"Camp Snoopy" A Beagle Scout Prepares/Teach a Bird to Fish
ID | 13193166 |
---|---|
Movie Name | "Camp Snoopy" A Beagle Scout Prepares/Teach a Bird to Fish |
Release Name | Camp.Snoopy.S01E01.GERMAN.DL.HDR.2160p.WEB.h265-SCHOKOBONS |
Year | 2024 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 32494029 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
2
00:00:43,252 --> 00:00:45,754
“ஒரு பீகிள் ஸ்கௌட் தயாராகிறது.”
3
00:00:49,132 --> 00:00:51,385
எனக்கு ஆலோசனை வேண்டும், அண்ணா.
4
00:00:51,468 --> 00:00:55,097
உன்னுடன் கோடை முகாமுக்கு இந்த ஆண்டு
முதன்முறையாக வருகிறேன் என உனக்குத் தெரியும்,
5
00:00:55,180 --> 00:00:58,267
நான் முதன்முறையிலேயே நற்பெயர்
பெற விரும்புகிறேன்.
6
00:00:58,350 --> 00:01:02,896
நான் எடுத்து வர வேண்டியது சூஸி ஸ்னூஸியையா
அல்லது மிஸ்டர் பேரையா?
7
00:01:03,689 --> 00:01:05,774
கடவுளே, சாலி. எனக்குத் தெரியாது.
8
00:01:05,858 --> 00:01:10,362
நான் அக்கறையுள்ளவள், பிறரைப் பார்த்துக்கொள்ள
விரும்புபவள் என்பதை
9
00:01:10,445 --> 00:01:12,614
சூஸி ஸ்னூஸி என் சக கேம்பர்களுக்குக் காட்டும்,
10
00:01:12,698 --> 00:01:17,119
ஆனால் நான் காட்டு விலங்குகளுக்கு அஞ்ச மாட்டேன்
என்பதை மிஸ்டர் பேர் காட்டும்.
11
00:01:17,911 --> 00:01:19,580
ஏன் இரண்டையும் எடுத்து வரக் கூடாது?
12
00:01:20,581 --> 00:01:21,665
நல்ல பாயிண்ட்.
13
00:01:21,748 --> 00:01:24,626
முதன்முறையில் அதிக நற்பெயர் பெறுவதில் தவறில்லை.
14
00:01:28,088 --> 00:01:31,758
இதோ உலகப் புகழ்பெற்ற
பீகிள் ஸ்கௌட் தலைவர் வருகிறார்.
15
00:01:31,842 --> 00:01:34,136
இன்று சில சாகசங்களுக்குத் தயாராகிறாயா?
16
00:01:34,720 --> 00:01:36,555
சாகசம் பற்றிப் பேசும்போது,
17
00:01:36,638 --> 00:01:38,807
நான் விரைவில் கோடை முகாமுக்குச் செல்லப் போகிறேன்.
18
00:01:38,891 --> 00:01:42,269
எனவே நீ என்னுடன் நேரம் செலவழிக்க
விரும்பினால்,
19
00:01:42,352 --> 00:01:44,229
இதுதான் உனக்கான வாய்ப்பு.
20
00:01:51,778 --> 00:01:52,905
ஹலோ?
21
00:01:52,988 --> 00:01:54,114
ஆம்.
22
00:01:54,198 --> 00:01:57,492
விசித்திரமாக உள்ளது.
இது பீகிள் ஸ்கௌட் தலைமையகம்.
23
00:01:57,576 --> 00:02:00,037
என்ன கூறினீர்கள்? புரிகிறது.
24
00:02:00,871 --> 00:02:05,083
அப்படியா? ஓ, இல்லை.
அது மோசமான விஷயம்.
25
00:02:05,876 --> 00:02:08,211
ஆம், உங்களுக்கும் இனிய நாளாக அமையட்டும்.
26
00:02:10,088 --> 00:02:12,883
இதை எப்படிக் கூறுவது எனத்
தெரியவில்லை, ஸ்நூப்பி,
27
00:02:12,966 --> 00:02:16,053
ஆனால் உன் ட்ரூப் அவர்களுக்கு
அதிருப்தியளிப்பதாகக் கூறுகின்றனர்.
28
00:02:16,136 --> 00:02:17,471
எவ்வளவு அதிருப்தி?
29
00:02:17,554 --> 00:02:20,891
”பெரிய அவமானம்” என்றனர்.
30
00:02:21,517 --> 00:02:24,603
உங்களை அந்த நிறுவனத்திலிருந்து
வெளியேற்றுவதைப் பரிசீலிக்கின்றனர்,
31
00:02:24,686 --> 00:02:28,065
ஏனெனில் உன் ட்ரூப் போதுமான அளவில் பெர்ஃபார்மன்ஸ்
பேட்ஜ்களைப் பெறவில்லை.
32
00:02:31,443 --> 00:02:33,487
உன் ட்ரூப் எத்தனை பேட்ஜ்களைப் பெற்றுள்ளது?
33
00:02:40,494 --> 00:02:43,539
ஒன்றுமில்லையா? அது எப்படிச் சாத்தியம்?
34
00:03:48,687 --> 00:03:53,233
அந்த பேட்ஜ்களைப் பெற இந்தக் கோடைக்காலம் வரைதான்
நேரமுள்ளதாக தலைமையகம் கூறுகிறது.
35
00:03:53,317 --> 00:03:55,527
என்ன செய்யப் போகிறாய், ஸ்நூப்பி?
36
00:04:03,243 --> 00:04:07,039
ஓடிக்கொண்டே அலறுவதென்பது,
ஏதோ செய்வதாகத்தான் கணக்காகும்.
37
00:04:08,373 --> 00:04:12,586
அந்த கேவலமான போர்வையை கோடை முகாமுக்கு
எடுத்து வர மாட்டாய் என நம்புகிறேன்.
38
00:04:12,669 --> 00:04:15,297
அது எனக்கு அவமானமாக உள்ளது.
39
00:04:15,380 --> 00:04:17,298
இதை போர்வையாக நினைக்காதே.
40
00:04:17,382 --> 00:04:20,886
காட்டிற்குள் உயிர்பிழைக்கத் தேவையான
கருவியாக நினைத்துக்கொள்.
41
00:04:20,969 --> 00:04:23,305
இது கூடுதல் உடையாக இருக்கலாம்,
42
00:04:23,388 --> 00:04:27,267
ஏறுவதற்கான கயிறாகவோ மறைவிடமாகக் கூட
இருக்கலாம்.
43
00:04:27,351 --> 00:04:29,770
நெருப்பை உருவாக்க இதைப் பயன்படுத்தலாம்.
44
00:04:32,856 --> 00:04:35,651
நான் கோடை முகாமை எதிர்க்கவில்லை,
45
00:04:35,734 --> 00:04:39,404
ஆனால் இயற்கை பற்றி அதே அளவிற்கு
புத்தகத்தில் இருந்தும் தெரிந்துகொள்ளலாம்.
46
00:04:39,488 --> 00:04:42,241
மேலும் புத்தகத்தில் கொசுக்கள் இருக்காது.
47
00:04:42,324 --> 00:04:44,910
விளையாடுகிறாயா? முகாம்தான் சிறந்தது.
48
00:04:44,993 --> 00:04:47,538
ஹைக்கிங், நெருப்பில் ஹாட் டாக் சுடுவது.
49
00:04:47,621 --> 00:04:50,624
கனூயிங், நெருப்பில் ஹாட் டாக் சுடுவது.
50
00:04:50,707 --> 00:04:54,127
நீச்சலடிப்பது, நெருப்பில் ஹாட் டாக் சுடுவது.
51
00:04:55,754 --> 00:04:57,840
என்ன? எனக்கு ஹாட் டாக் பிடிக்கும்.
52
00:04:58,757 --> 00:05:01,426
கோடை முகாமில் நம் நற்குணங்களை வளர்க்கலாம்
என்று என் தாத்தா கூறுவார்.
53
00:05:01,969 --> 00:05:03,345
அதற்கு என்ன அர்த்தம்?
54
00:05:03,428 --> 00:05:06,139
பெரியவர்களால் எதையும் குறிப்பிட்டுச்
சொல்ல முடியாத போதிலும்,
55
00:05:06,223 --> 00:05:08,225
தங்களை புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்காகக்
கூறுவது போலும்.
56
00:05:13,605 --> 00:05:14,982
அவனுக்கு என்ன பிரச்சினை?
57
00:05:29,997 --> 00:05:31,582
பீகிள் ஸ்கௌட்
கையேடு
58
00:05:40,841 --> 00:05:41,842
ஐயோ.
59
00:05:43,635 --> 00:05:46,180
”அதிகாரப்பூர்வ பீகிள் ஸ்கௌட் கையேடு.”
60
00:05:46,972 --> 00:05:50,392
இது உங்களுக்கான வழிகாட்டி போன்றது
என நினைக்கிறேன்.
61
00:05:50,475 --> 00:05:53,854
இது உங்கள் பேட்ஜ் பிரச்சினைக்கு இதில்
ஆலோசனை இருக்கலாம்.
62
00:05:54,605 --> 00:06:01,320
”ஓர் உண்மையான பீகிள் ஸ்கௌட் ஒவ்வொரு புதிய
சவாலையும் ஒளிர்வதற்கான வாய்ப்பாகப் பார்ப்பார்.
63
00:06:01,403 --> 00:06:06,325
கடப்பதற்கு மிகவும் கடினமாகத் தெரியும்
சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது
64
00:06:06,408 --> 00:06:08,493
பீகிள் ஸ்கௌட் பின்வாங்காமல்,
65
00:06:08,577 --> 00:06:12,623
நம்பிக்கையுடன் தங்கள் தீர்மானத்தை
வலிமையாக்குவார்.”
66
00:06:14,374 --> 00:06:18,462
”நம்பகமான தனது ட்ரூப்புடன் இணைந்து
பணியாற்றும்போது,
67
00:06:18,545 --> 00:06:21,715
பீகிள் ஸ்கௌட்டால் எதையும் சாதிக்க முடியும்.”
68
00:06:31,099 --> 00:06:34,269
"சாகசப் பயணத்தை மேற்கொள்ளும் முன்,
69
00:06:34,353 --> 00:06:37,606
பீகிள் ஸ்கௌட்கள் தங்கள் இலக்குகளைத்
திட்டமிட வேண்டும்,
70
00:06:37,689 --> 00:06:41,318
முதல் அடியிலிருந்தே அவர்களது பயணம்
தொடங்குகிறது என்பது அவர்களுக்குத் தெரிவதற்காக.”
71
00:06:50,786 --> 00:06:54,331
“பீகிள் ஸ்கௌட் செய்ய வேண்டிய
பணியில் கவனமாக இருக்க வேண்டும்.”
72
00:06:59,753 --> 00:07:03,131
“எந்தவொரு நிகழ்வுக்கும்
பீகிள் ஸ்கௌட் தயாராக இருக்க வேண்டும்.”
73
00:07:22,860 --> 00:07:25,904
- கோடை முகாமே, இதோ வருகிறோம்.
- பஸ்ஸில் என் அருகே அமர்கிறீர்களா, சார்?
74
00:07:25,988 --> 00:07:27,781
நான் தண்ணீரில் குளிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
75
00:07:29,741 --> 00:07:31,451
நீ என்னை வழியனுப்ப வந்தாயா?
76
00:07:36,665 --> 00:07:38,083
கடவுளே, ஸ்நூப்பி.
77
00:07:38,166 --> 00:07:39,710
நீ என்னுடன் வர முடியாது.
78
00:07:39,793 --> 00:07:43,463
இந்த முகாம் சிறுவர்களுக்கானது.
செல்லப் பிராணிகளை அனுமதிப்பதில்லை.
79
00:07:44,631 --> 00:07:45,966
நான் போக வேண்டும்.
80
00:07:46,049 --> 00:07:50,345
ஆனால், அந்த பெர்ஃபார்மன்ஸ் பேட்ஜகளைப்
பெற வாழ்த்துகள்.
81
00:08:07,112 --> 00:08:10,240
“ஓர் உண்மையான பீகிள் ஸ்கௌட்
ஒவ்வொரு புதிய சவாலையும்
82
00:08:10,324 --> 00:08:13,118
ஒளிர்வதற்கான வாய்ப்பாகப் பார்ப்பார்கள்.”
83
00:08:29,259 --> 00:08:32,888
ஸ்ப்ரிங் லேக்
84
00:08:34,932 --> 00:08:36,015
வழியை விடுங்கள்!
85
00:08:36,099 --> 00:08:37,683
- வந்துவிட்டோம்!
- சிறந்த படுக்கை எனக்குத்தான்.
86
00:08:51,448 --> 00:08:52,866
பாவம் ஸ்நூப்பி.
87
00:08:52,950 --> 00:08:57,162
என்னைப் போல ஏமாற்றத்தை அவன்
அனுபவித்தது இல்லை.
88
00:08:57,246 --> 00:09:01,041
அவன் எங்கே இருந்தாலும்,
நன்றாக இருப்பான் என நம்புகிறேன்.
89
00:09:33,198 --> 00:09:35,117
“உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக
இருக்க முடியுமா?
90
00:09:36,827 --> 00:09:38,245
மதிய உணவை பேக் செய்தல்.
91
00:09:40,247 --> 00:09:45,711
அற்புதமான வெளிப்புறத்தை அனுபவிக்க வேடிக்கையான,
அமைதியான வழிதான் ஹைக்கிங்.
92
00:09:45,794 --> 00:09:47,921
ஆனால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க விரும்பினால்,
93
00:09:48,005 --> 00:09:51,508
வெளியேறும் முன் தயாராக இருக்க
நினைவில்கொள்ள வேண்டும்.”
94
00:09:58,807 --> 00:10:03,020
“குடிப்பதற்கு, எப்போதும்
நிறைய தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.”
95
00:10:14,615 --> 00:10:16,783
“ஹைக்கிங்கில் தண்ணீர்
எடுத்துச் செல்வதற்கு,
96
00:10:16,867 --> 00:10:19,328
கேன்டீன்தான் சிறந்தது.
97
00:10:28,128 --> 00:10:30,255
மூடியைத் திறக்க மறக்காதீர்கள்.”
98
00:10:34,218 --> 00:10:38,180
“ஹைக்கிங்கின்போது, சாப்பிட
எதுவும் எடுத்துக்கொள்வதும் முக்கியமானது.
99
00:10:39,806 --> 00:10:42,059
சுலபமாக எடுத்துச் செல்லக்கூடியவற்றை
தேர்ந்தெடுக்க முயற்சிக்கவும்."
100
00:10:44,353 --> 00:10:47,564
“சந்தேகமிருந்தால்,
சாண்ட்விச்கள் பொருத்தமாக இருக்கும்.
101
00:10:47,648 --> 00:10:50,984
மொத்த ட்ரூப்புடனும் அவற்றைத்
தயார் செய்யலாம்.”
102
00:11:22,057 --> 00:11:26,937
“ஆம், ஹைக்கிங்கிற்குத் தயாராக,
உணவும் நீரும் முக்கியமானவை.
103
00:11:27,020 --> 00:11:30,148
அது வேலை செய்யவில்லை எனில், அப்போது கண்டிப்பாக,
104
00:11:30,691 --> 00:11:33,986
நல்ல பீட்ஸா கடையின் எண்ணை
வைத்துக்கொள்வதில் தவறில்லை.”
105
00:12:28,457 --> 00:12:30,250
“பறவைக்கு மீன்பிடிக்கக்
கற்பித்தல்.”
106
00:13:04,451 --> 00:13:05,994
ஸ்நூப்பி?
107
00:13:15,754 --> 00:13:18,799
ஸ்நூப்பி! அது நீதான் என நினைத்தேன்.
108
00:13:18,882 --> 00:13:20,342
இங்கே என்ன செய்கிறாய்?
109
00:13:23,095 --> 00:13:26,014
”அதிகாரப்பூர்வ பீகிள் ஸ்கௌட் கையேடு.”
110
00:13:26,098 --> 00:13:29,685
உன் பேட்ஜ்களைப் பெறுவதற்காக என்னை
இங்கு வரை பின்தொடர்ந்தாயா?
111
00:13:30,978 --> 00:13:33,438
நிச்சயமாக என்னை மிஸ் செய்யவில்லையா?
112
00:13:37,359 --> 00:13:39,778
உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
113
00:13:39,862 --> 00:13:42,990
முதலில் எந்த பேட்ஜைப் பெறத் திட்டமிட்டுள்ளாய்?
114
00:13:52,332 --> 00:13:53,667
மீன்பிடிக்கும் பேட்ஜ், ஹ்ம்ம்?
115
00:13:53,750 --> 00:13:55,377
அருமையாக உள்ளது.
116
00:13:55,460 --> 00:13:58,922
நல்ல மீனைப் பிடிப்பதைவிட
சிறப்பானது எதுவும் இல்லை.
117
00:14:00,674 --> 00:14:01,884
அப்படித்தான் என்னிடம் கூறினர்.
118
00:14:02,467 --> 00:14:05,387
நான் இதுவரை மீன்பிடித்ததே இல்லை.
119
00:14:05,470 --> 00:14:09,224
சிலர் கூறுவார்கள், மீன்பிடிக்கும் பழக்கத்தின்
உண்மையான வெகுமதி
120
00:14:09,308 --> 00:14:11,894
பொறுமையின் மதிப்பையும்...
121
00:14:11,977 --> 00:14:13,770
யாரிடம் பேசுகிறாய், சக்?
122
00:14:16,773 --> 00:14:17,858
யாரிடமும் இல்லை.
123
00:14:18,525 --> 00:14:20,736
நம் படுக்கை ஆலோசகர், நாம் கனூயிங்கை
முயற்சிக்க வேண்டும் என்றார்.
124
00:14:20,819 --> 00:14:22,654
எனவே நாங்கள் கனூயிங்கிற்குக்
கிளம்புகிறோம்.
125
00:14:22,738 --> 00:14:24,072
இல்லையா, மார்ஸி?
126
00:14:24,156 --> 00:14:25,490
அதுதான் திட்டம்.
127
00:14:25,574 --> 00:14:28,118
இருந்தாலும், நிற்பதற்கு நிலையான நிலம்
இருக்கும்போது,
128
00:14:28,202 --> 00:14:30,871
ஆடும் படகில் ஏறுவதன் அர்த்தம்
புரியவில்லை.
129
00:14:30,954 --> 00:14:33,081
உன் சாகச உணர்வு எங்கே?
130
00:14:34,166 --> 00:14:36,084
அதை பஸ்ஸில் விட்டிருக்க வேண்டும், சார்.
131
00:15:02,194 --> 00:15:05,155
இந்தப் படகு நிச்சயமாக பாதுகாப்பானதா, மேடம்?
132
00:15:06,615 --> 00:15:09,868
மிகவும் பாதுகாப்பானது. அதைச் சொல்வீர்கள்
என நினைத்தேன்.
133
00:15:09,952 --> 00:15:13,330
லைஃப்கார்ட் சொன்னதைக் கேட்டாய்தானே, மார்ஸி?
வா, கனூயிங் செல்வோம்.
134
00:15:14,456 --> 00:15:15,874
முடிந்தால் என்னைத் தடுக்கப் பாருங்கள், சார்.
135
00:16:41,585 --> 00:16:42,753
பார்த்தாயா, மார்ஸி?
136
00:16:42,836 --> 00:16:44,463
அந்த ஆலோசகர் கூறியது போலவே உள்ளது.
137
00:16:44,546 --> 00:16:49,009
”மரங்களும் வானமும் சுற்றியுள்ள, தெளிவான ஏரியில்
படகில் செல்வது போல சிறப்பானது எதுவும் இல்லை.”
138
00:16:49,092 --> 00:16:50,969
இது இளைப்பாறச் செய்கிறதல்லவா?
139
00:16:52,095 --> 00:16:55,057
நான் இதை அப்படிச் சொல்ல மாட்டேன், சார்.
140
00:17:13,492 --> 00:17:16,328
இந்தத் கனூயிங் விஷயத்தில் நீ கைதேர்ந்துவிட்டாய்
என நினைக்கிறேன்.
141
00:17:17,454 --> 00:17:20,207
இப்போது உன் திசை பற்றிய அறிவை
மேம்படுத்த வேண்டும்.
142
00:18:01,623 --> 00:18:03,125
இயற்கையின் அற்புதங்கள்.
143
00:18:15,220 --> 00:18:17,973
ஒன்று சொல்கிறேன், சார், இது பழகியவுடன்,
144
00:18:18,056 --> 00:18:19,892
இங்கே இருப்பது இனிமையாக உள்ளது.
145
00:18:26,190 --> 00:18:28,942
உணவுக்காக உங்களை
அழைக்க வந்துள்ளேன்.
146
00:18:29,026 --> 00:18:30,819
அது முகாம் பாஷையில் “டின்னர்” என்று அர்த்தம்.
147
00:18:46,335 --> 00:18:47,711
மீன் கிடைக்கிறதா, நண்பா?
148
00:18:53,884 --> 00:18:55,886
நான் கூறியதை நினைவில்கொள்.
149
00:18:55,969 --> 00:18:57,554
மீன்பிடிப்பது நல்ல விஷயம்தான்,
150
00:18:57,638 --> 00:19:02,059
ஆனால் பொறுமையும் அர்ப்பணிப்புமே
பெரிய வெகுமதிகள்தான்.
151
00:19:03,101 --> 00:19:05,062
அதற்கு ஒரு பேட்ஜ் இருக்க வேண்டும்.
152
00:19:05,854 --> 00:19:08,232
நாம் திரும்பிச் செல்ல வேண்டும்,
153
00:19:08,315 --> 00:19:10,067
ஆனால் அவசரம் வேண்டாம்.
154
00:19:10,150 --> 00:19:13,111
நான் இதை இன்னும் கொஞ்ச நேரம்
அனுபவிக்க விரும்புகிறேன்.
155
00:19:13,195 --> 00:19:14,988
நீ விடாமுயற்சியில் எனக்கு மகிழ்ச்சி.
156
00:19:15,072 --> 00:19:17,699
நீ அதைத் தொடர்ந்து செய்தாய், இப்போது
எவ்வளவு முன்னேறியிருக்கிறாய் பார்.
157
00:19:17,783 --> 00:19:19,576
உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மார்ஸி.
158
00:19:19,660 --> 00:19:21,203
எனக்கும் என்னை
நினைத்துப் பெருமையாக உள்ளது, சார்.
159
00:20:32,191 --> 00:20:36,195
பொறுமையும் அர்ப்பணிப்புமே
பெரிய வெகுமதிகள்தான்.
160
00:20:42,409 --> 00:20:45,078
அதற்கு ஒரு பேட்ஜ் இருக்க வேண்டும்.
161
00:20:55,047 --> 00:20:56,807
சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை
அடிப்படையாகக் கொண்டது
162
00:21:19,988 --> 00:21:21,990
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
163
00:21:25,077 --> 00:21:27,037
நன்றி, ஸ்பார்க்கி.
எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.
163
00:21:28,305 --> 00:22:28,384
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-