"Camp Snoopy" Camp Crush/Counselor for a Day
ID | 13193156 |
---|---|
Movie Name | "Camp Snoopy" Camp Crush/Counselor for a Day |
Release Name | Camp.Snoopy.S01E11.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS |
Year | 2024 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 32621957 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
2
00:01:00,686 --> 00:01:02,980
“முகாம் கிரஷ்.”
3
00:01:05,941 --> 00:01:08,151
எனக்கு ஒரு பிரச்சினை, மார்ஸி.
4
00:01:08,777 --> 00:01:10,153
அது நச்சுப் படர்க்கொடியா?
5
00:01:10,237 --> 00:01:11,738
அல்லது நச்சுக் கருங்காலி மரமா?
6
00:01:11,822 --> 00:01:13,448
பயங்கரமான நச்சு கொண்ட பூச்ச மரமா?
7
00:01:13,532 --> 00:01:16,368
கடைசியாக இருப்பது உண்மையானது இல்லை
என நினைக்கிறேன்.
8
00:01:16,451 --> 00:01:19,872
தாவரங்கள் விஷயத்தில்
எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
9
00:01:19,955 --> 00:01:23,458
நீ விசித்திரமானவள், மார்ஸி.
ஆனால் பிரச்சினை அது இல்லை.
10
00:01:23,542 --> 00:01:25,836
என் பிரச்சினை இன்னும் மோசமானது.
11
00:01:26,336 --> 00:01:28,964
சக்கிற்கு என் மீது கிரஷ் உள்ளது என நினைக்கிறேன்.
12
00:01:29,047 --> 00:01:31,258
எதை வைத்து அப்படிச் சொல்கிறாய், சார்?
13
00:01:31,341 --> 00:01:33,594
இதற்கு மேலும் வெளிப்படையாகத் தெரிய வாய்ப்பில்லை.
14
00:01:34,720 --> 00:01:36,096
இனிய நாளாக உள்ளது, இல்லையா?
15
00:01:40,976 --> 00:01:43,812
அது விதிக்கப்பட்டது, சார்.
16
00:01:44,688 --> 00:01:48,984
அது மோசமில்லை எனில்,
கோடைக்கால பண்ணை நடனமும் வருகிறது.
17
00:01:49,067 --> 00:01:51,570
சக் நிச்சயமாக நடனமாடுவதற்கு என்னை
அழைப்பான்.
18
00:01:51,653 --> 00:01:54,865
நான் மறுக்கும்போது, அவன் மிகவும்
விரக்தியடைவான்.
19
00:01:54,948 --> 00:01:57,618
நீ எப்போதும் அவனுடன் நடனமாடலாம்.
20
00:01:58,785 --> 00:02:01,788
இல்லை. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
21
00:02:02,289 --> 00:02:04,458
சக் கனிவான இதயம் கொண்டவன்.
22
00:02:04,541 --> 00:02:08,377
அவன் இப்போதும் கூட என்னைப் பற்றி
நினைத்துக்கொண்டிருப்பான்.
23
00:02:10,672 --> 00:02:13,217
பலோனி சாண்ட்விச்சைவிடச் சிறப்பானது எதுவுமில்லை.
24
00:02:14,593 --> 00:02:16,094
இருவரும் கேளுங்கள்.
25
00:02:17,054 --> 00:02:20,098
பண்ணை நடனத்திற்குத் தயார் செய்வதன்
பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
26
00:02:20,182 --> 00:02:23,435
சார்லி பிரவுன், நீதான் அலங்கார அணியை
வழிநடத்த வேண்டும்.
27
00:02:23,519 --> 00:02:25,938
ஸ்நூப்பி, எனக்கு உன் உதவியும் வேண்டும்.
28
00:02:29,191 --> 00:02:33,403
இதில் உன் பீகிள் ஸ்கௌட்டிற்கான பேட்ஜ்
இருக்கலாம் என்று சொன்னால் வருவாயா?
29
00:02:36,532 --> 00:02:37,783
என் பின்னால் வா.
30
00:02:46,917 --> 00:02:48,085
அடச்சே.
31
00:02:49,503 --> 00:02:52,923
ஸ்ப்ரிங் லேக்கில் அந்த நடனத்திற்கு முன்
பண்ணைக்கு வைக்கோல் பயணம் நடக்கும்,
32
00:02:53,423 --> 00:02:55,592
ஆனால் இந்த டிராக்டர் வேலை செய்யவில்லை.
33
00:02:56,218 --> 00:03:00,514
எங்களுக்காக இதை சரிசெய்வதற்கான மெக்கானிக் பேட்ஜ்
எதுவும் உனக்குக் கிடைக்க வழி இருக்க வேண்டும்.
34
00:03:17,823 --> 00:03:21,368
உன் முகாம்-கிரஷ் தியரிக்கு ஆதரவாக
இன்னும் ஆதாரம் வேண்டும்.
35
00:03:21,451 --> 00:03:25,914
உதாரணத்திற்கு, சார்லஸ் உன்னுடன் நேரம்
செலவழிக்க காரணம் கண்டறிய முயல்கிறானா?
36
00:03:26,415 --> 00:03:29,585
பண்ணை நடனத்திற்கான அலங்காரத்திற்கு, லூசி
என்னைப் பொறுப்பாக அமர்த்தியிருக்கிறாள்.
37
00:03:29,668 --> 00:03:31,295
நீங்கள் இருவரும் உதவ விரும்புகிறீர்களா?
38
00:03:33,088 --> 00:03:34,590
நிச்சயமாக.
39
00:03:34,673 --> 00:03:36,842
அற்புதம். உங்களை
பண்ணையில் சந்திக்கிறேன்.
40
00:03:38,969 --> 00:03:40,929
உன் கேள்விக்கு விடை கிடைத்ததா?
41
00:03:42,222 --> 00:03:44,266
அவன் என்னையும்தான் அழைத்தான்.
42
00:03:44,349 --> 00:03:46,059
முடிவு தெரியாததாக உள்ளது.
43
00:03:46,935 --> 00:03:50,105
இந்த ரொமான்டிக் நாடகத்தை
நான் வெறுக்கிறேன்.
44
00:03:56,486 --> 00:04:00,157
அலங்கரிப்பதில் உதவ, சார்லஸ் நிறைய பேரை
அழைத்துள்ளான் போலத் தெரிகிறது.
45
00:04:00,240 --> 00:04:01,909
நமக்கு இன்னும் ஆதாரம் தேவை.
46
00:04:01,992 --> 00:04:05,454
உதாரணத்திற்கு, அவன் உன்னருகே இருக்கும்போது
என்ன பேசுவதெனத் தெரியாமல் இருப்பானா?
47
00:04:06,288 --> 00:04:07,539
கவனியுங்கள்.
48
00:04:08,624 --> 00:04:11,960
உங்களுக்குத் தெரிந்தது போல, நாம் பண்ணை
நடனத்திற்காக அலங்கரிக்கிறோம்...
49
00:04:14,463 --> 00:04:17,757
பொறுப்பில் இருக்கும் நபராக,
50
00:04:17,841 --> 00:04:21,762
உத்வேகமளிக்கும் சில வார்த்தைகளைக்
கூறலாம் என நினைத்தேன்.
51
00:04:21,845 --> 00:04:24,848
குட் லக்?
52
00:04:24,932 --> 00:04:28,393
இல்லை. இதைச் செய்து முடியுங்கள்?
53
00:04:29,102 --> 00:04:30,437
இதோ வந்துவிட்டது.
54
00:04:31,188 --> 00:04:33,607
அந்த பாவப்பட்டவன் என்னை மிகவும் நேசிக்கிறான்.
55
00:04:34,358 --> 00:04:36,985
அவன் இந்த ஊக்கமளிக்கும் உரையைக்
கண்டிப்பாகச் சொதப்புகிறான்.
56
00:04:37,069 --> 00:04:42,282
வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல...
இருங்கள், அவர் என்ன கூறினார்?
57
00:04:44,618 --> 00:04:46,662
நாம் இப்போது அலங்கரிப்பதைத்
தொடங்கலாமா?
58
00:05:18,318 --> 00:05:23,657
லூசி, ஒருவருக்கு நம் மீது கிரஷ் உள்ளதா என்று
கண்டறிய எதுவும் வழி தெரியுமா?
59
00:05:24,157 --> 00:05:27,703
அந்த விஷயத்தில் நான் கைதேர்ந்தவள்.
60
00:05:27,786 --> 00:05:31,748
உங்களுக்குத் தெரியும், ஷ்ரூடருக்கு என் மீது
பல ஆண்டுகளாக கிரஷ் உள்ளது என்று.
61
00:05:36,962 --> 00:05:39,715
கண்டிப்பாக, அது எப்போதும்
வெளிப்படையாகத் தெரியாது.
62
00:05:39,798 --> 00:05:43,635
அந்த நபர் நமக்கு எப்போதும் சிறிய பரிசுகளைக்
கொடுத்தால், அது நிச்சயமான அறிகுறிதான்.
63
00:05:44,136 --> 00:05:45,846
நீ கொஞ்சம் பெருக்குகிறாயா?
64
00:05:46,388 --> 00:05:48,140
என்னால் அதை ஏற்க முடியாது, சக்.
65
00:05:48,223 --> 00:05:49,683
அது சரியாக இருக்காது.
66
00:05:51,602 --> 00:05:52,602
சரி.
67
00:05:52,936 --> 00:05:54,563
நானே பெருக்குகிறேன்.
68
00:05:56,857 --> 00:05:59,026
வேறு எதுவும் உள்ளதா, லூசில்?
69
00:06:00,819 --> 00:06:04,156
கிரஷ் உள்ளவர் அருகே நிதானமற்று
இருப்பது ஒரு பெரிய அறிகுறி.
70
00:06:45,697 --> 00:06:47,366
அந்த பீகிள் எங்கே?
71
00:06:53,539 --> 00:06:55,791
யேய், ஸ்நூப்பி! அருமை!
72
00:06:56,291 --> 00:06:58,460
- சரியான நேரம்தான்.
- ஹுரே!
73
00:07:09,096 --> 00:07:11,974
கடைசியாக நமக்கு இன்னும்
ஓர் ஆதாரம் தேவை.
74
00:07:12,057 --> 00:07:15,143
சார்லஸ் எப்போதும் உன்னை
நெருங்கி வர முயல்கிறானா?
75
00:07:24,528 --> 00:07:28,073
பார்த்தாயா? சக் எனக்கு மிக
அருகில் இருந்தான்.
76
00:07:28,156 --> 00:07:30,868
அறிகுறிகள் தெளிவாக உள்ளன.
இது கிரஷ்தான்.
77
00:07:30,951 --> 00:07:33,829
அவன் கண்டிப்பாக என்னை நடனமாட
அழைக்கப் போகிறான்.
78
00:07:33,912 --> 00:07:36,039
பிறகு நான் அவன் இதயத்தை நொறுக்க வேண்டியிருக்கும்.
79
00:07:36,540 --> 00:07:39,459
இது உதவுமா பார், டிராக்டர்
நின்றுவிட்டது.
80
00:07:39,543 --> 00:07:41,378
நாம் அங்கே போக மாட்டோம் என நினைக்கிறேன்.
81
00:07:44,173 --> 00:07:46,341
நான் உங்களை நம்பியிருக்கக் கூடாது.
82
00:07:48,218 --> 00:07:51,138
நமக்கு இனி டிராக்டர் தேவையில்லை.
83
00:07:51,221 --> 00:07:52,639
பண்ணை அங்குதான் உள்ளது.
84
00:07:54,892 --> 00:07:57,561
யேய்! அருமை!
வாருங்கள் ஆடலாம்.
85
00:08:02,900 --> 00:08:04,651
சக் விஷயத்தை என்ன செய்வது?
86
00:08:05,277 --> 00:08:08,822
அவனது உணர்வுகள் பலனளிக்காது என்பதை
சார்லஸிடம் நீ தெளிவாகக் கூறிவிட வேண்டும்.
87
00:08:09,323 --> 00:08:12,659
இதயம் நொறுங்குகிறதோ இல்லையோ,
அவன் அந்த நேர்மையைப் பாராட்டுவான்.
88
00:08:12,743 --> 00:08:14,536
நல்ல ஆலோசனை, மார்ஸி.
89
00:08:18,999 --> 00:08:21,793
உனக்கு என்னைப் பிடிக்கும்தானே, சக்?
90
00:08:22,669 --> 00:08:23,670
அப்படியா?
91
00:08:24,254 --> 00:08:25,714
ஆம், உனக்குப் பிடிக்கும்.
92
00:08:26,215 --> 00:08:28,842
ஆனால் நாம் நண்பர்கள், சக்.
அவ்வளவுதான்.
93
00:08:32,221 --> 00:08:33,221
அற்புதம்.
94
00:08:34,222 --> 00:08:37,768
உன்னுடன் நடனமாட ஒப்புக்கொள்கிறேன்,
ஆனால் நண்பர்களாக மட்டும்தான்.
95
00:08:38,268 --> 00:08:40,102
நீ என்னுடன் நடனமாட விரும்புகிறாயா?
96
00:08:40,187 --> 00:08:42,731
நண்பர்களாக. புரிகிறதா?
97
00:08:44,983 --> 00:08:46,985
நாம் இதைப் பற்றிப் பேசியதில் மகிழ்ச்சி.
98
00:08:47,069 --> 00:08:48,820
உன்னை நடனமாடும் தளத்தில் சந்திக்கிறேன்...
99
00:08:50,864 --> 00:08:52,407
நண்பர்களாக.
100
00:08:53,534 --> 00:08:55,994
என்ன நடக்கிறது என எனக்கு எப்போதும் தெரிவதில்லை.
101
00:09:00,707 --> 00:09:05,754
டிராக்டர் வெகு தூரம் செல்லவில்லை என்றாலும்,
நீங்கள் அதைச் சரிசெய்துவிட்டீர்கள்.
102
00:09:05,838 --> 00:09:09,174
எனவே நீங்கள் அந்த பேட்ஜை
வென்றுள்ளீர்கள் என்று அர்த்தம்.
103
00:09:28,944 --> 00:09:29,944
பீகிள் ஸ்கௌட் கையேடு
104
00:09:29,987 --> 00:09:31,989
“உங்களால்
பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா?
105
00:09:32,906 --> 00:09:34,533
சீக்கிரமாக எழுவது.”
106
00:09:40,247 --> 00:09:42,416
“பீகிள் ஸ்கௌட்
என்பவர் சீக்கிரம் எழுந்து,
107
00:09:42,499 --> 00:09:44,668
அன்றைய நாள் குறித்து
ஆர்வமாகவும் தயாராகவும் இருக்க வேண்டும்."
108
00:09:48,380 --> 00:09:51,300
“அவர்கள்
அந்த நாளை மகிழ்ச்சியுடனும்,
109
00:09:51,800 --> 00:09:55,762
உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும்
வரவேற்பார்கள்."
110
00:11:09,711 --> 00:11:11,296
இதை நிறுத்துகிறாயா?
111
00:11:11,380 --> 00:11:14,550
நாங்கள் அங்கே தூங்க முயல்கிறோம்.
112
00:11:48,333 --> 00:11:49,333
ராணி நாகம்!
113
00:11:49,376 --> 00:11:51,253
நான் ராணி நாகத்தைப் பார்த்தேன்!
114
00:11:51,336 --> 00:11:55,382
கடைசியாகச் சொல்கிறேன்,
இங்கே பாம்புகள் கிடையாது.
115
00:11:55,465 --> 00:11:57,593
ராணியோ வேறெதுவோ.
116
00:11:59,636 --> 00:12:02,264
அது இங்கேதான் இருந்தது.
117
00:12:19,448 --> 00:12:23,619
உண்மையில், தூங்கும் பையானது
ராணி நாகம் போலதான் உள்ளது.
118
00:12:23,702 --> 00:12:25,370
அடச்சே.
119
00:12:28,123 --> 00:12:29,833
“ஒருநாள்-கவுன்சிலர்.”
120
00:12:33,795 --> 00:12:37,132
இன்று டின்னரில் நிறைய உற்சாகம்
இருப்பது போலத் தெரிகிறது.
121
00:12:37,216 --> 00:12:39,092
இந்த ஸ்பகட்டியால்தான் என்று நினைக்கிறாயா?
122
00:12:39,176 --> 00:12:41,261
மார்ஸி, நாளை ஒருநாள்-கவுன்சிலராக
123
00:12:41,345 --> 00:12:45,974
எந்தக் கேம்பர் இருக்கப் போகிறார் என்பதற்கான
குலுக்கல் இன்றுதான்.
124
00:12:46,892 --> 00:12:48,185
நீ மறந்துவிட்டாயா?
125
00:12:48,268 --> 00:12:49,895
மறந்திருக்க வேண்டும்.
126
00:12:49,978 --> 00:12:53,982
உன் பெயர் வந்தால் என்ன செய்யப் போகிறாய்,
சார்லி பிரவுன்?
127
00:12:54,066 --> 00:12:56,610
நாள் முழுவதும் நடக்கும் பேஸ்பால்
போட்டியை நடத்துவேன்.
128
00:12:56,693 --> 00:12:58,111
நீ என்ன செய்வாய், பிக்பென்?
129
00:12:58,195 --> 00:13:02,449
இரண்டே வார்த்தை: எல்லையில்லா ஸ்மோர்ஸ்.
130
00:13:05,410 --> 00:13:09,831
யார் வென்றாலும், தங்கள் புதிய பொறுப்பை
மும்முரமாக எடுத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
131
00:13:11,708 --> 00:13:14,044
அனைவரும் அமைதியாக இருங்க!
இது குலுக்கலுக்கான நேரம்!
132
00:13:16,588 --> 00:13:18,048
வெற்றி பெற்றவர்...
133
00:13:19,466 --> 00:13:21,301
மார்ஸியா?
134
00:14:14,354 --> 00:14:16,690
கடவுளே, மார்ஸி, நீ இன்னும்
தூங்காமல் இருக்கிறாய்.
135
00:14:16,773 --> 00:14:19,151
நாளைக்கான திட்ட அட்டவணையை
இன்னும் முடிக்கவில்லை.
136
00:14:19,234 --> 00:14:21,945
அது சுலபமாக இருக்காது, ஆனால்
நாம் விரைவாக செயல்பட்டால்,
137
00:14:22,029 --> 00:14:25,407
அனைவருக்கும் ஏற்ற செயல்பாடுகளைச்
செய்ய முடியலாம்.
138
00:14:25,490 --> 00:14:30,245
”11:45 - 11:50 மணி வரை, பேஸ்பால் போட்டி.
139
00:14:30,329 --> 00:14:34,666
11:50 - 11:56 மணி வரை, நீர்ச்சறுக்கு.
140
00:14:34,750 --> 00:14:38,587
11:56 - 12:00 மணி வரை, எல்லையில்லா ஸ்மோர்ஸ்.”
141
00:14:38,670 --> 00:14:40,589
இது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.
142
00:14:40,672 --> 00:14:44,426
சரிதான். பயண நேரத்திற்கு நான் சில
நொடிகளைச் சேர்க்க வேண்டும்.
143
00:14:44,510 --> 00:14:47,846
மார்ஸி, ஒரு நாளைக்கு
கவுன்சிலராக இருப்பதன் நோக்கமே,
144
00:14:47,930 --> 00:14:50,432
நீ செய்ய விரும்பும் செயல்பாடுகளைத்
தேர்வுசெய்வதுதான்.
145
00:14:50,516 --> 00:14:51,683
எனக்குத் தெரியவில்லை.
146
00:14:51,767 --> 00:14:54,770
யாரும் ஏமாற்றமடைவதை நான்
விரும்பவில்லை.
147
00:14:54,853 --> 00:14:56,522
எதிர்மாறாக,
148
00:14:56,605 --> 00:15:00,984
நீ வேடிக்கையென நினைக்கும் விஷயங்களைச் செய்வது
அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
149
00:15:01,068 --> 00:15:02,236
எனக்குப் பிடிக்கும்.
150
00:15:02,319 --> 00:15:04,488
நிஜமாகவா? அப்படியா நினைக்கிறாய்?
151
00:15:08,367 --> 00:15:09,868
நன்றி, சார்லஸ்.
152
00:15:11,954 --> 00:15:13,163
எப்போதும் தயார்.
153
00:15:31,682 --> 00:15:33,183
நீங்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளீர்கள்
என நம்புகிறேன்.
154
00:15:33,267 --> 00:15:35,269
நான் நிறைய திட்டமிட்டுள்ளேன்.
155
00:15:35,352 --> 00:15:38,605
நாம் சில வேடிக்கையான
உடல் சார்ந்த செயல்பாட்டிலிருந்து தொடங்குவோம்.
156
00:15:39,231 --> 00:15:40,440
யோகா.
157
00:15:44,695 --> 00:15:46,780
யேய். யோகா.
158
00:15:49,783 --> 00:15:53,120
உங்கள் உள்ளாங்கால்கள் மூலமாக
ஆழமாக மூச்சை உள்ளிழுங்கள்.
159
00:15:53,203 --> 00:15:56,415
இருங்கள், நம் பாதங்களில்
நுரையீரல்கள் உள்ளனவா?
160
00:15:58,292 --> 00:16:02,379
இந்தப் பண்டைய நடைமுறையானது,
புத்துணர்ச்சியூட்டுவதுடன் அமைதியானதும் கூட.
161
00:16:02,462 --> 00:16:05,549
நாம் அரை மணிநேரமாக ஸ்ட்ரெட்ச் செய்கிறோம்.
162
00:16:05,632 --> 00:16:07,676
இந்தச் செயல்பாடு எப்போது தொடங்கும்?
163
00:16:07,759 --> 00:16:10,137
இதுதான் செயல்பாடு என நினைக்கிறேன்.
164
00:16:30,657 --> 00:16:33,911
சரி, சக கேம்பர்களே, இப்போது நமக்கு
வியர்ப்பதால்,
165
00:16:33,994 --> 00:16:36,205
இது இயற்கையுடன் விளையாடுவதற்கான நேரம்.
166
00:16:37,706 --> 00:16:39,791
நாம் கண்ணாமூச்சி ஆடப் போகிறோமா?
167
00:16:39,875 --> 00:16:41,126
கிட்டத்தட்ட.
168
00:16:41,210 --> 00:16:43,337
நாம் இந்த மரத்தண்டுகளில் உள்ள
வளையங்களை எண்ணி,
169
00:16:43,420 --> 00:16:45,547
இந்த மரங்களின் வயதைக் கணக்கிடப் போகிறோம்.
170
00:16:47,216 --> 00:16:49,134
இது எப்படிக் கிட்டத்தட்ட ஆகும்?
171
00:16:49,218 --> 00:16:50,928
இரண்டு விளையாட்டிலும் எண்ணுவது உள்ளது.
172
00:16:51,011 --> 00:16:53,764
இதைத் தொடங்கலாம்.
173
00:16:57,059 --> 00:16:58,894
உன் ஆலோசனைக்கு மீண்டும் நன்றி, சார்லஸ்.
174
00:16:58,977 --> 00:17:01,855
நீ இல்லாமல் நான் எந்தச் செயல்பாட்டையும்
தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்.
175
00:17:03,607 --> 00:17:04,775
பரவாயில்லை.
176
00:17:45,524 --> 00:17:49,278
இது சாதகம் தரும் ஆதிக்கத்திற்கான,
பயங்கர யுத்தத்தில், எதிராளியுடன்
177
00:17:49,361 --> 00:17:52,114
நேருக்கு நேர் மோதும் செயல்பாடாகும்.
178
00:17:52,614 --> 00:17:54,825
நிஜவுருவ அளவிலான அணி செஸ்.
179
00:17:57,369 --> 00:18:00,622
நீங்கள் அணிந்திருக்கும் சின்னங்கள்,
நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் காய்கள்.
180
00:18:00,706 --> 00:18:03,709
இந்தச் சிறிய ஒன்றுதான் ராணியா?
181
00:18:03,792 --> 00:18:06,420
லூசில், உண்மையில் நீ ஒரு சிப்பாய்.
182
00:18:07,129 --> 00:18:08,964
இதை மறுக்கிறேன்.
183
00:18:09,047 --> 00:18:12,009
நாம் உதைத்து விளையாட
பந்து எதுவும் உள்ளதா?
184
00:18:12,092 --> 00:18:16,096
இல்லை, ஆனால் ஜெயிப்பதற்கான உத்தியை மெதுவாகத்
திட்டமிட்டு, செயல்படுத்த அனுமதிக்கும்
185
00:18:16,180 --> 00:18:20,267
தனிப்பட்ட நகர்வுகளுக்கான விதிகள் உள்ளன.
186
00:18:20,350 --> 00:18:23,645
இந்த ஆட்டம் பெரும்பாலும் நிற்பதுதானா?
187
00:18:23,729 --> 00:18:26,273
ஆம், ஆனால் மூளை ஓடிக்கொண்டிருக்கும்.
188
00:18:28,734 --> 00:18:32,279
இருங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?
189
00:18:35,115 --> 00:18:37,910
வித்தியாசமான ஒன்றை நீங்கள் அனைவரும்
ரசிப்பீர்கள் என நினைத்தேன்.
190
00:18:37,993 --> 00:18:40,537
நான் அனைவரது தினத்தையும் நாசமாக்கிவிட்டேன்
என நினைக்கிறேன்.
191
00:18:45,042 --> 00:18:49,755
என்ன? இது வழக்கமான முகாம் செயல்பாடுகளின்
நாள் இல்லை. அதனால் என்ன?
192
00:18:49,838 --> 00:18:53,258
மார்ஸி இந்தக் கோடைக்காலம் முழுவதும் அவளுக்குப்
பிடிக்காததைச் செய்தாலும் கனிவாக இருந்தாள்.
193
00:18:53,342 --> 00:18:57,387
அவளுக்கான செயல்பாடுகளுடன் ஒரு நாள்
இருப்பது அவளுக்கு நன்றாக இருக்குமென நினைத்தேன்.
194
00:18:57,471 --> 00:18:59,556
அது கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கலாம்,
195
00:18:59,640 --> 00:19:02,434
ஆனால் அதை முயன்று பார்ப்பதுதான்
நம்மால் செய்ய முடிந்த சிறிய விஷயம்.
196
00:19:44,059 --> 00:19:46,895
நீ செய்ய முயன்றதைப் பாராட்டுகிறேன், சார்லஸ்,
197
00:19:46,979 --> 00:19:50,232
ஆனால் நான் என் முதல் திட்டப்படியே
செயல்பட்டிருக்க வேண்டும்.
198
00:19:50,315 --> 00:19:53,735
எனக்குத் தெரியவில்லை. நீ ஒரு விஷயத்தைப்
பார்க்க வேண்டும்.
199
00:19:56,321 --> 00:19:57,698
சிப்பாய்களே, ஒன்றுசேருங்கள்!
200
00:19:57,781 --> 00:19:59,783
நம்மை நீண்டகாலமாக ஒடுக்கியுள்ளனர்!
201
00:19:59,867 --> 00:20:02,828
உங்கள் ராணியை அவமதிக்கிறீர்கள்,
துரோகிகளே...
202
00:20:03,328 --> 00:20:04,371
ஹேய், மார்ஸி.
203
00:20:06,874 --> 00:20:09,710
நிஜவுருவ செஸ்ஸை ஆடிப் பார்க்கத்
தீர்மானித்தோம்,
204
00:20:09,793 --> 00:20:13,380
ஆனால் எங்கள் யாருக்கும் விதிகள் தெரியாது என்பதால்,
எங்கள் இஷ்டப்படி விளையாடுகிறோம்.
205
00:20:13,881 --> 00:20:15,090
அது பரவாயில்லை என நினைக்கிறேன்.
206
00:20:15,174 --> 00:20:17,134
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், பரவாயில்லை.
207
00:20:17,217 --> 00:20:18,677
அதைத்தான் நான் விரும்பினேன்.
208
00:20:19,595 --> 00:20:21,138
தாக்குங்கள்!
209
00:20:26,101 --> 00:20:27,728
நன்றி, சார்லஸ்.
210
00:20:49,875 --> 00:20:51,635
சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை
அடிப்படையாகக் கொண்டது
211
00:21:14,816 --> 00:21:16,818
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
212
00:21:19,905 --> 00:21:21,865
நன்றி, ஸ்பார்க்கி.
எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.
212
00:21:22,305 --> 00:22:22,309
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm