர்தான், 369 00:31:55,749 --> 00:31:57,459 அவர்கள் எல்லோருக்கும் க்ளியோன் என்று பெயர். 370 00:31:59,044 --> 00:32:00,295 இப்போது உனக்கு. 371 00:32:06,927 --> 00:32:08,178 இப்போது உனக்குத் திருப்தியா? 372 00:32:10,055 --> 00:32:11,515 போய் பேக் செய்வோம். 373 00:32:12,891 --> 00:32:15,978 திட்டம். நமக்கு அதிக நேரம் இல்லை. 374 00:32:22,067 --> 00:32:24,819 கோரியபடி மியூல் டைட்-பீம் சேனலைத் திறந்திருக்கிறான். 375 00:32:24,820 --> 00:32:27,488 நாம் ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் என்று தெரியவில்லை. 376 00:32:27,489 --> 00:32:30,199 அடுத்த வாரம் நல்ல பெயரைக் கொண்ட கொள்ளையனால் 377 00:32:30,200 --> 00:32:32,285 அவன் எளிதாக அகற்றப்படலாம். 378 00:32:32,286 --> 00:32:34,495 அவன் ஏற்கனவே கைப்பற்றியதைவிட அதிகமாக ஆசைப்படலாம். 379 00:32:34,496 --> 00:32:37,498 எப்படியிருந்தாலும், இது மாதிரியான விஷயம் சிக்கலானது. 380 00:32:37,499 --> 00:32:39,458 இராஜதந்திர நடவடிக்கை நேரில் செய்யப்பட வேண்டும். 381 00:32:39,459 --> 00:32:43,004 மியூலுக்கு மனோதந்திர திறன்கள் இருப்பதாக வதந்திகள் இருக்கின்றன. 382 00:32:43,005 --> 00:32:44,422 அவற்றை தவிர்ப்பது நல்லது. 383 00:32:44,423 --> 00:32:46,133 அபத்தம். என்ன வதந்திகள்? 384 00:32:48,594 --> 00:32:52,347 பாருங்கள், எச்சரிக்கையாக இருப்பதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை என்று நம்புகிறேன். 385 00:32:53,390 --> 00:32:54,474 இப்போது... 386 00:32:57,561 --> 00:32:58,812 நீங்கள் ஆலோசனை சொல்ல இங்கே இருக்கிறீர்கள். 387 00:32:59,396 --> 00:33:04,026 தொடர்ச்சிதான் அரசர். நான் டே ஆகும்போது ஒரு முகம்தான் முன்னால் இருக்க வேண்டும். 388 00:33:04,776 --> 00:33:06,486 நீங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள். 389 00:33:07,446 --> 00:33:08,614 பேரரசே? 390 00:33:14,912 --> 00:33:18,665 சரி... டே. 391 00:33:29,301 --> 00:33:30,344 என்ன? 392 00:33:31,220 --> 00:33:34,473 நல்ல மனதோடு சந்திக்க ஒப்புக்கொண்ட ஒருவருக்கு இது ஒரு அன்பில்லாத வரவேற்பு. 393 00:33:35,057 --> 00:33:36,558 நான் இருபத்து ஐந்தாவது க்ளியோன். 394 00:33:37,476 --> 00:33:41,104 நான் உன்னை மியூல் என்று அழைக்கட்டுமா அல்லது கால்கனின் புதிய போர்த்தலைவன் என்று அழைக்கட்டுமா? 395 00:33:41,605 --> 00:33:42,980 எனக்கு நிறைய பட்டங்கள் இருக்கின்றன. 396 00:33:42,981 --> 00:33:44,732 இதைக் கைப்பற்றினால், அப்படி அழைப்பார்கள். 397 00:33:44,733 --> 00:33:47,861 வேறு எதையாவது கைப்பற்று. பூம். நீதான் அதன் தலைவன் என்று அழைப்பார்கள். 398 00:33:49,363 --> 00:33:52,658 இருந்தாலும், எனக்குப் போர்த்தலைவன் பிடித்திருக்கிறது. அது ஒரு புதிய பட்டம். 399 00:33:53,659 --> 00:33:56,244 கால்கன் மீதான நிலப்பிரபுத்துவ கடமை விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க வந்திருக்கிறேன். 400 00:33:56,245 --> 00:33:58,372 பேரரசுக்கு மாற்றாக இருப்பவனை அனுப்பியிருக்கிறார்களா? 401 00:33:59,206 --> 00:34:02,124 ஷிப்-அண்ட்-சன் ஆர்மடா என்னை பேரரசு என்று அழைக்கிறது. 402 00:34:02,125 --> 00:34:05,879 என்னால் உன் போர்த்தலைவன் பட்டத்தை நிலைபெற செய்ய முடியும். அதற்கு சான்றளிக்க முடியும். 403 00:34:06,380 --> 00:34:09,216 எதிர்பார்ப்புகள் இருக்கும், ஆனால் பலன்களும் இருக்கும். 404 00:34:09,800 --> 00:34:12,219 பேரரசு கால்கன் மீது அதிபதி அந்தஸ்தைப் பெறும். 405 00:34:12,844 --> 00:34:16,348 நீ வரி செலுத்திவிட்டு, கல்கனின் கப்பல் படையை நிலைநிறுத்த என்னை அனுமதி. 406 00:34:17,099 --> 00:34:21,227 அதற்கு பதிலாக, நீ பேரரசின் ஜம்ப் கேட் வர்த்தக நெட்வொர்க்குக்கான அணுகல் மற்றும் 407 00:34:21,228 --> 00:34:23,354 ட்ரான்டோரின் பாதுகாப்பை அனுபவிக்கலாம். 408 00:34:23,355 --> 00:34:27,525 நீ ஏற்கனவே கால்கனைப் பாதுகாக்கத் தவறிவிட்டாய். அதற்கு நான்தான் ஆதாரம். 409 00:34:31,487 --> 00:34:32,821 என்ன அது? 410 00:34:32,822 --> 00:34:35,576 வீட்டை சுத்தம் செய்தல். தயவுசெய்து தொடரு. 411 00:34:36,201 --> 00:34:40,246 இந்த விதிமுறைகளை நீ மறுத்தால், அது போருக்கான காரணங்களாக மாறலாம். 412 00:34:41,915 --> 00:34:43,000 போரா? 413 00:34:43,583 --> 00:34:45,377 போர் பற்றி உனக்கு என்ன தெரியும்? 414 00:34:47,254 --> 00:34:49,255 நீ ஒரு பையன். 415 00:34:49,840 --> 00:34:52,134 நீ உன் நாப்கின்களை பிரிக்க கற்றுக்கொண்டபோது, 416 00:34:53,010 --> 00:34:54,178 நான் கொல்லக் கற்றுக்கொண்டேன். 417 00:34:55,596 --> 00:34:58,098 நீ சௌகரியமாக வாழ்ந்திருக்கிறாய். 418 00:34:59,349 --> 00:35:02,394 போர் சௌகரியமானது இல்லை. 419 00:35:11,904 --> 00:35:13,238 ஜம்ப் கேட் கைப்பற்றப்பட்டது. 420 00:35:13,780 --> 00:35:14,780 எச்சரிக்கைகள் எதாவது போய்விட்டதா? 421 00:35:14,781 --> 00:35:16,408 போவதற்கு முன்பு முடக்கப்பட்டது. 422 00:35:16,992 --> 00:35:18,660 எல்லாம் சரியாக நடக்கிறது என்ற சிக்னலை அனுப்பு. 423 00:35:19,745 --> 00:35:22,915 போக்குவரத்து இயல்பாக இருக்கிறது. இப்போதைக்கு நம் வெற்றியை வெளிக்காட்ட தேவையில்லை. 424 00:35:26,043 --> 00:35:27,044 ஆர்ம்டு 425 00:35:53,403 --> 00:35:54,863 நான் எப்போதும் இப்படி இல்லை. 426 00:35:56,532 --> 00:35:59,868 பொதுவாக, குறைந்தபட்சம் நீ இதை அனுபவிக்க அனுமதிப்பேன். 427 00:36:00,702 --> 00:36:03,330 ஆனால் ஒருவன்... 428 00:36:06,625 --> 00:36:08,043 என்னிடமிருந்து என் பேலட் கலைஞன் பறித்துக்கொண்டான்... 429 00:36:10,379 --> 00:36:11,713 அவனுடைய இசை... 430 00:36:15,342 --> 00:36:16,927 என்னை ஓரளவுக்கு அமைதிப்படுத்தியது. 431 00:36:17,928 --> 00:36:19,513 அது இல்லாமல், நான்... 432 00:36:20,013 --> 00:36:23,016 நான் கொஞ்சம் குறைவான அமைதியோடு இருக்கிறேன், அதன் விளைவுகளை நீ இப்போது பார்க்கிறாய். 433 00:36:31,316 --> 00:36:33,735 உன்னுடைய வாழ்க்கை உன்னுடையது இல்லை என்று நீ எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? 434 00:36:36,071 --> 00:36:39,408 அது ஏதோவொரு பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டது போல. 435 00:36:51,670 --> 00:36:53,255 அது... 436 00:36:55,757 --> 00:36:58,135 நீ கொன்றால்தான் அதிலிருந்து வெளிவர முடியும் என்பது போன்ற 437 00:36:59,678 --> 00:37:01,847 ஒரு எல்லை மீறிய உணர்வு. 438 00:37:09,062 --> 00:37:12,231 மேலோட்டமாகப் பார்த்தால், வேறு எந்தவொரு கொள்ளையனைப் போலத்தான் மியூல். 439 00:37:12,232 --> 00:37:15,986 கொடூரமான, கணிக்க முடியாத, கவனம் பெரும் ஆசையோடு இருப்பவன். 440 00:37:18,155 --> 00:37:20,532 ஆனால் வன்முறை மற்றும் குழப்பத்திற்கு கீழே, 441 00:37:21,575 --> 00:37:25,287 விண்மீன் மண்டலத்தின் எல்லா பகுதியையும் தொடும் ஒரு திட்டம் 442 00:37:26,413 --> 00:37:29,041 இரகசியமாக வடிவம் பெற்றுக்கொண்டிருந்தது. 443 00:37:30,959 --> 00:37:31,960 இதோ. 444 00:37:33,587 --> 00:37:36,172 நாம் கிழக்கு நோக்கி புறப்படுவோம். இலகுரக சாலை முனையம் இருக்கிறது, 445 00:37:36,173 --> 00:37:41,303 மைகோஜென் மாதிரியான அதே மாகாணம், நாம் போவோம்... 446 00:37:45,724 --> 00:37:48,435 நீ நலமாக இருக்கிறாயா, அன்பே? உன் போதைப்பொருட்களைத் தொடவே இல்லை. 447 00:37:54,650 --> 00:37:55,651 பேசு. 448 00:37:57,277 --> 00:37:58,487 டெமர்ஸல்... 449 00:38:00,322 --> 00:38:02,449 அவள் ஒரு பொருள் என்பது போல நீ பேசுகிறாய். 450 00:38:03,325 --> 00:38:05,786 ஆனால் அவள் உன்னுடைய ரோபோ என்றால், அவள் அதைவிட அதிக முக்கியத்துவம் பெற்றவள். 451 00:38:08,455 --> 00:38:10,666 எங்களுக்குள் ஒரு சிக்கலான உறவு இருக்கிறது. 452 00:38:13,001 --> 00:38:15,170 பயமுறுத்த நான் உன்னிடம் சொல்லவில்லை. 453 00:38:17,464 --> 00:38:21,635 டெமர்ஸல் ஒரு தடை. அதற்கு மேல் எதுவும் இல்லை. 454 00:38:24,429 --> 00:38:25,930 நாம் போக வேண்டுமா என்று உறுதியாக எனக்குத் தெரியவில்லை. 455 00:38:25,931 --> 00:38:27,307 என்ன? ஏன்? 456 00:38:29,643 --> 00:38:31,019 நாம் இதைப் பற்றி பேசினோம். 457 00:38:31,520 --> 00:38:32,729 ஆம், நான் போக விரும்புகிறேன். 458 00:38:33,230 --> 00:38:34,773 ஆம், ஆனால்... 459 00:38:35,691 --> 00:38:40,361 நீ சொல்வது போல அழிவு வரப் போகிறது என்றால், நாம் டெமர்ஸல் பக்கத்தில் இருக்க வேண்டும். 460 00:38:40,362 --> 00:38:42,072 நீயும் அப்படிச் சொல்லாதே. 461 00:38:44,283 --> 00:38:47,077 நான் சாதாரணமாக ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஒரு முறை. 462 00:38:47,661 --> 00:38:52,290 நீ என்னை உன் வீட்டிற்குக் கூட்டிப்போ. என்னை உன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்து. 463 00:38:52,291 --> 00:38:55,043 என் குடும்பத்தைச் சந்திப்பதில் நீ மகிழ்ச்சியடைவாய் என்று நான் நினைக்கவில்லை. 464 00:38:55,961 --> 00:38:57,420 பேரரசே? 465 00:38:57,421 --> 00:38:59,756 டான் உங்களை சிம்மாசன அறைக்கு வர கோருகிறார். 466 00:39:00,257 --> 00:39:04,011 அது அங்கே நிற்பது எனக்குத் தெரியவில்லை. அது அங்கே நிற்பது உனக்குத் தெரிகிறதா? 467 00:39:06,013 --> 00:39:07,848 குறுக்கீடுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 468 00:39:12,186 --> 00:39:13,187 முன்னால் போ. 469 00:39:20,360 --> 00:39:22,528 சகோதரா, நீ மிகைப்படுத்துகிறாய். 470 00:39:22,529 --> 00:39:25,282 அவன் ஒரு நாளில் கால்கனைக் கைப்பற்றினான். நீங்களே அவனைப் பார்த்தீர்கள். 471 00:39:26,700 --> 00:39:28,243 அவன் வெறியோடு இருக்கும் ஒருவன். 472 00:39:29,286 --> 00:39:31,288 அவன் இன்னும் அதிகமாக ஆசைப்படுவான், சீக்கிரத்தில் அதற்கு ஆசைப்படுவான். 473 00:39:32,414 --> 00:39:34,123 ஒரு எல்லைக்குள் அடைப்பதை விரும்புகிறேன். 474 00:39:34,124 --> 00:39:36,709 நாம் அவனை ஒரு எல்லைக்குள் அடைக்க வேண்டும். இப்போது, நம்மால் முடியும்போதே. 475 00:39:36,710 --> 00:39:41,757 இது கப்பல் படை நடவடிக்கையின் அளவுக்கு தீவிரமடையாது. அது முடியாது. 476 00:39:45,469 --> 00:39:48,137 மியூல் இங்கே மத்தியப் பகுதியில் இருக்கிறான். 477 00:39:48,138 --> 00:39:51,974 அந்தப் பகுதியில் இருக்கும் நம் கப்பல் படைத் தளமான நிகோசாவிலிருந்து ரொம்ப தூரத்தில் கால்கன் இல்லை. 478 00:39:51,975 --> 00:39:55,604 ஆம். நிச்சயமாக. சரி. 479 00:39:56,605 --> 00:39:57,773 மியூல் என்பவன் யார்? 480 00:39:59,816 --> 00:40:01,818 கால்கனின் புதிய போர்த்தலைவன். 481 00:40:02,486 --> 00:40:05,530 அவன் கால்கனின் கப்பல் படையைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதலை நடத்தினால், 482 00:40:05,531 --> 00:40:07,490 அவனுக்கு ட்ரான்டோருக்கான நேரடி பாதை கிடைத்துவிடும். 483 00:40:07,491 --> 00:40:12,411 அவன் ஒரு கொள்ளையன். அதாவது அவன் சந்தர்ப்பவாதி, தற்கொலை செய்துகொள்பவன் இல்லை. 484 00:40:12,412 --> 00:40:15,164 அது ஃபவுண்டேஷனைத் தூண்டிவிடும். 485 00:40:15,165 --> 00:40:16,250 டான், 486 00:40:18,001 --> 00:40:19,253 இது எதைப் பற்றியது? 487 00:40:20,212 --> 00:40:23,631 கால்கன் மீதான இந்த மோகம் என்ன? 488 00:40:23,632 --> 00:40:26,927 ஏன் நம் வம்சம் 4 மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 489 00:40:29,429 --> 00:40:33,558 சகோதரர்களே, இந்த பேரரசு அழியப் போவதாக நீங்கள் நம்பினால், 490 00:40:33,559 --> 00:40:38,020 உங்கள் விரல்களை ஓட்டைகளில் சொருகிக்கொண்டு உங்கள் கடைசி நாட்களை வீணாக்க விரும்பினால், 491 00:40:38,021 --> 00:40:40,106 நான் ஆசனவாயிலிருந்து தொடங்குவேன். 492 00:40:40,107 --> 00:40:41,524 அப்படியாவது, 493 00:40:41,525 --> 00:40:43,150 உங்கள் நாட்கள் நன்றாக கழியும். 494 00:40:43,151 --> 00:40:44,944 நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 495 00:40:44,945 --> 00:40:49,699 ஏனென்றால் நடு சிம்மாசனம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும். 496 00:40:49,700 --> 00:40:52,869 டே அப்படி செய்தால் கூட, வாக்குகள் உனக்கு எதிராக விழும். 497 00:40:52,870 --> 00:40:56,957 இதைக் கேட்பது கூட மரபணு வம்சத்திற்கு எதிராக விண்மீன் மண்டல சபைக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 498 00:40:57,624 --> 00:41:00,210 மியூல் நமக்கு தீங்கு செய்வான் என்று உன்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது, 499 00:41:00,961 --> 00:41:04,631 ஆனால் சபை அதைச் செய்யும், நாம் அவர்களுக்கு ஏதாவது வாய்ப்பு கொடுத்தால். 500 00:41:09,178 --> 00:41:10,762 நான் வருந்துகிறேன், சகோதரா. 501 00:41:12,639 --> 00:41:13,640 முடியாது. 502 00:41:16,977 --> 00:41:18,812 நடு சிம்மாசனம் முடியாது என்கிறது. 503 00:41:20,689 --> 00:41:23,316 கடந்த 20 வருடங்களில் அவன் சொன்ன மிகவும் புத்திசாலித்தனமான விஷயம். 504 00:41:23,317 --> 00:41:24,443 நல்லது. 505 00:41:25,110 --> 00:41:28,197 நல்லது, ஆனால் இன்னும் நான் மியூலை கண்காணிக்க வேண்டும். 506 00:41:29,781 --> 00:41:30,908 டெமர்ஸல், விண்கலங்களை அனுப்பு. 507 00:41:31,575 --> 00:41:35,871 எனக்கு கால்கனின் பகுதியில் முழுமையான கண்காணிப்பு வேண்டும். அதாவது என் அதிகாரத்துக்குள் இருக்கிறதா? 508 00:41:36,371 --> 00:41:38,123 ஆம், பேரரசே. 509 00:41:49,801 --> 00:41:53,055 நீ விரும்பிய பதில் அது இல்லை என்று எனக்குத் தெரியும். 510 00:41:54,056 --> 00:41:55,432 நான் வருந்துகிறேன், சகோதரா. 511 00:41:59,978 --> 00:42:03,565 நான் உன் பதவியேற்பு விழாவை மறந்துவிட்டேன், இல்லையா? 512 00:42:06,026 --> 00:42:08,070 - அதை நான் செய்தேன். - நீங்கள் செய்தீர்களா... 513 00:42:09,488 --> 00:42:12,366 அந்த விஷயத்தைச் செய்தீங்களா? அதற்குப் பிறகானதை? 514 00:42:12,866 --> 00:42:13,950 என்ன விஷயம்? 515 00:42:13,951 --> 00:42:18,871 - இல்லை. எங்களுக்கு வேறு, மிக முக்கியமான... - அதைவிட முக்கியமானது என்னவாக இருக்க முடியும்? 516 00:42:18,872 --> 00:42:21,582 அதுதான் மிகவும் முக்கியமானது. 517 00:42:21,583 --> 00:42:22,875 எதைப் பற்றி பேசுகிறீர்கள்? 518 00:42:22,876 --> 00:42:26,004 இங்கே, நாம் அதை இங்கேயே செய்யலாம். அது உங்களிடம் இருக்கிறதா? 519 00:42:27,798 --> 00:42:28,798 என்ன இருக்கிறதா? 520 00:42:28,799 --> 00:42:31,593 அட. இவனுக்காக. 521 00:42:41,687 --> 00:42:43,897 ஏழாம் க்ளியோன் டே ஆனபோது, 522 00:42:44,648 --> 00:42:50,946 அவன் நட்சத்திரங்களிடம் வலிமை, ஞானம், அதோடு மன உறுதியைக் கேட்டான். 523 00:42:51,655 --> 00:42:56,617 ஒரு ஆலோசகர் அவனிடம் மூன்றையும் கொடுத்தார். 524 00:42:56,618 --> 00:42:58,036 உங்களிடம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். 525 00:42:59,288 --> 00:43:00,414 அவரிடம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். 526 00:43:01,415 --> 00:43:02,708 வலிமை. 527 00:43:04,710 --> 00:43:06,044 ஞானம். 528 00:43:08,630 --> 00:43:09,673 மன உறுதி. 529 00:43:14,178 --> 00:43:15,679 வலிமை. 530 00:43:17,347 --> 00:43:18,515 ஞானம். 531 00:43:20,517 --> 00:43:22,019 மன உறுதி. 532 00:43:23,604 --> 00:43:25,022 இப்போது நீ... 533 00:43:26,523 --> 00:43:28,025 கொடு. 534 00:43:29,359 --> 00:43:30,359 குடி. 535 00:43:30,360 --> 00:43:31,778 வலிமை. 536 00:43:33,280 --> 00:43:34,323 ஞானம். 537 00:43:35,532 --> 00:43:37,659 - வலிமை! - மன உறுதி. 538 00:43:41,663 --> 00:43:43,040 கடவுள்களே. 539 00:43:43,832 --> 00:43:44,957 அது என்ன? 540 00:43:44,958 --> 00:43:48,003 ஓ, இல்லை, கடவுள்களால் உனக்கு உதவ முடியாது. அந்த எரிச்சல் நேராக நரகத்திலிருந்து வருகிறது. 541 00:43:53,800 --> 00:43:55,135 அந்த ஞானத்தைக் குடிப்பது. 542 00:43:55,844 --> 00:44:00,556 சரி, அதற்கு பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. நமக்கு இன்னும் கொஞ்சம் ஞானம் தேவை. 543 00:44:00,557 --> 00:44:02,518 எனக்கு இன்னும் கொஞ்சம் மன உறுதி தேவை. 544 00:44:03,602 --> 00:44:05,604 நான் உனக்காக கொஞ்சம் மன உறுதியை வைத்திருக்கிறேன். 545 00:44:17,533 --> 00:44:18,909 ஒளி ஒருபோதும் மங்காமல் இருக்கட்டும். 546 00:44:24,331 --> 00:44:25,582 உனக்கு உன் அரண்மனையை நன்றாகத் தெரியும். 547 00:44:27,793 --> 00:44:32,089 ஸ்டேனலின் பழைய சுவர்கள் நேராக நீர் பாதைகளுக்குக் கூட்டிப்போகும். அவை வெளியேறுவதை மறைக்கலாம். 548 00:44:34,091 --> 00:44:35,801 இதற்கு நீ ஒப்புக்கொண்டதாக அர்த்தமா? 549 00:44:40,222 --> 00:44:41,932 நீங்கள் இருவரும் கிளாவிஜெர்கள் போல உடை அணியுங்கள். 550 00:44:42,766 --> 00:44:44,308 நான் உங்களை அரண்காவல் படையின் வழியாக கூட்டிப்போவேன், 551 00:44:44,309 --> 00:44:46,227 நாம் வெளிப்புற மாவட்டத்துக்கு ஜெட்டில் பயணம் செய்வோம். 552 00:44:46,228 --> 00:44:48,313 அதோடு உன் மகளுக்கு நோய் குணமாகிவிடும். 553 00:44:57,114 --> 00:44:59,366 நீயும் கொஞ்சம் விசுவாசமாக நடந்துகொள். 554 00:45:00,450 --> 00:45:03,078 வஞ்சப்புகழ்ச்சிக்காவே நான் வாழ்கிறேன். 555 00:45:32,191 --> 00:45:35,611 உங்கள் ஒட்டகச்சிவிங்கி கடந்து சென்றுவிட்டது. அதை தவறவிட்டீர்கள். 556 00:45:38,488 --> 00:45:40,365 அதை வேறு மாதிரி அழைக்கப்படும் என்று நினைக்கிறேன். 557 00:45:40,991 --> 00:45:42,326 நீங்கள் சொல்வது தவறு. 558 00:45:43,035 --> 00:45:46,121 பூமியில் படங்களைப் பயன்படுத்திய ஒரு பண்டைய மொழி இருந்தது. 559 00:45:46,788 --> 00:45:49,457 முன் கணிப்பு என்று பொருள்படும் வார்த்தையின் ஒரு பகுதியாக சின்ன ஒட்டகச்சிவிங்கி இருந்தது, 560 00:45:49,458 --> 00:45:51,627 ஏனென்றால், பாதையில் முன்னால் இருப்பதை அவற்றால் பார்க்க முடியும். 561 00:45:52,127 --> 00:45:56,256 அற்புதம். என்னவொரு நம்பமுடியாத கெட்டதை கணிக்கும் ஒரு உயிரினம். 562 00:45:58,425 --> 00:45:59,635 சாங் எங்கே? 563 00:46:00,511 --> 00:46:02,137 அவள் தன் கையைத் தொட்டாள். 564 00:46:03,180 --> 00:46:07,601 அவ்வளவுதான், ஆனால் அதுவே போதுமானதாக இருந்தது. அவளுடைய எதிர்காலம் கணிக்கப்பட்டுவிட்டது. 565 00:46:10,229 --> 00:46:13,732 முன்கையை நீட்டி, இன்னொரு கையின் விரல்களால் தொட்டாள். 566 00:46:14,233 --> 00:46:15,274 அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 567 00:46:15,275 --> 00:46:17,694 சொற்பொருளியலில் எவ்வளவு பாடங்கள். 568 00:46:19,363 --> 00:46:23,199 அது ஒரு மதத்தின் ஆசீர்வாதம். ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. 569 00:46:23,200 --> 00:46:27,120 சாங் பிறந்த, மைகோஜென் பகுதியில், ட்ரான்டோருக்கு உள்ளே 570 00:46:27,829 --> 00:46:29,248 ஆழமாக புதைக்கப்பட்டுவிட்டது. 571 00:46:32,459 --> 00:46:35,754 நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். அவள் உங்களிடம் சொல்லவில்லையா? 572 00:46:38,549 --> 00:46:41,718 அவளுடைய மத நம்பிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சட்டவிரோதமானது. 573 00:46:42,803 --> 00:46:44,721 அவர்கள் அதை மரபுரிமை என்று சொல்கிறார்கள். 574 00:46:46,306 --> 00:46:47,516 அவர்கள் ரோபோக்களை வணங்குபவர்கள். 575 00:46:52,020 --> 00:46:55,439 ஒருநாள், செயற்கை மனிதர்கள் திரும்ப வந்து, எல்லா கொடுமையையும், 576 00:46:55,440 --> 00:46:58,944 அநீதியையும், துயரத்தையும் நீக்குவார்கள் என்று அந்த பிரிவு நம்புகிறது. 577 00:46:59,736 --> 00:47:02,865 அதுதான் அந்த வாக்குறுதி. மரபுரிமை. 578 00:47:04,658 --> 00:47:07,035 அது இன்னும் இருப்பது எனக்குத் தெரியாது. 579 00:47:08,495 --> 00:47:12,916 அதைப் பின்பற்றுவது மரண தண்டனைக்குரிய குற்றம். 580 00:47:17,504 --> 00:47:19,755 - நீ என்ன செய்தாய்? - அவர்களுடைய நம்பிக்கைக்குப் 581 00:47:19,756 --> 00:47:22,593 புதிய உயிரூட்டக்கூடிய ஒன்றை நான் அந்தப் பிரிவிடம் இருந்து பறித்துவிட்டேன். 582 00:47:24,094 --> 00:47:26,388 பல மாதங்களுக்கு முன்பே நான் செய்திருக்க வேண்டியதைச் செய்தேன். 583 00:47:27,472 --> 00:47:29,183 உங்களுடைய சின்ன மகிழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. 584 00:47:32,853 --> 00:47:34,771 நான் அவள் நினைவுகளை அழித்துவிட்டேன். 585 00:47:35,355 --> 00:47:38,025 நீங்கள் அவளிடம் சொன்ன எல்லாம், அல்லது ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதை. 586 00:47:39,776 --> 00:47:40,986 அவள் உயிருடன் இருக்கிறாளா? 587 00:47:42,112 --> 00:47:44,072 நான் அவளை வீட்டிற்கு, மைகோஜெனுக்கு அனுப்பிவிட்டேன். 588 00:47:50,621 --> 00:47:54,291 அது கருணை என்று எடுத்துக்கொண்டு, ஒருவேளை கொஞ்சம் நன்றியுடன் இருங்கள். 589 00:47:54,917 --> 00:47:56,043 நன்றியுடனா? 590 00:47:57,836 --> 00:48:01,256 என்னால் அவளைக் கொன்றிருக்க முடியும், ஆனால் நான் கொல்லவில்லை. 591 00:48:01,924 --> 00:48:03,967 நான் ஏன் அவளை உயிரோடு விட்டேன் தெரியுமா? 592 00:48:05,093 --> 00:48:06,386 உங்களுக்காக. 593 00:48:07,721 --> 00:48:13,519 நான் என் இரகசியத்தைப் பாதுகாத்தாக வேண்டும். என் வாழ்க்கையில் சொற்ப வழிகள்தான் இருக்கின்றன. 594 00:48:17,898 --> 00:48:20,192 உங்களுக்காக, நான் இதைச் செய்தேன். 595 00:48:22,027 --> 00:48:23,529 வெளியே போ. 596 00:48:25,280 --> 00:48:26,657 வெளியே போ! 597 00:50:02,336 --> 00:50:04,338 வசனத் தமிழாக்கம் அருண்குமார் 597 00:50:05,305 --> 00:51:05,247 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm