1 00:00:06,000 --> 00:00:12,074 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm 2 00:00:12,346 --> 00:00:15,515 உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது 3 00:00:15,516 --> 00:00:18,060 ஹவாய்ஈ தீவுகள் 4 00:00:18,894 --> 00:00:22,856 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்தவை 5 00:00:24,608 --> 00:00:28,237 எங்களுடைய தீவுகளின் அழகில் திளைக்கிறார்கள், எங்களுடைய மக்கள். 6 00:00:33,867 --> 00:00:36,119 ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக இல்லை. 7 00:00:41,166 --> 00:00:43,585 கடலினால் எங்கள் நான்கு பேரரசுகளும் இணைக்கப்பட்டிருந்தாலும்... 8 00:00:45,087 --> 00:00:47,296 ஓஆஹூ பேரரசு 9 00:00:47,297 --> 00:00:49,924 மாவீ பேரரசு 10 00:00:49,925 --> 00:00:52,844 காவுவாஈ பேரரசு 11 00:00:52,845 --> 00:00:55,681 ஹவாய்ஈ பேரரசு 12 00:00:56,515 --> 00:01:02,187 ...நயவஞ்சகமான தலைவர்களாலும், சக்தி வாய்ந்த கடவுள்களாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். 13 00:01:05,816 --> 00:01:10,070 நாங்கள் முடிவில்லாத ஒரு போர்ச் சக்கரத்தில் சிக்கியுள்ளோம். 14 00:01:13,574 --> 00:01:15,492 முதுமொழி வாக்கு ஒன்று உள்ளது: 15 00:01:15,993 --> 00:01:23,000 "வானில் ஒரு விண் மீன் தோன்றும், அதுவே, பேரரசுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, 16 00:01:23,584 --> 00:01:28,338 போரை முடிவுக்குக் கொண்டு வரப்போகும் ஒரு பேரரசன் உருவாவற்கான சமிக்ஞை என அறிந்துகொள்ளுங்கள்." 17 00:01:30,299 --> 00:01:32,551 நாங்கள் பல தலைமுறையாகக் காத்திருந்தோம், 18 00:01:33,802 --> 00:01:36,096 கடைசியில் அந்த சமிக்ஞை தோன்றியது. 19 00:01:42,728 --> 00:01:45,981 ஆனால் பேரரசர் எவரும் உருவாகவில்லை. 20 00:02:22,559 --> 00:02:23,559 நிறுத்து! 21 00:02:23,560 --> 00:02:24,686 ஒன்றைக் கண்டுபிடிச்சுட்டோம்! 22 00:02:41,787 --> 00:02:44,331 அது ரொம்ப பெரிசு, காஇயானா. 23 00:02:45,332 --> 00:02:46,500 அது ஒரு சகுனத்தின் அறிகுறி. 24 00:02:54,800 --> 00:02:56,093 ஆவா வேரை தயார் பண்ணு. 25 00:03:00,430 --> 00:03:01,431 அந்த சுருக்குக் கயிற்றை எங்கிட்டக் கொடு, 26 00:03:02,391 --> 00:03:03,392 அதுக்கு ஒரு மீனையும் தயார் பண்ணு. 27 00:03:21,034 --> 00:03:22,619 ஆவாவை ஆழமாக தூக்கி எறி! 28 00:03:40,679 --> 00:03:42,598 இது நல்ல சகுனத்தின் அறிகுறி தானே? 29 00:04:20,677 --> 00:04:23,597 கடல்ல போட்ட அந்த ஆவா வேர், அந்த சுறா மீனை இன்னும் ரொம்ப நேரம் மயக்கத்துல வைக்காது. 30 00:05:00,551 --> 00:05:01,552 கயிறு! கயிறு! 31 00:05:05,848 --> 00:05:06,890 இழு! இழு! 32 00:05:17,568 --> 00:05:18,569 ஆவா! ஆவா! 33 00:05:26,493 --> 00:05:27,494 துடுப்பால தள்ளு! 34 00:05:27,744 --> 00:05:28,745 துடுப்பை வேகமா தள்ளு! 35 00:05:33,458 --> 00:05:36,753 உன் உயிர் தியாகத்தால் உயிர்கள் வாழட்டும். 36 00:05:48,932 --> 00:05:53,145 காவுவாஈ பேரரசு 37 00:06:24,885 --> 00:06:25,886 நிறுத்து! 38 00:06:28,138 --> 00:06:29,139 வெளியே போ! 39 00:06:29,515 --> 00:06:30,807 ஓடுங்கடா, நாய்களா! 40 00:06:33,519 --> 00:06:34,520 என் சாப்பாடு! 41 00:06:36,480 --> 00:06:37,481 ஓடுங்கடா! 42 00:06:56,834 --> 00:07:01,004 கிராமத்துக்காரங்க எல்லோரும் உங்களை ஒதுக்கி வைக்கப்பட்டவன்னு சொல்றாங்க, 43 00:07:02,172 --> 00:07:03,215 காவுவாஈ நாட்டுக்கு அந்நியர்னு சொல்றாங்க. 44 00:07:05,259 --> 00:07:07,803 ஆனால் உங்க தோள்ல போடுற சிறகு அங்கியில மாவீ அரச குடும்பத்தின் நிறங்கள் இருக்கே. 45 00:07:09,179 --> 00:07:10,180 அப்போ நீங்க ஒரு தளபதி. 46 00:07:11,515 --> 00:07:12,724 அப்போ, நீங்க ஏன் இப்படி வாழறீங்க? 47 00:07:14,810 --> 00:07:17,646 அந்த கிராமத்துக்காரங்க நம்மைப் பத்தி சரியாத் தான் சொல்றாங்க, மகனே. 48 00:07:18,814 --> 00:07:22,568 ஆனால் நான் தளபதியும் இல்ல, இனிமேல் மாவீ என் சொந்த நாடும் இல்ல. 49 00:07:28,824 --> 00:07:30,784 அவன் நிஜமாவே உங்களை நேசிக்கிறான். 50 00:07:33,370 --> 00:07:36,081 நீங்க குழந்தைகளுடன் இன்னும் நிறையா பழகணும். 51 00:07:36,707 --> 00:07:37,708 எதுக்கு? 52 00:07:38,250 --> 00:07:39,543 ஏன்னா எனக்கு ஒரு குழந்தை வேணும். 53 00:07:41,336 --> 00:07:45,841 உன் சகோதரிகிட்ட பேசு, காவுவாஈயுடைய வெயில் அவளுக்குத் தாங்கலைன்னு நினைக்கிறேன். 54 00:07:47,551 --> 00:07:50,137 ஒரு குழந்தை இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும். 55 00:07:52,097 --> 00:07:53,098 நாம பெற முடியாது. 56 00:07:54,183 --> 00:07:55,726 நாஹிக்கு குழந்தைகளே பிடிக்காது. 57 00:07:59,980 --> 00:08:01,815 நீங்க சகோதரர்கள் எல்லாம் நல்லா தான் இருப்பீங்க, 58 00:08:03,942 --> 00:08:08,155 நல்ல தந்தையா தான் இருப்பீங்க. 59 00:08:34,097 --> 00:08:35,265 அந்த ஓடம் மாவீயிலிருந்து வருது. 60 00:08:39,269 --> 00:08:40,479 அவங்க நம்மை தேடியா வர்றாங்க? 61 00:08:42,188 --> 00:08:45,108 அது உண்மைன்னா, நமக்கு ஒளிய ஒரு இடம் கூட இல்லை. 62 00:09:03,627 --> 00:09:07,339 காஇயானா, மூணு பருவ காலத்துக்கு முன்னாடி நீ இங்கே அடைக்கலம் கேட்டு வந்தபோது, 63 00:09:08,048 --> 00:09:13,220 காவுவாஈயின் அரசிக்கு மாவீயினரால எந்த பிரச்சினையும் வராதுன்னு வாக்குறுதி கொடுத்த. 64 00:09:15,097 --> 00:09:17,516 அந்த வாக்குறுதியை இப்போ காப்பாத்து. 65 00:09:23,480 --> 00:09:24,982 காஇயானா. 66 00:09:25,732 --> 00:09:28,277 மாவீயின் தலைமை போர் தளபதியின் மகனே, 67 00:09:29,236 --> 00:09:31,613 நீ அரசரின் படையிலிருந்து ஓடி வந்திருப்பவன். 68 00:09:34,491 --> 00:09:39,621 இதுக்காகதான் நீ உன் நிலத்தையும், பட்டத்தையும் விட்டுவிட்டு ஓடி வந்தயா? 69 00:09:43,041 --> 00:09:46,503 உன் அரசருக்கு, அவருடைய சபையில உன் சேவை தேவைப்படுது. 70 00:09:47,838 --> 00:09:49,006 எதுபோன்ற தேவை? 71 00:09:50,215 --> 00:09:53,468 காவுவாஈயின் தலைவர்களுடைய எந்த செயல்கள் எல்லாம் பொறுத்துக்கொள்ளுவாங்கன்னு எனக்குத் தெரியாது, 72 00:09:55,179 --> 00:09:57,806 ஆனால் மாவீயிலிருந்து வந்துள்ள ஒரு அரச தூதரை புறக்கணிப்பது, 73 00:09:58,473 --> 00:10:03,145 பேச வந்த ஒரு மனிதனின் நாவை துண்டிப்பதுக்கு சமானமாகும். 74 00:10:04,104 --> 00:10:05,730 அரசர் காயேகிலியின் கோரிக்கை, 75 00:10:05,731 --> 00:10:10,694 மாவீயின் கடற்கரையில், நாளை நீ எங்களை சந்திக்க வேண்டும். 76 00:10:18,619 --> 00:10:21,413 நீ மாவீயின் படையை விட்டு விலகி போனபோது, 77 00:10:22,206 --> 00:10:25,667 உன் இருதயத்தை துண்டம் துண்டமா வெட்டி, பன்றிகளுக்கு உணவா போடுவேன்னு சபதம் செய்தேன். 78 00:10:26,793 --> 00:10:30,589 உன் அரசரின் கருணையால தான் இன்னைக்கு நீ உயிருடன் இருக்க. 79 00:10:31,590 --> 00:10:34,343 நான்தான் உன்னைக் கண்டுபிடிச்சேன், காஇயானா. 80 00:10:35,135 --> 00:10:38,514 நீ எங்கே ஓடிப் போனாலும், நான் திரும்பவும் உன்னைக் கண்டுபிடிச்சுடுவேன். 81 00:12:27,122 --> 00:12:31,293 மாவீ பேரரசு 82 00:12:37,549 --> 00:12:39,134 அவங்க காத்துட்டு இருக்காங்க. 83 00:12:39,885 --> 00:12:40,969 காத்திருக்கட்டும். 84 00:12:46,391 --> 00:12:47,893 இனிமேல் தாமதிக்கக் கூடாது. 85 00:12:49,728 --> 00:12:52,689 நீங்க அரசருக்கு கொடுக்கும் அன்பளிப்பு தயாராயிடுச்சு. 86 00:13:08,205 --> 00:13:12,626 நீ வருவயா மாட்டாயான்னு இங்குள்ளவங்க சிலர் சந்தேகப்பட்டாங்க. 87 00:13:15,003 --> 00:13:18,006 நான் எதுக்கு இங்கே வந்திருக்கேன், குபுள்ளே? 88 00:13:19,007 --> 00:13:25,055 நீ எங்களை காத்திருக்க வச்ச, இப்போ உன்னை எதுக்குக் கூப்பிட்டாங்கன்னு கேள்வி வேற கேட்குறயா? 89 00:13:25,430 --> 00:13:28,517 எல்லாத்துக்கும் உனக்கு பதில் கிடைக்கத் தான் போகுது, காஇயானா. 90 00:13:28,851 --> 00:13:33,772 எங்க அப்பா உனக்காக போர்க்களத்துல காத்திருக்கார், நான் உன்னை அழைச்சுட்டுப் போக வந்திருக்கேன். 91 00:13:41,321 --> 00:13:45,784 நான் சிறுவனா இருந்தபோது, நீ உன் அப்பாவிடம் பயிற்சி பெறுவதை நான் பார்த்திருக்கேன். 92 00:13:47,578 --> 00:13:51,748 நீ எங்களை முன்னடத்துற வரைக்கும், மாவீப் படை 93 00:13:52,541 --> 00:13:55,961 தோற்கவே தோற்காதுன்னு எனக்கு நல்லா தெரியும். 94 00:13:58,589 --> 00:14:01,425 நீ திரும்பி வந்தது ரொம்ப நல்லது. 95 00:14:02,426 --> 00:14:03,635 நான் திரும்பி வரலை. 96 00:15:47,823 --> 00:15:52,786 தன் பணியிலிருந்து விலகி ஓடிப் போன ஒரு தளபதி நாயை வரவேற்க தகுந்த வரவேற்பு தான். 97 00:15:53,412 --> 00:15:55,205 ஈட்டியின் முனைகள் மழுங்கிடுச்சா? 98 00:15:56,123 --> 00:15:59,334 பழைய முறையில அவங்களுக்கு பயிற்சி தருவதில்லையா? 99 00:16:00,085 --> 00:16:02,629 அப்படி செய்யாம போனா, நூயி எங்க ஆட்களை கிழிச்சு போட்டுவிடுவான். 100 00:16:03,130 --> 00:16:06,925 சண்டையில அவனை வெல்வதை விடு, அவனுடைய ஈட்டிகளைத் தாண்டி 101 00:16:07,301 --> 00:16:10,012 யாராலும் அவனை நெருங்கவே முடியாது. 102 00:16:31,950 --> 00:16:32,951 பாருங்க! 103 00:16:33,911 --> 00:16:35,537 காஇயானா இப்போது நூயியுடன் பழைய முறையிலே மோதுவான், 104 00:16:36,288 --> 00:16:37,456 அதுவே போராட சரியான முறை. 105 00:16:39,124 --> 00:16:40,709 போர் முனை ஈட்டிகளை கொண்டு வாங்க! 106 00:18:09,131 --> 00:18:11,925 வானத்தைப் பிளக்கக்கூடியது இடி மட்டும்தான். 107 00:18:12,301 --> 00:18:13,802 எனவே நாங்கள் வானத்தை நடுங்கச் செய்யும் 108 00:18:14,469 --> 00:18:17,931 கடவுளின் குரலின் முன் எங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்குகிறோம். 109 00:18:37,451 --> 00:18:39,453 இந்த சடங்குகள் எல்லாம் போதும். 110 00:18:40,370 --> 00:18:42,372 எழுந்திரு காஇயானா. 111 00:18:43,332 --> 00:18:46,084 உன் பெரியப்பாவுடன் உனக்குள்ள பந்தத்தைக் காட்டு. 112 00:18:50,881 --> 00:18:55,302 ஈட்டிகள் எல்லாம் உன்னை காத்து மாதிரி தடவி கொடுத்துட்டுப் போகுது. 113 00:18:55,969 --> 00:18:58,680 உன் தந்தையைப் போலவே இருக்க. 114 00:18:59,306 --> 00:19:05,521 உன் தந்தை, என் தலைமை போர் தளபதியா இருந்து, பல முறை என் பேரரசைப் பாதுகாத்திருக்கார், 115 00:19:06,271 --> 00:19:10,275 எனவே அவர் இல்லாததை, நான் தினம்தோறும் ரொம்ப உணர்கிறேன். 116 00:19:11,276 --> 00:19:12,401 நமாக்கே! 117 00:19:12,402 --> 00:19:13,487 நாஹி! 118 00:19:14,196 --> 00:19:15,197 நான் உங்க பிரிவால வாடினேன். 119 00:19:19,409 --> 00:19:24,873 காஇயானா உங்க அப்பாவைப் போல சண்டை போடலாம், 120 00:19:26,083 --> 00:19:31,255 ஆனால் உங்க அப்பா அவனுடைய உருவத்தை உனக்குத் தான் தந்திருக்கார்... 121 00:19:33,090 --> 00:19:36,218 ...எனக்கு அதைப் பார்க்க முடியாததுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. 122 00:19:38,679 --> 00:19:44,852 நீ திரும்பவும் எங்களுடன் வந்து சேர்ந்து, எங்களை கௌரவப்படுத்து. 123 00:19:48,021 --> 00:19:51,650 நீங்க கோரிக்கை அனுப்பியதால வந்தோம், 124 00:19:52,943 --> 00:19:57,489 ஆனால் நாங்க திரும்பவும் காவுவாஈயின் அமைதிக்கு திரும்பிடுவோம். 125 00:20:02,286 --> 00:20:03,620 அற்புதம். 126 00:20:06,373 --> 00:20:09,585 நீ கவலைப்பட வேண்டாம், காஇயானா. 127 00:20:11,378 --> 00:20:14,631 என் படையை விட்டு நீ விலகிப் போனதுக்கு, உனக்குத் தனிப்பட்ட காரணங்கள் இருந்தது. 128 00:20:16,133 --> 00:20:17,968 அதுக்கான உன்மேல எனக்கு விரோதம் எதுவும் இல்லை. 129 00:20:18,468 --> 00:20:19,511 என்னுடன் வா. 130 00:20:47,956 --> 00:20:50,751 எதுக்கு எங்களை வரச் சொன்னீங்க? 131 00:20:51,960 --> 00:20:55,088 நம்ம பேரரசுக்கு பெரிய ஆபத்து வரப் போகுது. 132 00:20:56,423 --> 00:20:58,842 ஓஆஹூ ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தால 133 00:20:59,343 --> 00:21:02,720 நம்ம மக்கள் அடிமையாகி அவதிப்படப் போறாங்கன்னு 134 00:21:02,721 --> 00:21:04,765 நம்ம சித்தர்கள் ஆரூடம் சொல்லியிருக்காங்க. 135 00:21:07,309 --> 00:21:12,731 அவங்க படை பலம் நம்முடைய படையைவிட ரெண்டு மடங்கு பெரிசுன்னு நம்ம ஒற்றர்கள் சொல்றாங்க. 136 00:21:13,732 --> 00:21:18,028 ஓஆஹூ எதுக்காக உங்க மேல போர் தொடுக்கும்? 137 00:21:18,987 --> 00:21:21,782 அரசர் ஹஹானா வெறும் ஒரு சிறுவர் தான். 138 00:21:22,074 --> 00:21:25,868 அவர் எப்போதுமே அரசர் காயேகிலிக்கு விசுவாசமா இருப்பதாக உறுதி கூறியிருக்கார், 139 00:21:25,869 --> 00:21:29,665 மேலும் மாவீ அவருடைய பேரரசுக்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கலையே. 140 00:21:30,832 --> 00:21:33,626 ஓஆஹூவின் அரச குரு ரொம்ப ஆபத்தான மனிதர், 141 00:21:33,627 --> 00:21:37,840 அதோட அவர் அந்த இளம் அரசரின் மனசை கெடுத்து வச்சிருக்கார். 142 00:21:39,216 --> 00:21:42,052 இப்போ அவர் நம்ம பேரரசைப் பிடிக்க முனைகிறார். 143 00:21:43,303 --> 00:21:45,305 அரசர்களுக்கு போர் செல்வாக்கை சேர்க்கும் 144 00:21:45,639 --> 00:21:49,268 ஆனால் அப்பாவி மக்களுக்கு மரணத்தைக் கொடுக்கும். 145 00:21:50,435 --> 00:21:52,896 நாங்க இனி கொலை செய்ய மாட்டோம். 146 00:21:55,232 --> 00:21:57,150 பொறு, காஇயானா. 147 00:21:59,111 --> 00:22:02,322 இது முதுமொழி வாக்கு சம்பந்தப்பட்டது. 148 00:22:09,454 --> 00:22:13,792 முதுமொழி வாக்கு நம்மை குறிப்பதுதான். 149 00:22:15,711 --> 00:22:18,796 நம்ம அரச குரு அவருடைய தீர்க்கதரிசனத்தில் 150 00:22:18,797 --> 00:22:20,924 உன் பெயரைதான் மொழிந்துள்ளார். 151 00:22:21,758 --> 00:22:24,386 நீ என்னுடன் போரிட்டால்தான், 152 00:22:25,387 --> 00:22:29,432 நாம ஓஆஹூ ராஜ்ஜியத்தை வெல்ல முடியும்னு 153 00:22:29,433 --> 00:22:32,895 சகுனங்கள் எல்லாம் தெளிவா காட்டுது, காஇயானா. 154 00:22:46,950 --> 00:22:49,661 காயேகிலி போரில் கலந்துக்க நம்மை அழைச்சிருக்கார். 155 00:22:53,957 --> 00:22:55,792 நீங்க ஒத்துக்கிட்டீங்களா? 156 00:22:58,587 --> 00:23:02,591 முன்னாடியே ஒரு முறை அவருடைய படையை விட்டு விலகி வந்து அவரை சோதனைக்கு ஆளாக்கிட்டோம். 157 00:23:03,800 --> 00:23:05,385 அவர் அப்படி திரும்பவும் நடக்க விடமாட்டார். 158 00:23:06,762 --> 00:23:11,308 அப்போ நாம மீண்டும் காவுவாஈயிக்கே திரும்பிப் போக ஏற்பாடுகளை செய்வோம். 159 00:23:11,767 --> 00:23:13,101 நாம திரும்பவும் ஓடிப் போகப் போறாமா? 160 00:23:13,644 --> 00:23:15,646 மாவீ தான் நம்ம சொந்த ஊர், காஇயானா. 161 00:23:18,482 --> 00:23:20,651 இதுதான் நாம திரும்பிப் போக, நமக்குக் கிடைத்த வாய்ப்பு. 162 00:23:20,943 --> 00:23:26,156 தேவையில்லாத இன்னொரு போரில் பங்கெடுக்க நான் இந்த குடும்பத்தை வழிநடத்த மாட்டேன். 163 00:23:26,490 --> 00:23:31,911 குபுள்ளே சொன்னது உண்மையா இருந்து, இந்த முதுமொழி வாக்கு நமக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால்? 164 00:23:31,912 --> 00:23:35,040 நாம அதுக்காகத் தானே இவ்வளவு நாளும் காத்திருந்தோம்? 165 00:23:35,457 --> 00:23:36,917 அமைதி கிடைக்க ஒரு வழியைத் தானே தேடினோம்? 166 00:23:37,626 --> 00:23:41,004 அரசர் காயேகிலி ஒருநாளும் அமைதிப் பாதையில போனதில்லை. 167 00:23:41,713 --> 00:23:44,383 காயேகிலியால பேரரசுகளை ஒண்ணு சேர்க்க முடியும், 168 00:23:44,716 --> 00:23:47,094 ஒருவேளை முதுமொழியின் வாக்குப்படி அவர்தான் அந்த பேரரசராக இருக்கலாமே. 169 00:23:47,302 --> 00:23:49,847 அது கண்டிப்பா காயேகிலி இல்லை. 170 00:24:47,613 --> 00:24:48,822 காஇயானா. 171 00:24:57,539 --> 00:24:59,041 நீங்க தனியாவா வந்தீங்க? 172 00:24:59,583 --> 00:25:02,419 எனக்கு இங்கே பாதுகாப்பு எதுக்குத் தேவைப்படப் போகுது? 173 00:25:03,754 --> 00:25:06,840 உங்க அப்பா எனக்கு உற்ற நண்பரா இருந்தார். 174 00:25:08,592 --> 00:25:11,053 எங்களுக்குள்ள வேறுபாடுகள் இருந்தாலும், 175 00:25:12,804 --> 00:25:15,265 நான் எப்போதுமே உங்களை எல்லாம் என் குடும்பமா தான் நினைச்சிருக்கேன். 176 00:25:16,850 --> 00:25:19,603 நான் உனக்கு ஒண்ணு காட்ட விரும்புறேன். 177 00:25:22,231 --> 00:25:26,902 நீ ஏன் என் படையை விட்டுப் போனன்னு எனக்குத் தெரியும், காஇயானா. 178 00:25:28,487 --> 00:25:32,699 நான் பேரையும் புகழையும் என் மக்களைவிட பெரிசா நினைச்சுட்டேன், 179 00:25:33,450 --> 00:25:36,161 என் பேராசைக்கு பலர் இரையாகி, உயிரிழந்தாங்க, 180 00:25:37,496 --> 00:25:40,082 அதுல உன் தந்தையும் ஒருவர். 181 00:25:41,333 --> 00:25:43,836 ஆனால் ஓஆஹூவுடன் நடக்கப் போகும் இந்த போர், வித்தியாசமா இருக்கும். 182 00:25:45,838 --> 00:25:47,798 நாம எப்போதுமே இது போன்ற போர்களை தான் நடத்தியிருக்கோம். 183 00:25:48,841 --> 00:25:50,843 நம்ம பேரரசுகள் ஒன்றை ஒன்று ஆளும். 184 00:25:52,010 --> 00:25:54,596 இல்லை, இது முதுமொழி வாக்கு. 185 00:25:57,015 --> 00:26:02,479 சித்தரின் முதுமொழியில் சொல்லப்பட்டவர், "எரியும் விண் மீன் தோன்றும்போது உதிப்பார், 186 00:26:02,980 --> 00:26:06,567 தெய்வங்களுக்குரிய புனித தோளங்கியை அணிந்திருப்பார்," என்றுள்ளது. 187 00:26:07,901 --> 00:26:11,446 நான் அப்போது சிறுவன்தான், ஆனால் நாங்க எல்லோரும் அந்த சமிக்ஞையைப் பார்த்தோம். 188 00:26:12,322 --> 00:26:14,950 இருந்தாலும் எந்த அரசரும் உதிக்கவில்லையே. 189 00:26:15,659 --> 00:26:17,411 நானும் அதைத் தான் நினைத்தேன், காஇயானா. 190 00:26:20,122 --> 00:26:23,166 ஆனால் நான் வணங்குற தெய்வம், எனக்கு ஒரு தரிசனத்தைத் தந்தது. 191 00:26:31,717 --> 00:26:33,594 இது என்னது? 192 00:26:34,887 --> 00:26:37,306 நான் இதை உங்கிட்ட காட்டாம இருந்திருப்பேன், 193 00:26:38,098 --> 00:26:42,603 ஆனால் இதை பார்க்க உனக்கு உரிமை இருக்கு. 194 00:27:01,747 --> 00:27:03,081 பழைய வழக்கப்படி, 195 00:27:03,832 --> 00:27:06,919 ஓஆஹூவின் அரச குரு, ஒரு எதிரிப் படையின் 196 00:27:07,211 --> 00:27:10,255 தலைமை தளபதியின் எலும்புகளை எடுத்து, 197 00:27:11,131 --> 00:27:13,175 அவருடைய போருக்கான பூஜை செய்யும் ஆலயத்தில் அதை காணிக்கையாக படைத்துள்ளார். 198 00:27:16,470 --> 00:27:18,472 உன் தந்தையுடையது. 199 00:27:19,139 --> 00:27:21,099 நாங்கள் அவர்களைத் தடுத்தோம், 200 00:27:21,934 --> 00:27:26,355 ஆனால் அதுக்கு முன்னாடியே அவங்க அந்த எலும்புகளை சிதைச்சுட்டாங்க. 201 00:27:27,564 --> 00:27:30,734 நீ அவருக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்யத் தான் அதை நான் உங்கிட்ட கொடுக்குறேன். 202 00:27:32,736 --> 00:27:35,656 சகுனங்கள் தெளிவாத் தெரியுது, காஇயானா. 203 00:27:36,490 --> 00:27:42,246 முதுமொழி வாக்கு, ஒரு அரசன் உதயமாவான்னு சொல்லலை, 204 00:27:42,996 --> 00:27:46,667 அது ஒரு தருணம் வரப் போவதைத் தான் முன்கூட்டியே சொல்லியிருக்கு. 205 00:27:49,086 --> 00:27:51,129 அந்தத் தருணம் இதுதான். 206 00:27:52,548 --> 00:27:57,845 என் தோள்களை அலங்கரிக்கும் அங்கி நீதான், நான்தான் அந்த எரியும் விண் மீன். 207 00:28:01,849 --> 00:28:05,811 நாம ரெண்டு பேரும் சேர்ந்து, இந்தத் தேவையற்ற சண்டையையும், ஓயாத சச்சரவையும் 208 00:28:06,562 --> 00:28:08,272 முடிவுக்கு கொண்டு வருவோம். 209 00:28:10,065 --> 00:28:11,316 மாவீக்குத் துணயாக இருந்து, 210 00:28:12,818 --> 00:28:15,320 என்னுடன் போர் செய். 211 00:30:02,511 --> 00:30:04,221 தவுலா. 212 00:30:07,057 --> 00:30:11,019 குழம்பியிருக்கும் ஒரு மனிதன் தனக்கும், தன்னை பின்தொடர்பவர்களுக்கும் 213 00:30:11,603 --> 00:30:14,439 ஆபத்தை விளைவிப்பவன். 214 00:30:17,192 --> 00:30:19,736 அரசர் தான் உன்னை அனுப்பினாரா? 215 00:30:20,988 --> 00:30:24,241 நான் தெய்வங்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பேன். 216 00:30:24,908 --> 00:30:28,829 உன் செல்வத்தைத் தேடியோ, உன் ஆரூடங்களைக் கேட்கவோ நான் இங்கே வரலை. 217 00:30:29,496 --> 00:30:34,626 அப்படியிருந்தும், தெய்வங்கள் உனக்கானப் பாதையை எனக்குக் காட்டியுள்ளார்கள். 218 00:30:36,170 --> 00:30:41,592 முதுமொழி வாக்கு நிறைவேறுவதை நீ காணத் தான் போகிறாய், காஇயானா, 219 00:30:42,217 --> 00:30:45,512 அதோடு, அருளப்பட்டவரின் பக்கம் தான் நீ இருப்பாய். 220 00:30:47,389 --> 00:30:50,893 பாதை இருண்டதாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது, 221 00:30:51,643 --> 00:30:54,313 ஆனால் நீ அந்தப் பாதையில் தனித்துப் போக மாட்டாய். 222 00:30:56,648 --> 00:30:57,649 நீ பேசுறது எல்லாம் புதிரா இருக்கு. 223 00:30:58,901 --> 00:31:02,196 தெய்வங்கள் காட்டுவதை மட்டும்தான் என்னால பார்க்க முடியும். 224 00:31:03,071 --> 00:31:04,823 அதுக்கு அதிகமாவோ, குறைவாகவோ பார்க்க முடியாது. 225 00:31:05,866 --> 00:31:08,952 பாதையை கண்டுபிடிக்க வேண்டியது உன் கடன். 226 00:31:09,870 --> 00:31:12,539 உன் தந்தையின் வழிகாட்டலின்படி செல், காஇயானா, 227 00:31:13,290 --> 00:31:15,125 அந்த பாதையில் பின்தொடர்ந்து போ. 228 00:31:52,120 --> 00:31:54,831 உங்க சகோதரர்கள் உங்களை தேடுறாங்க. 229 00:31:56,542 --> 00:31:58,168 ஏதோ நடந்திருக்கு. 230 00:32:02,756 --> 00:32:04,633 உங்க மனசுல ஏதோ ஓடுதுன்னு தெளிவா தெரியுது. 231 00:32:05,300 --> 00:32:06,885 எப்போதுமே அப்படித்தான். 232 00:32:07,594 --> 00:32:10,889 உங்களால ரகசியங்களை வச்சுக்க முடியாது, உங்க கண்களே காட்டிக்கொடுத்துடும். 233 00:32:12,766 --> 00:32:14,977 நான் தவுலாவை பார்த்தேன். 234 00:32:17,187 --> 00:32:18,397 அந்த ஆரூடம் சொல்றவளையா? 235 00:32:19,606 --> 00:32:21,233 அவள் எங்கிட்ட 236 00:32:22,192 --> 00:32:24,736 என் அப்பாவுடைய வழிகாட்டலின்படி நடக்கச் சொன்னா, 237 00:32:26,405 --> 00:32:28,991 ஆனால் அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்குப் புரியல. 238 00:32:31,743 --> 00:32:36,248 இளவரசர் குபுள்ளே உங்க அப்பாவின் பொருட்களை வீரர்களிடம் கொடுத்து அனுப்பியிருக்கார். 239 00:32:40,794 --> 00:32:42,880 உங்க அப்பாவுடைய வழிகாட்டல்... 240 00:32:44,548 --> 00:32:46,758 ஒருவேளை அரசர் காயேகிலியின் சித்தர்கள் சொன்னது சரியா இருக்கலாம், 241 00:32:47,634 --> 00:32:50,303 ஒருவேளை, நம்ம மக்கள் இவ்வளவு நாளும் காத்துட்டு இருக்குற அந்த முதுமொழி வாக்கை 242 00:32:50,304 --> 00:32:52,723 நிறைவேற்ற உங்க பங்கு தேவையாக இருக்கலாம். 243 00:32:54,933 --> 00:32:59,437 நாம தளபதிகளையும், போர் வீரர்களையும், சாதாரண மக்களையும் கொன்னு குவிச்சிருக்கோம், 244 00:32:59,438 --> 00:33:02,232 எல்லாம் இந்த குழம்பியிருக்கும் அரசருக்காக. 245 00:33:03,483 --> 00:33:05,902 நாம இதைச் செய்தால், 246 00:33:05,903 --> 00:33:08,237 மீண்டும் நான் காயேகிலியின் சேவையில் இருப்பவனா ஆயிடுவேன். 247 00:33:08,238 --> 00:33:10,698 நீங்க முதுமொழி வாக்கை நிறைவேற்றும் சேவையிலும் 248 00:33:10,699 --> 00:33:12,075 உங்க மக்களுக்கான சேவையிலும் இருப்பீங்க. 249 00:33:13,368 --> 00:33:15,162 நீங்க எப்போதுமே அதைத் தான் செய்திருக்கீங்க. 250 00:33:17,414 --> 00:33:20,000 உங்க அப்பாவுடைய "கை" வழிகாட்டுது, 251 00:33:23,754 --> 00:33:25,506 நீங்கதான் முடிவு செய்யணும். 252 00:34:48,463 --> 00:34:49,672 எனவே நீ வந்துவிட்டாய். 253 00:34:50,716 --> 00:34:54,636 எனக்கு பிடிச்ச சுவையில, என் பணியாளர்கள் யாரும் இந்த வாதுமைக் கொட்டைப் பருப்பு செய்யறது இல்லை. 254 00:34:55,304 --> 00:34:57,681 நானே அந்த பருப்புக் கொட்டைகளை சேர்த்து வைக்க வேண்டியிருக்கு. 255 00:35:01,268 --> 00:35:04,980 நாம அதிக இரத்தம் சிந்தாமலும், அந்த இளவரசரை கொல்லாமலும், 256 00:35:05,480 --> 00:35:07,608 ஓஆஹூ ராஜ்ஜியத்தை கைபற்ற முடியும். 257 00:35:08,734 --> 00:35:11,527 ஓஆஹூ மீது படையெடுக்கணுமா? 258 00:35:11,528 --> 00:35:17,326 நீங்க உங்க போர் வீரர்களை வைக்கீகிக்குக் கொண்டு செல்லுங்கள், ஆனால் தாக்க வேண்டாம். 259 00:35:19,411 --> 00:35:22,414 ஓஆஹூ படை வீரர்கள், அவர்களுடைய கடற்கரையை பாதுகாக்க ஒன்றுகூடுவார்கள். 260 00:35:23,665 --> 00:35:24,708 அப்போ நீ? 261 00:35:25,000 --> 00:35:27,419 நான் கிழக்கே உள்ள வலுவான படையை தாக்குவேன், 262 00:35:28,003 --> 00:35:31,381 அங்கே அடைக்கல ஆலயத்தில் இருக்குற அரச குருவை கைப்பற்றுவேன். 263 00:35:33,258 --> 00:35:37,095 ஆலயம் கைப்பற்றப்படும்போது, இளவரசர் தன்னால சரண் அடைவார். 264 00:35:38,805 --> 00:35:43,018 இதுதான் முதுமொழியுடைய வாக்கின் பொருள் என்றால், அது ஓஆஹூவை தோற்கடிப்பதிலிருந்து தொடங்கட்டும். 265 00:36:18,929 --> 00:36:21,348 உனக்கு மையிலே இலை எங்கே கிடைத்தது? 266 00:36:21,890 --> 00:36:24,351 நான் நேத்து இரவு அந்தப் பள்ளத்தாக்கு வரை போனேன். 267 00:36:24,852 --> 00:36:28,522 உங்களை பத்திரமா வச்சுக்கும்படி தெய்வங்களை வேண்டினேன். 268 00:36:29,731 --> 00:36:35,696 நீங்க அதை கழுத்துல போட்டுக்க அந்த புனிதமான இலைகளை மாலையா தோடுத்தேன். 269 00:36:44,621 --> 00:36:47,332 நீ இங்கே பாதுகாப்பா இருப்பாய், சகோதரி. 270 00:36:55,757 --> 00:37:01,930 ஓஆஹூவை கைப்பற்றிய உடனே நாங்க திரும்பி வந்துடுவோம். 271 00:38:02,908 --> 00:38:07,079 ஓஆஹூ பேரரசு 272 00:38:23,637 --> 00:38:24,638 முன்னேறுங்கள்! 273 00:38:25,973 --> 00:38:27,099 முன் செல்லுங்கள். 274 00:38:49,413 --> 00:38:50,455 முன் செல்லுங்கள். 275 00:39:06,430 --> 00:39:08,557 ஈட்டிகளை மழையாகப் பொழியுங்கள்! 276 00:39:14,229 --> 00:39:15,355 கவண்கயிறுகளை இழுத்துப் பறக்க விடுங்க! 277 00:41:46,673 --> 00:41:48,509 நாம கடற்கரையை கைப்பற்றிவிட்டோம்! 278 00:41:52,638 --> 00:41:53,805 காயப்பட்டவர்களை கவனி. 279 00:41:54,681 --> 00:41:55,682 ஜாக்கிரதையா இருங்க. 280 00:41:58,685 --> 00:42:01,021 அரசர் கடற்கரைக்கு வர, இன்னும் பாதுகாப்பு போதாது. 281 00:42:01,230 --> 00:42:04,399 நாம அந்த ஆலயத்துக்குப் போய், அந்த அரச குருவைக் கண்டுபிடிக்கணும். 282 00:43:19,641 --> 00:43:20,726 இது மண்ணைத் தோண்டுவதற்கான கடப்பாரை. 283 00:43:21,268 --> 00:43:24,855 இவர்கள் போர் வீரர்கள் இல்லை. அவர்கள் விவசாயிகள். 284 00:43:45,375 --> 00:43:47,252 போர் முழக்கம் முழங்கட்டும்! 285 00:43:55,469 --> 00:43:57,095 அரசர் வருகிறார். 286 00:43:57,596 --> 00:43:59,389 அவர் இங்கே இருக்கக்கூடாதே. 287 00:45:12,921 --> 00:45:14,047 அவங்க எல்லோரையும் கொல்லுங்க. 288 00:45:15,424 --> 00:45:18,552 இது தான் அடைக்கல ஆலயம், என் அரசே. 289 00:45:19,052 --> 00:45:21,388 இது ஒரு சரணாலயம், அதோடு இடுகாடும் கூட. 290 00:45:22,306 --> 00:45:26,310 அப்படின்னா, அவங்க சடங்களை அதிக தூரம் கொண்டு போகும் அவசியம் இராது. 291 00:45:26,643 --> 00:45:27,644 போங்க! 292 00:46:02,554 --> 00:46:04,473 வெற்றி முழக்கம் முழங்கட்டும். 293 00:46:39,716 --> 00:46:41,969 நீங்க அரச குருவை கண்டுபிடிச்சுட்டீங்களா? 294 00:46:43,345 --> 00:46:46,098 இளவரசரைப் பிடிச்சுட்டோம். 295 00:47:22,176 --> 00:47:26,138 நீங்க எதுக்காக எங்க பேரரசை தாக்கினீங்க? நீங்க எனக்கு தந்தையைப் போலதானே. 296 00:47:28,640 --> 00:47:31,143 நான் உங்களைப் போல ஒரு பெரிய அரசரா வரணும்னு விரும்பினேனே, 297 00:47:32,895 --> 00:47:34,271 இடியின் மைந்தரே. 298 00:47:35,814 --> 00:47:37,649 எனக்கு மட்டும்தான் 299 00:47:38,358 --> 00:47:41,862 இடியின் குரலைக் கேட்கும் தகுதியிருக்கு. 300 00:48:09,431 --> 00:48:11,266 நன்றி, காஇயானா. 301 00:48:13,477 --> 00:48:16,355 என் சித்தர்கள் சொன்னது போலவே, 302 00:48:17,022 --> 00:48:19,983 நீ எனக்கு ஓஆஹூ பேரரசைக் கொடுத்திருக்கிறாய். 303 00:48:21,151 --> 00:48:22,861 அது எனக்குரியது. 304 00:48:23,529 --> 00:48:26,281 ஓஆஹூவின் அரச குரு எங்கே? 305 00:48:27,616 --> 00:48:31,286 அவனைப் பற்றி எனக்குக் கவலையில்லை, இது உன்னைப் பற்றியது. 306 00:48:33,080 --> 00:48:35,040 அனைத்து சகுனங்களும், தெய்வங்களும் 307 00:48:36,041 --> 00:48:39,419 இதைச் செய்ய உன்னையே தேர்ந்தெடுத்தனர். 308 00:48:39,795 --> 00:48:41,295 இப்படி செய்திருக்க அவசியமில்லை. 309 00:48:41,296 --> 00:48:44,341 இது பேரரசை இழிவுபடுத்தியுள்ளது, 310 00:48:45,133 --> 00:48:49,012 அவர்களுடைய எலும்புகளை... என் தந்தையின் எலும்புகளைப் போலவே. 311 00:48:49,263 --> 00:48:51,640 இதுதான் முதுமொழி வாக்கு, 312 00:48:52,474 --> 00:48:57,478 ஒன்றாக இணைந்து, விண் மீனும், தோள் அங்கியும், 313 00:48:57,479 --> 00:49:00,107 மற்ற எல்லா பேரரசுகளையும் விட மேலோங்கி நிற்கும், 314 00:49:00,941 --> 00:49:03,735 அவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும். 315 00:49:09,616 --> 00:49:10,617 காஇயானா. 316 00:49:11,869 --> 00:49:14,788 என் தந்தை நம்மிருவரிடமும் பொய் சொல்லியிருக்கார். 317 00:49:15,205 --> 00:49:18,791 நம் படையெடுப்பில் உள்ள உண்மையைப் பத்தி 318 00:49:18,792 --> 00:49:20,836 அந்த ஆலயத்தை கைப்பற்றியதுக்கு பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன். 319 00:49:21,170 --> 00:49:24,131 ஓஆஹூவின் சாபம் உன் தந்தையின் மேல விழுந்திருக்கு. 320 00:49:25,257 --> 00:49:26,258 நம்ம மேலயும் தான்! 321 00:49:34,099 --> 00:49:35,559 அவன் மீது ஒரு கண் வையுங்கள். 322 00:49:36,518 --> 00:49:39,229 ஆனால் என்னை கேட்காம எந்த செயலையும் செய்ய வேண்டாம். 323 00:49:59,166 --> 00:50:01,334 ச்சே, அவங்களைப் பார்க்காதீங்க, காஇயானா, 324 00:50:01,335 --> 00:50:02,461 என்னைப் பாருங்க. 325 00:50:04,505 --> 00:50:06,590 நாம ஒரு குடும்பமா வந்தோம், 326 00:50:07,674 --> 00:50:10,344 எது வந்தாலும் நாம ஒரு குடும்பமாவே ஒண்ணா சந்திப்போம். 327 00:51:18,620 --> 00:51:20,622 தமிழாக்கம் அகிலா குமார் 327 00:51:21,305 --> 00:52:21,407