"Foundation" Shadows in the Math

ID13192177
Movie Name"Foundation" Shadows in the Math
Release Name Foundation.S03E02.1080p.WEB.h264-ETHEL[tam]
Year2025
Kindtv
LanguageTamil
IMDB ID32429238
Formatsrt
Download ZIP
1 00:00:06,000 --> 00:00:12,074 Do you want subtitles for any video? -=[ ai.OpenSubtitles.com ]=- 2 00:01:07,693 --> 00:01:09,570 ஐசக் அஸிமோவின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 3 00:02:40,786 --> 00:02:44,081 எழுந்திருங்கள், ஸ்லீப்பர். முதல் ஸ்பீக்கர் உங்களை வீட்டிற்கு வரவேற்கிறேன். 4 00:02:44,831 --> 00:02:46,083 தாலிஸ். 5 00:02:46,166 --> 00:02:49,711 நீங்கள் ஒரு வருடமாக தூக்கத்தில் இருந்தீர்கள். எல்லாம் உங்கள் திட்டப்படி நடந்தது. 6 00:02:57,219 --> 00:02:58,804 எழுந்திருங்கள், ஹேரி செல்டன். 7 00:03:07,813 --> 00:03:10,482 இரண்டாவது ஃபவுண்டேஷன் உங்களை வரவேற்கிறது. 8 00:03:19,199 --> 00:03:20,242 151 ஆண்டுகளுக்கு முன்பு 9 00:03:20,325 --> 00:03:22,870 ஹேரியும் நானும் ஒருவழியாக இக்னிஸில் இரண்டாவது ஃபவுண்டேஷனை நிறுவினோம். 10 00:03:22,953 --> 00:03:24,830 ஆனால் இழந்த நேரத்தை ஈடுசெய்ய நாங்கள் நிறைய செய்ய வேண்டியிருந்தது. 11 00:03:26,456 --> 00:03:31,003 திட்டம் பெருமளவில் திசை மாறிவிட்டது. அதைச் சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும். 12 00:03:32,004 --> 00:03:34,673 நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சில வாரங்களைத் தவிர மற்ற எல்லா நேரமும் கிரையோஸ்லீப்பில் இருப்போம். 13 00:03:35,257 --> 00:03:37,259 எழுந்திருங்கள், ஸ்லீப்பர். இன்னொரு ஆண்டு கடந்துவிட்டது. 14 00:03:37,342 --> 00:03:41,597 நாங்கள் விழித்திருக்கும்போது, உளவியல் வரலாறு பற்றி மென்டாலிக்ஸுக்கு ஹேரி கற்பிப்பார். 15 00:03:41,680 --> 00:03:44,308 வெகுஜன நடவடிக்கை மூலம் நிகழ்வுகளை மாற்றுதல். 16 00:03:44,391 --> 00:03:49,563 வரலாற்றின் போக்கை மாற்றுவது, அதுதான் உளவியல் வரலாறின் நிஜ சக்தி. 17 00:03:49,646 --> 00:03:53,066 அவர்களின் சக்திகளை வைத்து எப்படி மியூலுடன் போராடுவது என்று நான் அவர்களுக்குக் கற்பிப்பேன். 18 00:03:56,361 --> 00:03:59,406 ஆண்டுகள் செல்ல செல்ல, டெல்லமின் குழந்தைகளாக இருந்த நாங்கள் 19 00:03:59,489 --> 00:04:01,742 கால ஓட்டத்தில் சுழலும் கத்திகளாக பரிணமித்திருக்கிறோம். 20 00:04:01,825 --> 00:04:03,744 இல்லை. வேண்டாம். மண்டியிடாதீர்கள். 21 00:04:03,827 --> 00:04:06,288 நம்முடைய மத சகாப்தம் முடிந்துவிட்டது. 22 00:04:06,371 --> 00:04:07,873 நாங்கள் எங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி, 23 00:04:07,956 --> 00:04:11,376 எங்களைப் போன்ற மற்ற மென்டாலிக்ஸ்களைத் தேடினோம், எங்கள் எண்ணிக்கையை அதிகரித்தோம். 24 00:04:12,586 --> 00:04:16,173 சீக்கிரத்திலேயே, விண்மீன் மண்டலத்தின் எல்லா இடத்திலும் எங்களைப் பின்பற்றுபவர்கள் இருந்தார்கள். 25 00:04:16,255 --> 00:04:19,718 முதல் ஃபவுண்டேஷன் வலுவாக வளர்வதை உறுதிசெய்ய இரகசியமாக செயல்பட்டோம், 26 00:04:19,801 --> 00:04:23,722 அதோடு திட்டத்தின் ஆரம்ப போக்கிற்கு ஏற்ப பேரரசு பலவீனமடைந்தது. 27 00:04:25,057 --> 00:04:27,726 ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல, 28 00:04:27,809 --> 00:04:31,063 எங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. 29 00:04:33,023 --> 00:04:34,107 நேரம். 30 00:04:52,668 --> 00:04:54,378 நாம் சரியான நேரத்திற்குள் தயாராக இருக்க மாட்டோம். 31 00:04:56,088 --> 00:04:58,090 இன்னொரு அரை நூற்றாண்டுக்கு மியூல் வரப் போவதில்லை. 32 00:04:58,173 --> 00:04:59,842 நான் கவலைப்படுவது அவனைப் பற்றி இல்லை. 33 00:05:01,677 --> 00:05:04,388 மூன்றாவது நெருக்கடிதான் எப்போதுமே திருப்புமுனையாக இருந்தது. 34 00:05:04,471 --> 00:05:09,059 நமக்கு எல்லாம் சரியான இடத்தில் இல்லையென்றால், 35 00:05:09,142 --> 00:05:12,479 நாம் மியூலைத் தோற்கடித்தாலும் கூட, அதற்கு பிறகான விளைவுகளுக்கு நாம் தயாராக இருக்க மாட்டோம். 36 00:05:12,563 --> 00:05:13,647 ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துவோம். 37 00:05:13,730 --> 00:05:16,275 உளவியல் வரலாற்றை முழுவதுமாக எல்லா மென்டாலிக்ஸ்களுக்கும் கற்பிக்க முடியாது, 38 00:05:16,358 --> 00:05:18,151 ஆனால் அதன் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவருக்கு கற்பிக்கலாம். 39 00:05:18,235 --> 00:05:19,236 அது நல்ல யோசனை. 40 00:05:20,112 --> 00:05:23,407 ஆனால் நாம் நம்முடைய பின்னடைவு மாதிரிகளை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். 41 00:05:24,116 --> 00:05:25,659 சரியான துறைகளில்தான் நாம் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பது 42 00:05:25,742 --> 00:05:28,245 நமக்குத் தெரிய நம்முடைய சமூக செயல்பாடுகளை செம்மைப்படுத்த வேண்டும். 43 00:05:28,912 --> 00:05:30,414 நாம் போதுமான வேகத்தில் செயல்படவில்லை. 44 00:05:35,002 --> 00:05:36,253 நாம் தூங்காமல் விழித்திருக்க வேண்டும். 45 00:05:38,255 --> 00:05:40,716 நம்மில் ஒருவர் விழித்திருக்க வேண்டும். 46 00:05:41,425 --> 00:05:42,426 ஹேரி. 47 00:05:44,887 --> 00:05:46,680 உன்னுடைய யுத்தம் மியூலுடன்தான். 48 00:05:46,763 --> 00:05:49,099 நாம் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதே என் வேலை. 49 00:05:49,766 --> 00:05:51,476 ஹேரி. ச்சே. 50 00:05:53,312 --> 00:05:55,147 அது சாத்தியமாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 51 00:06:08,785 --> 00:06:10,412 ஒரு வருடத்தில் உன்னைப் பார்க்கிறேன். 52 00:06:44,696 --> 00:06:46,782 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 53 00:06:56,875 --> 00:06:58,293 வீட்டிற்கு வரவேற்கிறேன், கேல். 54 00:06:59,044 --> 00:07:00,087 தாலிஸ் எங்கே? 55 00:07:01,630 --> 00:07:06,844 தாலிஸ் கொஞ்ச காலத்திற்கு முன்பு காலமாகிவிட்டார். இப்போது இவர்தான் முதல் ஸ்பீக்கர். 56 00:07:06,927 --> 00:07:08,720 இவர் பெயர் ப்ரீம் பால்வர். 57 00:07:14,101 --> 00:07:16,186 ஹேரி எங்கே? எத்தனை ஆண்டுகள் ஆனது? 58 00:07:21,066 --> 00:07:23,318 உங்கள் முதல் விழிக்கும் சுழற்சியிலிருந்து… 59 00:07:25,404 --> 00:07:27,531 148 ஆண்டுகள். 60 00:07:42,629 --> 00:07:43,881 ஹேரி? 61 00:07:48,051 --> 00:07:49,052 கேல். 62 00:07:50,762 --> 00:07:53,515 ஓ, அது சரிதான். 63 00:07:53,599 --> 00:07:54,600 அது சரிதான். 64 00:07:54,683 --> 00:07:56,143 அவர்கள் ஏன் என்னை சீக்கிரமாக எழுப்பவில்லை? 65 00:07:58,228 --> 00:08:02,065 எங்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. என்னுடையதைவிட உன் நேரம் முக்கியமானது. 66 00:08:02,149 --> 00:08:03,859 நான் உதவியிருப்பேனே. 67 00:08:04,359 --> 00:08:07,196 நாம் சில நேரங்கள் இடங்களை மாற்றிக்கொண்டு, மாறி மாறி விழித்திருக்கலாம். 68 00:08:07,279 --> 00:08:08,655 நாம் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கலாம்… 69 00:08:10,824 --> 00:08:12,409 நீ எப்போதும் என் மீது மிகவும் கோபமாக இருக்கிறாய். 70 00:08:13,827 --> 00:08:16,580 எப்போதும் நீங்கள்தான் கோபத்தை ஏற்படுத்துகிறீர்கள். 71 00:08:21,001 --> 00:08:22,002 மியூல்? 72 00:08:22,586 --> 00:08:24,421 இல்லை. இன்னும் இல்லை. சீக்கிரத்தில் வந்துவிடுவான். 73 00:08:25,047 --> 00:08:26,131 ஆனால்… 74 00:08:27,257 --> 00:08:30,677 மூன்றாவது நெருக்கடி கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. 75 00:08:31,345 --> 00:08:32,346 வா. 76 00:08:35,390 --> 00:08:36,390 இவை என்ன? 77 00:08:38,143 --> 00:08:39,311 நான்தான் அவற்றை செய்தேன். 78 00:08:42,523 --> 00:08:46,652 சால்வோர், யாணா, ரேய்ச். 79 00:08:46,735 --> 00:08:49,571 இப்படித்தான் இப்போதெல்லாம் கடந்த காலத்தை ஞாபகம் வைத்திருக்கிறேன். 80 00:08:50,739 --> 00:08:53,700 இப்போதெல்லாம் அவர்களுடைய முகம் எனக்குத் தெளிவாக நினைவில் இருப்பதில்லை. 81 00:08:54,243 --> 00:08:55,911 ஆனால் அவர்கள் மீதான அன்பால் முடிகிறது. 82 00:08:58,664 --> 00:09:00,040 வா. 83 00:09:00,666 --> 00:09:02,292 உன்னிடம் ஒன்றைக் காட்ட வேண்டும். 84 00:09:09,883 --> 00:09:13,887 என் வாழ்க்கையின் பெரும்பகுதி, இதைச் சரியாக செயல்படுத்தினால், 85 00:09:13,971 --> 00:09:16,849 என்னுடைய திட்டம் இருண்ட காலத்தைக் குறைக்கும் என்று நான் நம்பினேன். 86 00:09:19,685 --> 00:09:22,521 நீ ஒருபோதும் இரண்டாவது ஃபவுண்டேஷனின் ஒரு பகுதியாக இருப்பது அந்தத் திட்டத்தில் இல்லை. 87 00:09:22,604 --> 00:09:26,066 நீ நூற்றாண்டுகளுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும். இருந்தாலும் இங்கே இருக்கிறாய். 88 00:09:28,443 --> 00:09:30,988 நீ எல்லாவற்றையும் திசை மாற்றிவிட்டு, 89 00:09:31,071 --> 00:09:33,699 எப்படியோ அதையெல்லாம் மீண்டும் சரியான பாதைக்குத் திருப்பிவிட்டாய். 90 00:09:35,367 --> 00:09:38,412 இது எல்லாமே தற்செயலாக இருக்க முடியாது. 91 00:09:39,079 --> 00:09:42,708 இங்கே ஏதோ நடக்கிறது. நான்… என்னால் அதை விவரிக்க முடியவில்லை. 92 00:09:45,127 --> 00:09:47,337 ஆனால் நீ அதன் மையத்தில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். 93 00:09:51,383 --> 00:09:55,804 நீ தனியாக பயணம் செய்யக்கூடிய ஒரு பாதை உனக்கு முன்னால் இருக்கிறது. 94 00:09:57,264 --> 00:09:59,016 நான் உங்களுக்கு விடைகொடுக்கவில்லை. 95 00:10:00,726 --> 00:10:02,394 அப்படியென்றால் ப்ரீமை புகழஞ்சலி செலுத்தச் சொல்கிறேன். 96 00:10:02,477 --> 00:10:03,854 ஹேரி. 97 00:10:04,438 --> 00:10:07,107 உனக்கு அவனைப் பிடிக்கும். இப்போது… 98 00:10:30,047 --> 00:10:33,717 எட்டு நெருக்கடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்த எல்லாமே இதுதான். 99 00:10:34,593 --> 00:10:39,556 எல்லா அசல் தரவுகளும், என்னுடைய எல்லா எண்ணங்களும், இரகசியங்களும். 100 00:10:39,640 --> 00:10:43,644 ஆனால் அதில் மிக முக்கியமானது இதுதான். 101 00:10:44,645 --> 00:10:45,896 இன்விக்டஸ். 102 00:10:46,730 --> 00:10:49,233 மியூல் தோற்கடிக்கப்பட்டால், 103 00:10:49,816 --> 00:10:52,319 எல்லாம் இதை நோக்கித்தான் நகரும். 104 00:11:01,078 --> 00:11:02,204 உன்னை நாளை பார்க்கிறேன். 105 00:11:05,874 --> 00:11:07,292 சோர்வாக இருக்கிறது. 106 00:11:08,752 --> 00:11:09,920 - நாளை. - சரி. 107 00:11:10,003 --> 00:11:11,046 - சரி. - ஆம். 108 00:11:14,341 --> 00:11:15,551 கவனமாக. 109 00:11:40,242 --> 00:11:41,577 அவளிடம் பொய் சொன்னீர்கள். 110 00:11:47,749 --> 00:11:50,294 அவள் முகத்தைப் பார்த்து விடைபெற முடியவில்லை. 111 00:11:53,297 --> 00:11:54,590 இப்படி செய்வதுதான் நல்லது. 112 00:11:54,673 --> 00:11:56,425 நான் கேலாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மாட்டேன். 113 00:12:06,977 --> 00:12:08,478 இதில் உறுதியாக இருக்கிறீர்களா? 114 00:12:09,730 --> 00:12:11,648 இங்கே இறப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். 115 00:12:15,110 --> 00:12:16,945 என்னை ஊனாவின் உலகத்திற்கு கூட்டிப் போ. 116 00:12:18,947 --> 00:12:20,949 இன்னொரு முறை என் இறப்பை தள்ளிப்போடு. 117 00:12:22,159 --> 00:12:23,911 இந்த உடல்தான் உங்கள் இறப்பை தள்ளிப்போட்டது. 118 00:12:25,245 --> 00:12:27,414 இதை வைத்துக்கொண்டு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தீர்கள். 119 00:12:34,922 --> 00:12:36,173 அப்படியென்றால் நான் உறுதியாக இருக்கிறேன். 120 00:12:48,602 --> 00:12:53,440 ஸ்பேசர்கள் இல்லை. விஸ்பர் டிரைவ் இல்லை. 121 00:12:53,524 --> 00:12:54,858 ஜம்ப் கேட் இல்லை. 122 00:12:55,526 --> 00:12:56,527 எப்படி? 123 00:12:58,445 --> 00:13:00,739 என்னோடு வாருங்கள். உங்களுக்குக் காட்டுகிறேன். 124 00:13:05,035 --> 00:13:09,623 சால்வோர் சொன்னாள்… இலக்கை அடைய நான் தனிப்பட்ட விதத்தில் இதில் ஈடுபட யாரோ விரும்புவதாக. ஏன்? 125 00:13:10,374 --> 00:13:12,125 ஏனென்றால் நம்மால் முடியாது. 126 00:13:34,439 --> 00:13:35,440 ஹேரி? 127 00:14:10,934 --> 00:14:11,935 அவர் போய்விட்டார். 128 00:14:14,396 --> 00:14:15,689 அவர் என்னிடம் விடைபெறவில்லை. 129 00:14:15,772 --> 00:14:17,649 ஆனால் அவர் போவதை நான் உணர்ந்தேன். 130 00:14:24,072 --> 00:14:27,534 இன்னும் நான் சைகை மொழியை கற்கவில்லை, ஆனால் மன வேதனையை புரிந்துகொள்ள முடியும். 131 00:14:34,541 --> 00:14:38,337 ஹேரி போய்விட்டார், அவருக்கும் நான் ஒரு சிலை வைக்க வேண்டும். 132 00:14:39,087 --> 00:14:41,965 அவர் செய்த அந்த சிலைகளில் ஒன்று போல. 133 00:14:54,895 --> 00:14:57,981 ஏற்கனவே அவர் சிலையை அவரே செய்துவிட்டார். இல்லையா? 134 00:15:06,114 --> 00:15:07,699 நிச்சயமாக அவர் செய்திருக்கிறார். 135 00:15:09,868 --> 00:15:12,162 ஹேரி வரலாற்றில் தன்னை இடம்பெறச் செய்துவிட்டார். 136 00:15:12,246 --> 00:15:14,748 அதோடு நாங்கள் பின்பற்ற ஒரு பாதையை உருவாக்கிவிட்டார். 137 00:15:14,831 --> 00:15:17,209 ஒன்றாக நாங்கள் அந்தப் பாதையைப் பின்பற்றுகிறோம். 138 00:15:17,292 --> 00:15:20,420 நான் ப்ரீமின் மொழியை கற்றுக்கொண்டேன், திட்டம் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியது, 139 00:15:21,129 --> 00:15:23,131 ஆனால் யுத்தம் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. 140 00:15:27,678 --> 00:15:30,889 இரண்டாவது ஃபவுண்டேஷன் எங்கே? 141 00:15:35,561 --> 00:15:38,438 மியூல் வந்துவிட்டான். நமக்கு நேரம் இல்லை. 142 00:15:38,522 --> 00:15:40,899 இப்போது 143 00:15:44,945 --> 00:15:47,489 நூற்று ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 144 00:15:47,573 --> 00:15:51,243 இரண்டாவது ஃபவுண்டேஷனே இல்லையென்றால், நாம் செல்டனின் திட்டத்திலிருந்து 145 00:15:51,326 --> 00:15:54,538 முழுவதுமாக விலகிச் செல்வோம் என்பதை நீ பார்த்தாய். 146 00:15:54,621 --> 00:15:58,500 நாம் திட்டத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம். 147 00:16:00,002 --> 00:16:05,632 மூன்றாவது நெருக்கடி நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக நடக்கிறது. 148 00:16:07,759 --> 00:16:11,513 கால்கன் விஷயம் வேறு. 149 00:16:11,597 --> 00:16:15,309 மியூல் அதைக் கைப்பற்றிய தருணம், 150 00:16:15,392 --> 00:16:18,270 ரேடியண்ட் இதைச் செய்தது… 151 00:16:34,494 --> 00:16:37,247 ட்ரான்டோர் 152 00:16:57,559 --> 00:17:01,647 அது மோசமடைய முடிந்தால், அது சிறப்படையவும் முடியும். 153 00:17:05,317 --> 00:17:06,318 அதைச் சரிசெய். 154 00:17:07,069 --> 00:17:08,569 அதைச் சரிசெய்ய முடியாது. 155 00:17:09,863 --> 00:17:11,740 குறைந்தபட்சம் உளவியல் வரலாறால் முடியாது. 156 00:17:12,950 --> 00:17:14,409 அது தவறாக இருக்க முடியாதா? 157 00:17:15,618 --> 00:17:18,539 சமீபகாலமாக கணிப்புகள் துல்லியமாக இல்லை என்று சொன்னாய். 158 00:17:19,164 --> 00:17:21,666 அதற்கு வேறு தெரியாத காரணங்கள் இருக்கலாம் என்று நம்புகிறேன். 159 00:17:21,750 --> 00:17:24,877 பல ஆண்டுகளாக ஏதோ கணிதத்தில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 160 00:17:25,420 --> 00:17:27,881 அப்படியென்றால் அது கால்கன். அதுதான் கைமாறியது. 161 00:17:28,674 --> 00:17:30,884 அது தொடர் விளைவுகளை ஏற்படுத்தி இருக்காதா? 162 00:17:30,968 --> 00:17:33,929 நாம் ஒன்றுமில்லா நிலையை நோக்கிப் போவதாக எனக்கு எப்போதும் தோன்றியது. 163 00:17:34,012 --> 00:17:36,390 வெறுமையை வரவேற்றிடுங்கள். 164 00:17:46,900 --> 00:17:52,072 ஒரு நூற்றாண்டாக, இந்த விளையாட்டுக் கருவி அந்த விளையாட்டுக் கருவிக்கு கீழ்ப்படிந்தது. 165 00:17:52,906 --> 00:17:55,075 நம்முடைய மரபணு வம்சத்தை பாதுகாக்க உதவும் என்று 166 00:17:55,158 --> 00:17:58,412 உறுதியளித்த அதன் கணிப்புகளுக்கு அது நம்மை சேவகர்களாக ஆக்கிவிட்டது. 167 00:18:00,163 --> 00:18:02,207 நமக்கு பலனளிக்கும் மகிழ்ச்சியான நாள். 168 00:18:05,210 --> 00:18:07,212 நாம் தொலைந்தோம். 169 00:18:09,965 --> 00:18:13,135 நான் உங்களுக்குத் தேவைப்பட்டால், நான் தேவைப்படாமல் இருக்க ஒரு வழியைக் கண்டுபிடியுங்கள். 170 00:18:23,687 --> 00:18:25,731 நான் நினைத்ததைவிட அதிகமாக அங்கே காலியாக இருக்கிறது. 171 00:18:30,319 --> 00:18:31,653 நாம் பிறகு கலந்தாலோசிக்கலாம். 172 00:18:31,737 --> 00:18:34,239 இப்போதைக்கு, வேறு யாரிடமும் சொல்லாதே. 173 00:18:34,323 --> 00:18:35,699 யாருக்கும் தெரியக் கூடாது. 174 00:18:38,869 --> 00:18:42,873 டெமர்ஸல். நான் நினைக்கிறேன், இந்த தருணத்தில்… 175 00:18:44,208 --> 00:18:46,793 உன்னைப் போல இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்குப் புரிகிறது. 176 00:18:48,045 --> 00:18:49,046 பேரரசே? 177 00:18:49,129 --> 00:18:55,219 நான் கஷ்டப்பட்டேன், சமரசம் செய்துகொண்டேன், ஒரு மகிழ்ச்சியான நடுநிலையைத் தேடிக்கொண்டேன். 178 00:18:55,302 --> 00:18:56,845 எல்லாமே ஒன்றுமில்லாததற்காக. 179 00:18:59,723 --> 00:19:04,144 என்னுடைய குறுகிய, அர்த்தமற்ற வாழ்க்கையின் முடிவில் என் கடந்தகால செயல்களுக்கு நான் வருத்தப்பட்டால், 180 00:19:04,228 --> 00:19:09,233 உன்னுடைய நீண்ட, அர்த்தமற்ற வாழ்க்கைக்கு நீ நிறைய வருத்தப்பட வேண்டும். 181 00:19:10,817 --> 00:19:13,028 ஒருவேளை நீ முடிவை வரவேற்கலாம். 182 00:19:13,111 --> 00:19:16,990 பராமரிக்க மரபணு வம்சம் இல்லை என்றால், 183 00:19:17,074 --> 00:19:20,619 நீ எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத 184 00:19:21,245 --> 00:19:23,497 சுதந்திரமாக வாழும் ஒரு சாதாரண பெண். 185 00:19:29,545 --> 00:19:32,756 நான் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன, பேரரசே. 186 00:19:34,925 --> 00:19:38,595 டெமர்ஸல், நீ என்னை இழக்கக் கூடாது. இப்போது இல்லை. 187 00:19:39,179 --> 00:19:40,848 எந்த விதமான பேரழிவு வந்தாலும், 188 00:19:41,723 --> 00:19:47,020 அதை எதிர்கொள்ள நான் உங்களுடன் இங்கே இருப்பது எல்லோருக்கும் பயனளிப்பதாக இருக்கும். 189 00:19:49,314 --> 00:19:52,568 நிஜமாகவே பத்து நாட்களில் நீ என்னை அழிக்கப் போகிறாயா? 190 00:19:56,947 --> 00:19:57,948 தயவுசெய்து வேண்டாம். 191 00:20:02,411 --> 00:20:05,122 உங்கள் வேண்டுகோள் இந்த விஷயத்தில் எனக்கு அதிகாரம் இருப்பதைக் காட்டுகிறது. 192 00:20:06,790 --> 00:20:10,085 ஆனால் என்னுடைய பல செயல்பாடுகளுக்கு மத்தியில், நான் கடிகாரமாகவும் இருக்கிறேன். 193 00:20:11,545 --> 00:20:16,800 ஒவ்வொரு க்ளியோனின் வாழ்க்கைக்கும் நான்தான் கடிகாரம். நான் காட்டும் நேரம் மிகச் சரியானது. 194 00:20:23,015 --> 00:20:26,101 கால்கன் 195 00:20:56,757 --> 00:20:59,051 நான்தான் மியூல். 196 00:21:01,011 --> 00:21:03,805 வெளியே இருக்கும் என் விண்கப்பல் பிளாக்டங். 197 00:21:05,307 --> 00:21:06,391 எனக்குத் தெரியும். 198 00:21:08,393 --> 00:21:09,728 நாங்கள் பயங்கரமானவர்களாகத் தெரியலாம். 199 00:21:11,980 --> 00:21:13,315 ஆனால் நான் உறுதியளிக்கிறேன், 200 00:21:15,275 --> 00:21:16,777 சாகும் தருவாயில் உங்கள் ஆர்ச்டியூக்கிற்கு 201 00:21:17,736 --> 00:21:21,657 என்னைப் பிடித்ததைப் போலவே உங்களுக்கும் என்னைப் பிடிக்கும். 202 00:21:23,408 --> 00:21:25,619 இப்போது, அந்தக் குட்டி எங்கே? 203 00:21:27,120 --> 00:21:28,413 எங்கே? 204 00:21:32,918 --> 00:21:33,919 உன் பெயர் என்ன? 205 00:21:34,002 --> 00:21:35,337 ஸ்கர்லெட், சார். 206 00:21:35,420 --> 00:21:38,507 என் அப்பா என்னை அப்படி அழைப்பார். அது கால்கனீஸ். 207 00:21:39,216 --> 00:21:40,509 அதற்கு "குட்டி ப்ரெட் ரோல்" என்று அர்த்தம். 208 00:21:41,093 --> 00:21:42,719 என்னவொரு உன்னதமான பெயர். 209 00:21:43,637 --> 00:21:45,973 தயவுசெய்து, ஒருபோதும் "சார்" என்று சொல்லாதே. 210 00:21:46,056 --> 00:21:47,683 வெறும் மியூல் போதும். 211 00:21:49,017 --> 00:21:51,144 எனவே, ஸ்கர்லெட்… 212 00:21:53,730 --> 00:21:54,731 உனக்கு இந்த மியூலைப் பிடிக்குமா? 213 00:21:56,191 --> 00:21:57,401 எல்லாவற்றையும்விட அதிகமாக. 214 00:22:00,195 --> 00:22:02,614 எல்லாவற்றையும்விட அதிகமாக. 215 00:22:06,618 --> 00:22:10,747 நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், என்னால் மக்களை வற்புறுத்த முடியும். 216 00:22:12,541 --> 00:22:13,959 அவர்களின் பாசத்தை மாற்ற முடியும். 217 00:22:15,210 --> 00:22:20,966 ஆனால் அது கடினம், அதோடு எனக்கு ஒரு குறிப்பிட்ட ஒழுக்கம் தேவைப்படுகிறது. 218 00:22:21,967 --> 00:22:25,721 அதிர்ஷ்டவசமாக, நான் எல்லோரையும் மாற்ற வேண்டியதில்லை என்பதை தெரிந்துகொண்டேன். 219 00:22:26,805 --> 00:22:30,225 செயல்முறை விளக்கத்தின் மூலம் என்னால் சிலரை மாற்ற முடியும். 220 00:22:31,351 --> 00:22:33,562 இந்த மாற்றங்களைப் பார்க்கும் மற்றவர்கள் 221 00:22:33,645 --> 00:22:37,191 எளிதாக… என் பக்கம் வந்துவிடுகிறார்கள். 222 00:22:38,233 --> 00:22:41,528 எனவே, ஸ்கர்லெட். 223 00:22:42,738 --> 00:22:45,532 மாற்றம் எப்படி வேலை செய்கிறது என்ற செயல் விளக்கத்தை காட்ட விரும்புகிறாயா? 224 00:22:46,033 --> 00:22:47,659 எல்லாவற்றையும்விட அதிகமாக. 225 00:22:47,743 --> 00:22:48,952 சரி. 226 00:22:49,703 --> 00:22:50,704 வா. 227 00:22:54,458 --> 00:22:55,459 தயவுசெய்து. 228 00:23:12,142 --> 00:23:13,143 இது என்னவென்று தெரியுமா? 229 00:23:13,769 --> 00:23:14,811 இது என் அப்பாவுடையது. 230 00:23:14,895 --> 00:23:16,480 அவர் எப்போதாவது இதை வைத்து விளையாட அனுமதித்தாரா? 231 00:23:16,563 --> 00:23:18,732 இல்லை. இது மிகவும் ஆபத்தானது என்றார். 232 00:23:18,815 --> 00:23:19,942 அவர் சொன்னது சரிதான். 233 00:23:20,025 --> 00:23:24,655 நீ இதை மற்றவர்களை நோக்கியோ, உன்னை நோக்கியோ ஒருபோதும் காட்டக் கூடாது. 234 00:23:26,573 --> 00:23:28,951 ஆனால் மனமாற்றத்தின் அழகே அதுதான். 235 00:23:29,034 --> 00:23:33,705 நான் உங்கள் மனதுக்குள் நுழைந்தவுடன், நான் உங்கள் மனதை எனக்கு வேண்டியபடி மாற்றலாம். 236 00:23:34,831 --> 00:23:38,377 மனதில் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும், 237 00:23:38,460 --> 00:23:43,048 திடீரென்று நீங்கள் செய்யக் கூடாத ஒன்றைச் செய்ய… 238 00:23:44,716 --> 00:23:45,843 நிர்பந்திக்கப்படுவீர்கள். 239 00:23:48,762 --> 00:23:51,598 பரவாயில்லை, குட்டி ப்ரெட் ரோல். 240 00:23:53,767 --> 00:23:54,768 அதை எடு. 241 00:23:58,647 --> 00:23:59,648 கனமாக இருக்கிறது. 242 00:23:59,731 --> 00:24:00,774 அடடா. 243 00:24:02,734 --> 00:24:04,319 உன் தலையின் உயரத்துக்குத் தூக்கவே கனமாக இருக்கிறதா? 244 00:24:14,079 --> 00:24:15,497 அப்பாவைப் போல… 245 00:24:17,749 --> 00:24:19,042 மகள். 246 00:24:19,877 --> 00:24:21,962 ட்ரிக்கரை அழுத்த விரும்புகிறாயா, ஸ்கர்லெட்? 247 00:24:22,462 --> 00:24:23,922 எல்லாவற்றையும்விட அதிகமாக. 248 00:24:24,006 --> 00:24:26,550 எல்லாவற்றையும்விட அதிகமாக! 249 00:24:28,260 --> 00:24:29,845 மூன்று எண்ணியவுடன். 250 00:24:33,098 --> 00:24:34,099 ஒன்று. 251 00:24:37,019 --> 00:24:38,020 இரண்டு. 252 00:24:39,730 --> 00:24:40,731 மூன்று. 253 00:24:49,198 --> 00:24:50,782 நான் ஒரு அரக்கன் என்று நினைக்கிறாயா? 254 00:24:56,663 --> 00:24:57,998 மாற்றத்தின் அழகு. 255 00:25:06,590 --> 00:25:09,510 அதைக் கொடு, ஸ்கர்லெட். கொடு. 256 00:25:12,179 --> 00:25:14,681 வேறொரு சமயத்தில் உன்னை நீயே சுட்டுக்கொள்ளலாம். சத்தியமாக. 257 00:25:16,266 --> 00:25:17,518 நான் சத்தியம் செய்கிறேன். 258 00:25:21,438 --> 00:25:22,439 சாப்பிடு. 259 00:25:31,740 --> 00:25:33,242 எல்லோரும் என்னை நேசிக்கத் தொடங்குவீர்கள். 260 00:25:37,037 --> 00:25:38,789 சீக்கிரத்தில்… 261 00:25:42,543 --> 00:25:44,336 மீதமுள்ள விண்மீன் மண்டலமும் என்னை நேசிக்கும். 262 00:25:48,090 --> 00:25:49,758 கிளாவிஜெர் படைக் குடியிருப்புகள் 263 00:25:49,842 --> 00:25:52,344 சரி, என்னிடம் நாணயங்கள் எதுவும் இல்லை, ஆனால்… 264 00:25:55,138 --> 00:25:56,223 அது நியாயமற்றது. 265 00:25:56,306 --> 00:25:57,558 ஹேய், ஒருவேளை உன்னுடைய பழங்கால பொருள், 266 00:25:57,641 --> 00:26:01,395 நான் சர்க்கரை கிண்ணம் என்று சொல்வேன், அதை எடுத்துவர நீ வீட்டிற்கு ஓடிச் சென்றால், 267 00:26:01,478 --> 00:26:02,688 நான் உன்னைத் தடுக்க மாட்டேன். 268 00:26:02,771 --> 00:26:05,524 நீ குடும்ப பாரம்பரிய பொருட்களை வைத்து ரிஸ்க் எடுப்பது டெமர்ஸலுக்குத் தெரியுமா? 269 00:26:06,441 --> 00:26:07,985 என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 270 00:26:15,409 --> 00:26:18,412 ஒருவேளை என் எளிய வீட்டுக்கு ஒரு புதிய சர்க்கரை கிண்ணம் கிடைக்கப் போகிறதோ? 271 00:26:18,495 --> 00:26:20,163 அது அவ்வளவு எளிதானது இல்லை. 272 00:26:28,839 --> 00:26:30,257 இப்போது உனக்குக் கிடைத்துவிட்டது. 273 00:26:30,340 --> 00:26:31,967 வா. அதை மீண்டும் அமையுங்கள். 274 00:26:32,050 --> 00:26:33,635 அரண்மனையில் இன்னும் நிறைய பளபளப்பான பொருட்கள் இருக்கின்றன. 275 00:26:55,449 --> 00:26:56,742 வித்துகள். 276 00:26:58,327 --> 00:26:59,411 இதை முயற்சி செய். 277 00:27:00,370 --> 00:27:01,455 பரவாயில்லை. 278 00:27:01,538 --> 00:27:04,750 நல்லவன். இது உன்னைக் கொன்றுவிடும். 279 00:27:07,586 --> 00:27:09,046 சிக்னெட் இதனுடன் விளையாட விரும்பலாம். 280 00:27:09,880 --> 00:27:11,215 மீண்டும் மருத்துவரைப் பார்த்தோம். 281 00:27:12,216 --> 00:27:13,634 எந்த மாற்றமும் இல்லை, ஆனால்… 282 00:27:15,344 --> 00:27:18,180 நான் சொல்கிறேன், அவள் முழு வேகத்தில் ஓடியாடி, ஆரவாரத்தோடு 283 00:27:18,263 --> 00:27:20,599 இந்த வருடத்தை வாழத் தீர்மானித்திருக்கிறாள். 284 00:27:20,682 --> 00:27:23,310 - என்னால் ஏதாவது செய்ய முடிந்திருக்கலாம்… - எனக்குத் தெரியும். 285 00:27:29,066 --> 00:27:30,984 புதிய டான் உயிர்பெறப் போகிறான். 286 00:27:32,110 --> 00:27:33,654 இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 287 00:27:34,821 --> 00:27:36,114 புதிதாகப் பிறந்தவர்கள் ஆச்சரியமானவர்கள். 288 00:27:38,283 --> 00:27:39,284 உனக்கு அவனைப் பிடிக்கும். 289 00:27:39,368 --> 00:27:43,664 முயற்சிப்பேன். அவனை என் மடியில் அல்லது சுவற்றில் துள்ள வைக்கலாம். பார்ப்போம். 290 00:27:45,624 --> 00:27:47,626 அட. அவன் நீதான். 291 00:27:48,293 --> 00:27:49,795 உறுதியாக உன்னையே உன்னால் நேசிக்க முடியும். 292 00:27:49,878 --> 00:27:50,879 சரி… 293 00:27:53,674 --> 00:27:55,008 தொடருங்கள். விளையாடுங்கள். 294 00:27:55,676 --> 00:27:57,886 என்னுடைய எந்த பொருட்களையும் திருடாதீர்கள். 295 00:27:57,970 --> 00:28:00,639 உங்கள் எல்லோரையும் என்னால் கொல்ல முடியும். 296 00:28:02,766 --> 00:28:08,063 உங்கள் மரபை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால் அதிலிருந்து தப்பிப்பது கடினம். 297 00:28:09,940 --> 00:28:11,483 விண்மீன் மண்டலத்தின் மறுபுறத்தில், 298 00:28:11,567 --> 00:28:15,362 இரண்டாவது நெருக்கடியின்போது பேரரசின் கோட்டையை துளைத்த பிறகு, 299 00:28:15,445 --> 00:28:19,032 ஹோபர் மாலோவின் மரபு வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பிடித்தது. 300 00:28:22,744 --> 00:28:26,623 ஹோபரின் சந்ததியினர் வர்த்தகர்களின் கூட்டணியை நிறுவினார்கள். 301 00:28:28,208 --> 00:28:31,128 ஆனால் அவர்களின் மிகச் சமீபத்திய சந்ததியான, டோரன் மாலோ, 302 00:28:31,211 --> 00:28:33,297 வர்த்தகர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. 303 00:28:33,380 --> 00:28:34,798 அல்லது அடுத்த நெருக்கடியுடன். 304 00:28:38,218 --> 00:28:42,806 இருந்தாலும், எல்லோரையும் அவன் பக்கம் இழுக்க மியூலிடம் ஒரு வழி இருக்கிறது. 305 00:28:42,890 --> 00:28:44,391 எப்படியாவது. 306 00:28:52,858 --> 00:28:53,859 அன்பே? 307 00:28:54,526 --> 00:28:56,695 அந்த கொள்ளையன் நம் சூரிய ஒளியைத் தடுத்துவிட்டான். 308 00:29:00,741 --> 00:29:03,118 ஆம், புதிய திருமணமானவர்களே. 309 00:29:03,202 --> 00:29:04,203 புதிதாக திருமணமானவர்கள். 310 00:29:04,786 --> 00:29:07,581 சமீபத்தில்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று அர்த்தம். அது ஒரு பழைய வழக்கம். 311 00:29:07,664 --> 00:29:08,916 அதை மீண்டும் புதிய ஸ்டைலாக கொண்டு வருகிறோம். 312 00:29:08,999 --> 00:29:10,792 இனி நீ எப்போது வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ள விரும்பலாம். 313 00:29:11,376 --> 00:29:12,878 நான் எதிர்நோக்குகிறேன். 314 00:29:13,587 --> 00:29:15,130 திரு. மாலோ, என்ன பிரச்சினை? 315 00:29:15,839 --> 00:29:18,467 நானும் என் மணமகளும் எந்த தொந்தரவும் இருக்காது என்று இந்த வில்லாவைத் தேர்ந்தெடுத்தோம், 316 00:29:18,550 --> 00:29:22,971 திடீரென்று, அந்த ஆட்சிக் கவிழ்ப்பின் நிழலால் எங்களுக்குத் தொந்தரவு ஏற்படுகிறது. 317 00:29:23,055 --> 00:29:24,640 மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். 318 00:29:26,141 --> 00:29:27,226 அதை நகர்த்த முடியுமா? 319 00:29:27,309 --> 00:29:31,980 திரு. மாலோ, பிளாக்டங் மியூலுக்குச் சொந்தமானது. 320 00:29:32,481 --> 00:29:33,524 அவருடைய அரசியல் நடவடிக்கைகள்… 321 00:29:33,607 --> 00:29:35,359 - "ஆட்சிக் கவிழ்ப்பை" பிடித்திருக்கிறது. - "ஆட்சிக் கவிழ்ப்பை" பிடித்திருக்கிறது. 322 00:29:35,984 --> 00:29:40,322 அவருடைய ஆட்சிக் கவிழ்ப்பு சில அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி. 323 00:29:42,282 --> 00:29:43,951 ஒருவேளை நீங்கள்… 324 00:29:44,034 --> 00:29:45,077 - என்ன? - என்ன? 325 00:29:45,744 --> 00:29:47,704 அந்த விண்கப்பலை நகர்த்துவதைவிட 326 00:29:47,788 --> 00:29:51,166 நீங்கள் வேறு இடத்துக்கு நகர்வது மிகவும் கடினமாக இருக்குமோ? 327 00:29:52,751 --> 00:29:56,547 டோரி, இந்த மனிதன் ஒரு மேதை. 328 00:29:57,214 --> 00:29:59,633 இருந்தாலும், உதவ ஒரு குழுவை அனுப்ப முடியுமா? 329 00:29:59,716 --> 00:30:02,553 இந்த துண்டு மட்டும் கொஞ்சம் கனமாக இருக்கிறது. 330 00:30:10,519 --> 00:30:11,937 எனக்குப் புரிகிறது. அது ஒரு ஸ்கேட்டர். 331 00:30:12,479 --> 00:30:13,480 மிகவும் அருமை. 332 00:30:13,564 --> 00:30:15,065 - ரொம்ப நன்றாகப் பேசினீர்கள். - ஆம். 333 00:30:15,148 --> 00:30:16,275 ஒத்துழைத்ததற்கு நன்றி. 334 00:30:18,569 --> 00:30:21,029 வீட்டிற்கு வரவேற்கிறேன். பானங்களை தயார் செய்யட்டுமா? 335 00:30:21,113 --> 00:30:22,573 எப்போதும், ஸ்வீட்ஹார்ட். 336 00:30:24,074 --> 00:30:26,326 ஓ, எனக்கு புதிய விண்கப்பலின் குரல் மிகவும் பிடித்திருக்கிறது. 337 00:30:27,786 --> 00:30:30,581 அந்தக் குரல் தைரியமானதாக இருக்கிறது. நான் அதற்கு ஸ்வீட்ஹார்ட் என்று பெயர் வைக்கிறேன். 338 00:30:31,748 --> 00:30:34,168 பிடித்திருக்கிறது. குழப்பமாக இருக்காது. 339 00:30:35,335 --> 00:30:37,379 இன்று கடற்கரையில் அருமையான ஸ்கேட்டர்கள். 340 00:30:37,462 --> 00:30:40,215 ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு என்பது வெளிப்படையாகப் பார்க்கப்பட வேண்டிய இடம். 341 00:30:40,299 --> 00:30:41,633 உற்சாகமானது, இருந்தாலும் தீர்விரமானது. 342 00:30:41,717 --> 00:30:43,135 உங்கள் பானம் தயார். 343 00:30:46,388 --> 00:30:49,474 நான் உன்னை காதலிக்கிறேன், டோரி. உன்னுடனான என் வாழ்க்கையை நேசிக்கிறேன். 344 00:30:50,309 --> 00:30:52,352 உன்னையும்தான், ஸ்வீட்ஹார்ட். 345 00:30:52,436 --> 00:30:53,604 நன்றி. 346 00:30:59,735 --> 00:31:02,738 அந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கும் வர்த்தகர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீ நினைக்கிறாயா? 347 00:31:03,697 --> 00:31:06,158 ஓ, யாருக்குத் தெரியும். அரசியல். 348 00:31:06,825 --> 00:31:10,204 அவர்கள் எப்போதும் வெவ்வேறு வடிவ விண்கப்பல்களில் வரும் ஒரே மாதிரியான ஆட்கள்தான். 349 00:31:11,622 --> 00:31:13,999 எல்லோரும் ஒரு விஷயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 350 00:31:15,459 --> 00:31:16,960 என் மாமா கவனித்துக்கொள்வார். 351 00:31:17,044 --> 00:31:19,129 உன் மாமா உனக்குள் இருக்கும் நன்மையைப் பார்க்கும் வரை, 352 00:31:19,213 --> 00:31:21,006 அவர் எதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று எனக்குக் கவலையில்லை. 353 00:31:21,089 --> 00:31:22,299 நீயும் கவலைப்படக் கூடாது. 354 00:31:28,388 --> 00:31:30,349 நல்ல செய்தி. ஒரு விருந்தினர் வந்திருக்கிறார். 355 00:31:33,560 --> 00:31:35,270 இலவச மசாஜ்கள். 356 00:31:36,021 --> 00:31:39,441 உங்கள் கைகள் உறுதியானவை போல தெரிகிறது. 357 00:31:39,525 --> 00:31:41,151 உறுதியானவைதான். 358 00:31:41,235 --> 00:31:43,487 யார் நீங்கள்? 359 00:31:43,570 --> 00:31:47,032 என் பெயர் கேப்டன் ஹான் ப்ரிட்சர். நான் ஃபவுண்டேஷனுக்காக உளவுத்துறையில் இருக்கிறேன். 360 00:31:47,991 --> 00:31:49,409 நான் காக்டெய்ல் ஷேக் கொண்டு வருகிறேன். 361 00:31:50,452 --> 00:31:52,621 நான் இந்த அறையில் இருக்கும்போது உங்கள் ஸ்கேட்டர்கள் எதுவும் வேலை செய்யாது. 362 00:31:52,704 --> 00:31:54,164 உனக்குப் புரிகிறதா? 363 00:31:56,875 --> 00:31:57,876 ஆம். 364 00:31:58,460 --> 00:31:59,545 இது விநோதமானது. 365 00:32:00,212 --> 00:32:03,715 நான் யார் என்று ஒருவரிடம் சொல்லும் அரிதான சந்தர்ப்பங்களில், 366 00:32:03,799 --> 00:32:05,133 மக்கள் என்னைப் பார்த்து பயப்படுவார்கள். 367 00:32:05,217 --> 00:32:06,426 நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? 368 00:32:06,510 --> 00:32:08,762 சரி, ஆரம்ப தகவல், நீ ஒரு போர் மண்டலத்தில் இருக்கிறாய். 369 00:32:09,638 --> 00:32:11,056 இன்னும் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. 370 00:32:11,974 --> 00:32:12,975 குண்டுவீச்சுக்கள். 371 00:32:17,354 --> 00:32:18,647 ஆட்சிக்கவிழ்ப்பு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 372 00:32:18,730 --> 00:32:22,526 அவனுடைய பெயர் மியூல் என்று எங்களுக்குத் தெரியும். பொருத்தமானது. பிடிவாதமான கழுதை. 373 00:32:22,609 --> 00:32:26,405 அவனுடைய விண்கப்பலின் பெயர் பிளாக்டங், அது விரும்பத்தகாதது. 374 00:32:26,488 --> 00:32:29,324 சரி. இனிமையானவன் இல்லை. 375 00:32:29,408 --> 00:32:33,328 அதோடு, ஆச்சரியப்படும் விதமாக, சந்திக்கவும் கடினமானவன். 376 00:32:33,412 --> 00:32:36,832 ஓ, டோரன், நாம் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக நினைக்கிறேன். 377 00:32:36,915 --> 00:32:40,711 கேப்டன், என் மாமா ரேண்டு மாலோ என்று உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 378 00:32:41,461 --> 00:32:42,546 நாங்கள் உங்களுக்கு உளவு பார்க்கும்போது பிடிபட்டால், 379 00:32:42,629 --> 00:32:44,715 வர்த்தகர்கள்தான் அதற்குப் பின்னால் இருப்பதாக எல்லோரும் நினைப்பார்கள். 380 00:32:50,721 --> 00:32:53,557 அது இண்ட்பருக்கும் மீதமுள்ள ஃபவுண்டேஷன் தலைமைக்கும் பாதுகாப்பளிக்கும். 381 00:32:56,310 --> 00:32:57,978 நிஜமாகவே மியூல் அவ்வளவு ஆபத்தானவனா? 382 00:32:58,061 --> 00:32:59,813 நாங்கள் எங்கள் தேன்நிலவில் ஜாலியாக இருக்கிறோம். 383 00:32:59,897 --> 00:33:01,315 ஏனென்றால், மியூலின் பிடி இறுகுவதால் கால்கனின் 384 00:33:01,398 --> 00:33:03,400 மற்ற பகுதிகள் பெரும் பதட்டத்தில் இருப்பதை கவனிக்காமல் நீங்கள் போஸ் கொடுப்பதில் 385 00:33:03,483 --> 00:33:05,277 மிகவும் மும்முரமாக இருக்கிறீர்கள். 386 00:33:05,360 --> 00:33:06,570 நாங்கள் கவனிக்கிறோம். 387 00:33:08,280 --> 00:33:11,158 ஆனால் அதை உணர்கிறீர்களா? காற்று பழையதாகிவிட்டது. 388 00:33:11,825 --> 00:33:13,243 அண்டை வீட்டுக் கதவு உடைக்கப்படுவதைப் பார்த்து 389 00:33:13,327 --> 00:33:14,912 பொதுமக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 390 00:33:15,621 --> 00:33:17,247 சார், என் மனைவியை பயமுறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால்… 391 00:33:18,290 --> 00:33:19,499 இல்லை. 392 00:33:19,583 --> 00:33:21,668 நீ எப்போதும் பயப்பட முடியாத அளவுக்கு பணக்காரன். 393 00:33:22,794 --> 00:33:24,129 மிகவும் அனுபவமற்றவன். உடந்தையாக இருப்பவன். 394 00:33:25,547 --> 00:33:27,883 அதனால்தான் நான் உங்கள் விண்கப்பலில் ஏறும்போது உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. 395 00:33:29,092 --> 00:33:32,012 அதனால்தான் நீங்கள் எப்போதும் கேட்கும் வன்முறை சத்தம் ஒரு சில தெருக்கள் தள்ளியிருக்கும் 396 00:33:32,095 --> 00:33:33,597 மற்றவர்களைத்தான் பாதிக்கும், அந்த பாதிப்பு 397 00:33:33,680 --> 00:33:36,475 உங்களுக்கு ஏற்படாது என்று நினைக்கிறீர்கள். 398 00:33:37,309 --> 00:33:38,352 கோரிக்கை என்ன? 399 00:33:39,394 --> 00:33:41,438 பொதுவாக, இவர்கள் சர்வாதிகாரிகளாக இருப்பார்கள், 400 00:33:41,980 --> 00:33:45,150 ஒரு கிரகத்தை கைப்பற்றும்போது, சில நாட்கள் தலைமறைவாக இருப்பார்கள். 401 00:33:45,234 --> 00:33:47,194 மியூல் எதையோ நிரூபிக்க விரும்புகிறான். 402 00:33:47,277 --> 00:33:48,695 அவன் இன்னும் பாதுகாக்கப்படுகிறான். 403 00:33:48,779 --> 00:33:50,656 ஆனால் அவன் செய்யும் தீய செயல்களை அவனுக்குப் பிடித்திருக்கிறது. 404 00:33:51,281 --> 00:33:53,325 அவன் இன்று இரவு ஒரு பார்ட்டி நடத்துகிறான். 405 00:33:54,493 --> 00:33:59,748 அதன் அன்பான விருந்தினர் பட்டியலில் விண்மீன் ஆளுமைகள் டோரானும் பெய்டாவும் இருக்கிறார்கள். 406 00:33:59,831 --> 00:34:03,627 பெய்டா, கேப்டன் நம்முடைய பிளஸ்-ஒன் ஆக இருக்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன். 407 00:34:08,172 --> 00:34:10,050 ஹேரி செல்டன் யார் என்று உனக்குத் தெரியுமா? 408 00:34:10,634 --> 00:34:11,635 இல்லை. 409 00:34:12,302 --> 00:34:15,931 அவர் நூற்றாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார், ஆனால் அடிக்கடி மீண்டும் தோன்றுகிறார். 410 00:34:17,599 --> 00:34:20,893 பேரரசு தன் அழிவை தானே தேடிக்கொள்வதாக அவர் சொன்னார். 411 00:34:20,978 --> 00:34:25,815 நாங்கள் அழிவை தள்ளிப்போட்டோம், ஆனால் தொடர்ந்து அழிவை நோக்கிச் சென்றோம். 412 00:34:25,899 --> 00:34:27,442 புதிய விஷயம் என்னவென்றால், 413 00:34:29,235 --> 00:34:32,989 சில வாரங்களுக்குள் எல்லாம் அழியப் போகிறது என்று எங்களுக்குத் தெரியும். 414 00:34:43,792 --> 00:34:45,377 சீக்கிரத்தில். 415 00:34:45,960 --> 00:34:47,588 அது எப்படி ஒருவருக்குத் தெரியும்? 416 00:34:48,714 --> 00:34:52,259 ஏனென்றால் எதிர்காலத்தை எப்படி கணிப்பது என்பதை ஹேரி செல்டன் கண்டுபிடித்தார். 417 00:34:53,760 --> 00:34:56,179 பிறகு அதை எப்படி கணிப்பது என்று எங்களுக்கும் கற்றுக்கொடுத்தார். 418 00:34:59,683 --> 00:35:00,851 நீ அதை நம்புகிறாயா? 419 00:35:00,934 --> 00:35:02,561 அவர்கள் அதை நம்புகிறார்கள். 420 00:35:02,644 --> 00:35:05,480 அதைத் தடுக்க முடியும் என்று நினைக்கும் அளவுக்கு என் சகோதரர்களுக்கு கர்வம் இருக்கிறது. 421 00:35:06,106 --> 00:35:07,107 எனக்கு இல்லை. 422 00:35:08,108 --> 00:35:11,445 எப்படியிருந்தாலும், விஷயங்கள் மிகவும் மோசமடையப் போகின்றன. 423 00:35:12,404 --> 00:35:15,616 அது நடக்கும்போது நான் இங்கே இருக்க விரும்பவில்லை. 424 00:35:17,826 --> 00:35:19,786 நான் மைகோஜென்னுக்குப் போக விரும்புகிறேன். 425 00:35:21,955 --> 00:35:24,333 உன்னைப் பெற்ற இடத்தை நான் பார்க்க விரும்புகிறேன். 426 00:35:27,628 --> 00:35:28,670 என்ன? 427 00:35:30,255 --> 00:35:32,633 நான் உன்னோடு தனியாக பேசலாமா? 428 00:35:33,467 --> 00:35:34,468 இல்லை. 429 00:35:35,052 --> 00:35:37,471 - நான் போகிறேன். - இல்லை, இது உன் வீடும்தான். 430 00:35:38,388 --> 00:35:40,516 இவள் இங்கேதான் இருப்பாள். 431 00:35:41,266 --> 00:35:44,728 நல்லது. அவள் என் மன்னிப்பைக் கேட்கலாம். 432 00:35:57,282 --> 00:36:00,744 நீ எப்போதும் ரேடியண்ட் மீதும், அதன் மீதான எங்கள் நம்பிக்கை மீதும் அவநம்பிக்கை கொண்டிருக்கிறாய். 433 00:36:02,162 --> 00:36:04,414 நீ செய்ததும் சரிதான் என்று இப்போது எனக்குத் தெரிகிறது. 434 00:36:05,165 --> 00:36:06,291 அதற்கு என்னை மன்னித்துவிடு. 435 00:36:07,626 --> 00:36:09,378 மாபெரும் மத்தியஸ்தர். 436 00:36:11,463 --> 00:36:14,591 ஒரு முறையாவது என்னிடமும் மன்னிப்பு கேட்கப்படுவதில் மகிழ்ச்சி. 437 00:36:16,260 --> 00:36:17,845 சரி, நான் உதவ விரும்புகிறேன். 438 00:36:17,928 --> 00:36:20,264 இதன் பாரம் உன் தோள்களில் மீது மட்டும் இருக்கக் கூடாது. 439 00:36:20,347 --> 00:36:24,810 எப்படியும் உனக்கு அது பிடிக்கவில்லை, எனவே அதை உனக்காக என் தோள்களில் சுமக்கிறேன். 440 00:36:26,353 --> 00:36:28,230 இந்த சறுக்கல் தொடங்கியபோது, நாம்… 441 00:36:29,648 --> 00:36:32,818 அறிவாற்றல் வீழ்ச்சி சீக்கிரம் தொடங்கப்படுவதைப் பார்த்தோம், 442 00:36:33,735 --> 00:36:36,864 ஒரு டே அது நடக்கும் நேரத்தை சரிசெய்தான். 443 00:36:37,573 --> 00:36:42,911 நம் எலோருடைய வாழ்நாளின் அளவையும் குறைப்பதன் மூலம். 444 00:36:42,995 --> 00:36:44,329 எனவே… 445 00:36:45,914 --> 00:36:48,000 ஒரு டேவால் அதை மீண்டும் சரிசெய்ய முடியும். 446 00:36:51,837 --> 00:36:57,092 சில மாதங்களுக்கு வாழ்நாள் நீட்டிப்பை அனுமதிப்பதன் மூலம். 447 00:36:59,553 --> 00:37:01,305 இது தீர்க்கப்படும் வரை. 448 00:37:04,516 --> 00:37:06,643 நாம் எல்லோரும் அப்படியொரு அற்புதமான நடிகர்கள், இல்லையா? 449 00:37:08,061 --> 00:37:09,897 நாம் ஒருபோதும் மேடையேறாதது வெட்கக்கேடு. 450 00:37:14,318 --> 00:37:15,652 முதலில் டெமர்ஸலைக் கேட்டீர்களா? 451 00:37:17,196 --> 00:37:19,823 என்னிடம் கெஞ்சிக்கொண்டு வருகிறீர்கள் என்றால், அது அதை மறுத்திருக்க வேண்டும். 452 00:37:22,659 --> 00:37:27,039 நம் அறிவாற்றல் சீக்கிரமாக வீழ்ச்சியடைவதால், நாம் சீக்கிரமாக அழிக்கப்படுகிறோம். 453 00:37:27,748 --> 00:37:31,168 அது இயற்கைக்கு மாறானதாக தோன்றினால், நல்லது. 454 00:37:32,419 --> 00:37:34,421 நம்மிடம் இயற்கையான எதுவும் இல்லை. 455 00:37:36,173 --> 00:37:38,926 நாம் ராஜாக்கள் போல உடையணிந்த பொம்மைகள். 456 00:37:39,968 --> 00:37:41,136 அரக்கர்கள். 457 00:37:48,101 --> 00:37:49,102 பாருங்கள். 458 00:37:50,938 --> 00:37:51,939 பார்த்தீர்களா? 459 00:37:52,814 --> 00:37:55,317 நட்பான நேனைட்கள் தங்கள் வேலையைச் செய்வதைப் பாருங்கள். 460 00:38:11,542 --> 00:38:12,543 இதோ. 461 00:38:13,669 --> 00:38:16,964 பொம்மை மீண்டும் தைக்கப்பட்டுவிட்டது. 462 00:38:30,269 --> 00:38:32,104 டே வரப்போவதில்லை, இல்லையா? 463 00:38:32,855 --> 00:38:34,731 நான் அப்படி நினைக்கவில்லை, பேரரசே. 464 00:38:37,150 --> 00:38:38,610 இறந்தது யார்? 465 00:38:38,694 --> 00:38:41,613 டே மீது எனக்கு இருந்த ஒருவித மரியாதை. 466 00:38:42,573 --> 00:38:44,074 என் சகோதரருக்கு சுத்தமான ஆடைகளை கொண்டு வா. 467 00:38:45,200 --> 00:38:47,870 நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றாக இருப்பேன் என்று நம்புகிறேன். 468 00:38:47,953 --> 00:38:51,498 பாரம்பரியம் அல்லது கடமை காரணமாக அவர் வர மாட்டார் என்று எனக்குத் தெரியும், ஆனால்… 469 00:38:53,208 --> 00:38:56,420 எனக்குள் ஏதோவொன்று, அன்பால் பதவியேற்புக்கு வருவார் என்று நம்பியது. 470 00:38:57,087 --> 00:38:58,463 நீ சிறந்ததற்கு தகுதியானவன். 471 00:39:00,465 --> 00:39:03,385 என்னை டேவாக பதவிப்பிரமாணம் செய்துவைத்த க்ளியோன் சகோதரரைவிட அதிகமாக அப்பாவாக இருந்தார். 472 00:39:05,095 --> 00:39:07,806 அவர் என்னிடம் மைய சிம்மாசனத்தை ஒப்படைத்தபோது அதில் அக்கறை இருந்தது. 473 00:39:10,475 --> 00:39:13,854 நம் சகோதரனுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தபோது, அவன் பேரழிவை நோக்கி போவது எனக்குத் தெரிந்தது. 474 00:39:17,524 --> 00:39:20,402 இருந்தாலும் உனக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பதில் நான் பெருமைப்படுவேன். 475 00:39:24,072 --> 00:39:26,408 தூதர் க்வென்டும் நானும் இன்றிரவு குடிக்கப் போகிறோம். 476 00:39:26,491 --> 00:39:27,993 நீயும் இணைந்துகொள்ள விரும்புகிறேன். 477 00:39:29,411 --> 00:39:31,038 அவள் எனக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கிறாள். 478 00:39:31,121 --> 00:39:32,289 நான் ஒப்புக்கொள்கிறேன். 479 00:39:33,707 --> 00:39:37,794 நமக்கான காலம் நிஜமாகவே குறுகியதாக இருந்தால், இறுதியில் நண்பர்களைக் கொண்டிருப்பது நல்லது. 480 00:39:39,046 --> 00:39:40,547 இந்தக் கடைசி நாட்களில்… 481 00:39:41,507 --> 00:39:43,383 என்னால் முடிந்ததை நான் உனக்குக் கொடுப்பேன். 482 00:39:44,343 --> 00:39:46,094 நீ க்வென்டை வசீகரிக்கவும், அவளோடு நட்பாகவும் உனக்கு உதவுவேன். 483 00:39:46,178 --> 00:39:47,179 அதோடு… 484 00:39:48,680 --> 00:39:51,099 நான் யாரிடமும் சொல்லாத வேறொரு பரிசு இருக்கிறது. 485 00:39:51,725 --> 00:39:53,143 அது என்ன? 486 00:39:57,606 --> 00:39:59,107 சரியான நேரத்தில் சொல்கிறேன். 487 00:40:00,359 --> 00:40:02,194 கண்டிப்பாக டெமர்ஸலுக்குத் தெரிந்திருக்கும். 488 00:40:02,277 --> 00:40:06,490 இல்லை. நான் டெமர்ஸலுக்குத் தெரியாமல் வைத்திருக்கும் ஒரே விஷயம் அதுதான். 489 00:40:06,573 --> 00:40:09,243 எது வந்தாலும் உன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒன்று. 490 00:40:11,870 --> 00:40:15,332 "ஒரு டான் இன்று டேவாக பதவியேற்கிறான். 491 00:40:15,999 --> 00:40:19,336 நீல வானத்தில் ஒரு பிரகாசமான சூரியன் போல." 492 00:40:21,380 --> 00:40:28,053 "பேரரசுக்கு உன் ஞானமும் நம்பிக்கையும் நீண்ட காலத்திற்கு உள்ளிருந்தே வெளிச்சம் தரட்டும்." 493 00:40:29,513 --> 00:40:30,764 நன்றி. 494 00:40:34,852 --> 00:40:35,853 கச்சிதமாக இருக்கிறது. 495 00:40:39,565 --> 00:40:42,985 நீண்ட காலத்திற்கு இது தேவைப்படாது என்று நான் நினைத்தேன், 496 00:40:43,068 --> 00:40:47,573 ஆனால் சமீபத்தில் வெளிப்பாடுகள் எங்கள் காலவரிசையை முன்னோக்கி நகர்த்திவிட்டது. 497 00:40:47,656 --> 00:40:51,285 எல்லாம் நீங்கள் கேட்டபடியே இருக்கிறது, பேரரசே. 498 00:40:51,368 --> 00:40:53,745 சரி, அப்படியென்றால் டானின் ஆட்சி வலுவானது என்பதை 499 00:40:53,829 --> 00:40:55,914 உறுதிப்படுத்திக்கொண்டு நான் ஓய்வு பெறலாம். 500 00:40:57,082 --> 00:40:58,166 அது வேலை செய்தால். 501 00:41:01,211 --> 00:41:03,255 அது வேலை செய்யுமா? 502 00:41:04,882 --> 00:41:08,343 உங்கள் பெயர் மற்றும் மகிமையால், அது செய்கிறது, பேரரசே. 503 00:41:08,969 --> 00:41:11,889 நெவாகுலாதான் அதன் வகையில் முதாவது. 504 00:41:11,972 --> 00:41:14,016 ஒரு பிளாக் ஹோல் குண்டு. 505 00:41:14,766 --> 00:41:20,022 நாம் பயன்படுத்தும் சக்தி அந்த பெரும் நட்சத்திரத்தின் கட்டுப்பாடற்ற சுழற்சியிலிருந்து வருகிறது. 506 00:41:20,647 --> 00:41:26,653 நாம் இங்கே நிற்கும் ஒவ்வொரு நொடியும், அது நூற்றுக்கணக்கான முறை சுழன்றிருக்கும். 507 00:41:29,198 --> 00:41:32,659 பிளாக் ஹோலிடம் இருந்து தப்பிக்க முடியாது. 508 00:41:32,743 --> 00:41:37,706 அதற்குள், நேரமும் இடமும் உடைக்கப்படுகின்றன. 509 00:41:38,457 --> 00:41:42,419 ஆனால் வெளிப்புறப் பகுதி, எர்கோஸ்பியர், 510 00:41:42,503 --> 00:41:46,757 அதில் துளையிட்டு, அதைப் பயன்படுத்தலாம். 511 00:41:46,840 --> 00:41:50,093 நாம் அதில் மின்காந்த கதிர்களைப் பாய்ச்சினால், 512 00:41:50,636 --> 00:41:54,556 நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் ஒளித் துளிகளான ஃபோட்டான்கள் 513 00:41:54,640 --> 00:41:57,142 விண்வெளியை கிழித்துக்கொண்டு வரும். 514 00:41:57,851 --> 00:42:00,479 அவை தெய்வீக நிலைக்குத் திரும்பிவிட்டன. 515 00:42:00,562 --> 00:42:03,565 ஆனால் அவை ஒவ்வொரு நொடியும் கூடிக்கொண்டே, தயாராகின்றன. 516 00:42:04,316 --> 00:42:10,864 பிறகு, திருடப்பட்ட நெருப்பாலும், அதீத கதிர்வீச்சு ஆற்றலாலும் தொடப்படும்போது, 517 00:42:10,948 --> 00:42:15,827 நாம் தாங்க முடியாத சக்தியுடன் விண்வெளியில் எந்த தூரத்தையும் அடையலாம். 518 00:42:15,911 --> 00:42:17,246 பாருங்கள். 519 00:42:56,910 --> 00:42:59,454 அங்கிருந்தது எவ்வளவு அழிந்தது? 520 00:42:59,538 --> 00:43:01,123 எதுவும் அழியவில்லை. 521 00:43:01,915 --> 00:43:05,919 அது இருக்கிறது. ஆனால் நிரந்தரமாக மாறிய நிலையில். 522 00:43:07,838 --> 00:43:11,341 நீ என்னை மகிழ்வித்துவிட்டாய். 523 00:43:12,426 --> 00:43:17,014 நான் உங்கள் கைகளில் மரணத்தை ஒப்படைக்கிறேன் என்பது மக்களுக்குத் தெரியும். 524 00:43:19,308 --> 00:43:21,101 இது தடுப்பதற்கான ஒன்றுதான். 525 00:43:21,727 --> 00:43:23,645 மிகவும் அசாதாரணமான சூழ்நிலைகளில் 526 00:43:23,729 --> 00:43:26,273 டானால் மட்டுமே பயன்படுத்தப்படுவதற்காக. 527 00:43:27,733 --> 00:43:31,445 ஆனால் மிகவும் அசாதாரணமான சூழ்நிலை வந்துகொண்டிருக்கலாம். 528 00:43:37,409 --> 00:43:41,163 எனவே, இண்ட்பரை பார்த்து, பேச உங்களுக்கு நேரம் கிடைத்ததா, 529 00:43:41,246 --> 00:43:45,626 அல்லது கால்கனில் இருக்கும் கேசினோ சிப்களுக்காக நேரத்தை வீணடிப்பதில் மும்முரமாக இருக்கிறானா? 530 00:43:46,793 --> 00:43:48,879 கால்கனின் வீழ்ச்சி ஃபவுண்டேஷனுக்கு 531 00:43:48,962 --> 00:43:51,673 பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதை நான் உறுதிப்படுத்தியிருக்கிறேன். 532 00:43:51,757 --> 00:43:53,342 இண்ட்பருக்கு எதுவும் தெரியாது. 533 00:43:53,425 --> 00:43:55,135 சரி, நிச்சயமாக அதுதான் அவனுக்கான நற்பெயர். 534 00:43:55,219 --> 00:43:58,597 வால்ட் விழிக்கும்போது நாம் இன்னும் தெரிந்துகொள்வோம் என்று நினைக்கிறேன். 535 00:43:59,389 --> 00:44:01,266 அது விழித்துவிட்டது, சரிதானே? 536 00:44:02,601 --> 00:44:06,146 எப்போதும் உங்களுக்கு சந்தேகத்துக்குரிய விதத்தில் நிறைய தெரிந்திருக்கிறது, நண்பரே. 537 00:44:06,230 --> 00:44:09,024 ஆம், எங்களிடம் எங்கள் சோர்ஸ்கள் இருக்கிறார்கள். 538 00:44:10,484 --> 00:44:11,485 இவருடைய வெட்கம் எனக்குப் பிடிக்கும். 539 00:44:14,071 --> 00:44:16,949 கால்கனின் உரிமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 540 00:44:18,784 --> 00:44:21,495 ஆனால் அதைக் கைப்பற்றிய கொள்ளையன் பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. 541 00:44:22,538 --> 00:44:24,665 அவன் இதுவரை யாரிடமும் அந்தக் கிரகத்தை ஒப்படைக்கவில்லை, 542 00:44:24,748 --> 00:44:28,085 அவனே அதை வைத்துக்கொள்ள விரும்புகிறானோ என்று நான் யோசிக்கத் தொடங்குகிறேன். 543 00:44:28,168 --> 00:44:32,798 எதற்காக இந்த கவலை ஏற்படுகிறது? கால்கனின் மக்களுக்காகவா? 544 00:44:34,800 --> 00:44:35,801 இல்லை. 545 00:44:36,343 --> 00:44:39,137 இல்லை, நான் இன்னும் பேரரசுதான். எனக்கு எங்களைப் பற்றி மட்டும்தான் கவலை. 546 00:44:41,098 --> 00:44:42,391 நான் தயாராக இருக்க விரும்புகிறேன். 547 00:44:44,726 --> 00:44:46,311 ஓ, நீ தயாராக இருப்பாய். 548 00:44:47,271 --> 00:44:48,313 நான் உறுதியாகச் சொல்கிறேன். 549 00:44:53,443 --> 00:44:55,362 சரி, நான் சொல்ல விரும்பியது அவ்வளவுதான். 550 00:44:55,445 --> 00:44:59,116 எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை, எனவே நான் உங்களை உங்கள் பிராண்டிகளுடன் விட்டுவிட்டு கிளம்புகிறேன். 551 00:45:03,704 --> 00:45:04,872 பேரரசே? 552 00:45:06,874 --> 00:45:11,837 சகோதரர் டான், பேரரசுக்கு விஷயங்கள் தெரியும், பெரும்பாலும் தெரிந்திருக்க வேண்டியதைவிட அதிகம். 553 00:45:11,920 --> 00:45:14,006 எனவே நீங்கள் கவலைப்படும்போது, நானும் கவலைப்படுகிறேன். 554 00:45:14,089 --> 00:45:16,049 நிஜமாகவே நீங்கள் எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? 555 00:45:17,676 --> 00:45:20,846 சாத்தியமில்லாத விஷயங்களைச் செய்யக்கூடிய இந்த மியூல் போன்றவர்களைப் பற்றி 556 00:45:20,929 --> 00:45:22,514 நான் கவலைப்படுகிறேன். 557 00:45:23,682 --> 00:45:25,392 அதைத்தானே செல்டன் கற்பிக்கிறார்? 558 00:45:25,475 --> 00:45:28,562 அல்லது எங்கள் நட்புக்காகவும் பிராண்டிக்காகவும் அதை ஒதுக்கிவைத்துவிட்டீர்களா? 559 00:45:30,480 --> 00:45:33,233 செல்டனின் போதனைகளைத்தான் என் வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறேன். 560 00:45:34,026 --> 00:45:36,445 அவற்றுக்கு சேவை செய்ய ஒரு அந்நிய கிரகத்தில் வாழ்கிறேன். 561 00:45:38,447 --> 00:45:40,157 நான் புண்படுத்த நினைக்கவில்லை. 562 00:45:40,240 --> 00:45:42,743 ஆனால் வருந்துகிறேன், நான்… எனக்கு ஒரு சந்திப்பு இருக்கிறது. 563 00:46:33,585 --> 00:46:34,711 மியூல். 564 00:46:35,462 --> 00:46:37,965 அந்த பெயரைக் கேட்டவுடன் உன் அழைப்பை எதிர்பார்த்தேன். 565 00:46:39,174 --> 00:46:41,510 பேரரசே, உன்னை பயனுள்ளவராக மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது. 566 00:48:10,474 --> 00:48:12,476 வசனத் தமிழாக்கம் அருண்குமார் 566 00:48:13,305 --> 00:49:13,356 Watch Online Movies and Series for FREE www.osdb.link/lm