"Chief of War" Changing Tides
ID | 13212737 |
---|---|
Movie Name | "Chief of War" Changing Tides |
Release Name | Chief.of.War.S01E02.1080p.WEB.H264-Successfulcrab[tam] |
Year | 2025 |
Kind | tv |
Language | Tamil |
IMDB ID | 19700562 |
Format | srt |
1
00:00:06,000 --> 00:00:12,074
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm
2
00:01:38,015 --> 00:01:42,603
மாவீ பேரரசு
காவூபோ கடற்கரை
3
00:01:51,111 --> 00:01:52,111
காஆஹுமானு?
4
00:01:52,112 --> 00:01:53,030
பொறுங்க.
5
00:01:55,282 --> 00:01:58,577
மாவீ வானம் திறந்திருக்கு.
6
00:02:00,245 --> 00:02:01,288
அதோ அங்கே பாருங்க.
7
00:02:04,458 --> 00:02:05,501
காப்புவாஹியா?
8
00:02:07,544 --> 00:02:09,588
அந்தக் கதையை எனக்கு இன்னொரு முறை
சொல்றீங்களா?
9
00:02:10,255 --> 00:02:12,049
மறுபடியுமா?
நான் உனக்கு கற்றுத்தரவே கூடாது.
10
00:02:13,175 --> 00:02:16,261
விண் மீன்களைப் படிக்கும் கலை,
ஆண்களுக்கு மட்டும்தான்.
11
00:02:18,972 --> 00:02:23,519
அது ஆண்களுக்கு மட்டும்தான் என்பது
பத்தி என்னைக்கு கவலைப்பட்டிருக்கேன், மாமா?
12
00:02:27,231 --> 00:02:28,690
சிகப்பு நட்சத்திரம்,
13
00:02:29,066 --> 00:02:30,359
காப்புவாஹி,
14
00:02:31,360 --> 00:02:33,153
ஒரு மிகச் சிறந்த போர் வீரராக இருந்தார்,
15
00:02:33,695 --> 00:02:35,989
அவர் நெருப்பால் ஆன தோள் அங்கியை அணிந்து,
16
00:02:36,949 --> 00:02:39,409
வானுலகமெல்லாம் சுத்தித் திரிந்து
"ஜீவ நதியை" தேடி வருவார்.
17
00:02:40,244 --> 00:02:43,539
நம்ம வானத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள அதை
18
00:02:44,331 --> 00:02:45,666
ஒவ்வொரு இரவும் அதைக் கண்டுபிடித்து,
19
00:02:47,626 --> 00:02:48,794
தன் பிரிய காதலியிடம் கொடுப்பார்,
20
00:02:50,754 --> 00:02:52,923
ஏனெனில் அவள் ஒவ்வொரு காலைப் பொழுதும்
21
00:02:53,465 --> 00:02:55,300
உதய சூரியனாக நம் வானில் எழ வேண்டும் என்பதற்காக.
22
00:02:56,426 --> 00:03:01,223
நமது முன்னோர்கள், அந்த நட்சத்திரத்தின் பாதையை
பின்தொடர்ந்து, இந்தத் தீவுகளை கண்டறிந்தனர்,
23
00:03:03,058 --> 00:03:07,145
ஆனால் நாம் காணும் இந்த வானத்துக்கு
அப்பால் எந்த நாடுகள் எல்லாம் இருக்கின்றன?
24
00:03:08,647 --> 00:03:10,941
இதை விட்டுட்டுப் போகும் அளவுக்குத்
தகுதியானது எதுவும் இல்லை.
25
00:03:33,797 --> 00:03:35,048
உலு மரத்தின் கட்டை.
26
00:03:35,549 --> 00:03:39,136
ஹவாய்ஈ பேரரசிலிருந்து வந்த படகுகள் இவை.
27
00:03:45,058 --> 00:03:45,893
காஆஹுமானுவை கண்டுபிடியுங்கள்.
28
00:03:58,488 --> 00:03:59,448
என்ன நடக்குது?
29
00:04:00,073 --> 00:04:01,783
சீக்கிரமே நமக்குத் தெரியப் போகுது.
30
00:04:11,627 --> 00:04:12,836
அப்பா!
31
00:04:15,631 --> 00:04:17,881
நீங்க இங்கே என்ன செய்யறீங்க?
32
00:04:17,882 --> 00:04:19,800
நீங்க இங்கே வருவதாகச் சொல்லி அனுப்பலையே.
33
00:04:19,801 --> 00:04:22,304
எந்த காரணமும் இல்லாம, காயேகிலி
ஓஆஹூ பேரரசை தாக்கியிக்கான்.
34
00:04:22,638 --> 00:04:24,514
தீவுகள்ல போர் மூளப் போகுது.
35
00:04:24,515 --> 00:04:28,393
நான் உங்க இருவரையும் ஹவாய்ஈ பேரரசுக்கே
கூட்டிட்டுப் போக வந்திருக்கேன்.
36
00:04:29,394 --> 00:04:30,687
இன்றிரவேவா?
37
00:04:31,104 --> 00:04:33,272
மாவீ தன் கடற்கரைகள் அனைத்தையும்
சீக்கிரமே மூடிவிடும்.
38
00:04:33,273 --> 00:04:36,193
அதற்குப் பிறகு, நான் இங்கே
வந்து போக முடியாது.
39
00:04:36,568 --> 00:04:38,487
மாவீ பேரரசும், ஹவாய்ஈ பேரரசும் கூட
எதிரிகள் தான்.
40
00:04:39,571 --> 00:04:42,240
நான் காயேகிலியின் சகோதரி.
41
00:04:42,241 --> 00:04:45,202
ஹவாய்ஈ இனிமேல் நம்மை ஒருபோதும்
வரவேற்காது.
42
00:04:45,494 --> 00:04:47,162
உன்னை வரவேற்பார்கள்.
43
00:04:49,248 --> 00:04:53,668
நான் காஆஹுமானுவை என் தளபதிக்குத் திருமணம்
முடித்துக்கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கேன்.
44
00:04:53,669 --> 00:04:54,628
என்னது?
45
00:04:56,338 --> 00:04:57,673
அப்பா,
46
00:04:58,674 --> 00:05:00,342
நீங்க கேட்டு நான் எதையும் மறுத்ததில்லை,
47
00:05:01,176 --> 00:05:02,594
ஆனால் இது...
48
00:05:03,303 --> 00:05:04,388
தயவுசெய்து,
49
00:05:05,722 --> 00:05:07,891
என்னை இதற்குக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
50
00:05:09,142 --> 00:05:10,727
உன்னைத் தயார் செய்துகொள்.
51
00:05:12,104 --> 00:05:13,355
நாம் கிளம்பணும்.
52
00:05:15,732 --> 00:05:16,858
காஆஹுமானு!
53
00:05:16,859 --> 00:05:17,985
மொக்கு, அவளை விடுங்க.
54
00:05:18,652 --> 00:05:20,737
அவளுக்கு இன்றிரவு வருத்தமாகத் தான் இருக்கும்.
55
00:05:20,988 --> 00:05:23,072
நாம் இந்த நாள் வரும் என்று எதிர்பார்த்ததுதானே.
56
00:05:23,073 --> 00:05:26,118
இப்படி வருமென நினைக்கலயே!
57
00:05:26,785 --> 00:05:28,036
தளபதியாரே, நாம் இப்போது போக வேண்டும்.
58
00:05:32,749 --> 00:05:34,168
நீங்க உங்க ஆட்களுடன் போங்க.
59
00:05:35,836 --> 00:05:39,423
நான் காஆஹுமானுவிடம் பக்குவமா
எடுத்துச் சொல்லி அனுப்பி வைக்கிறேன்.
60
00:05:41,508 --> 00:05:42,342
அப்போ நீ?
61
00:05:43,260 --> 00:05:46,305
நான் இந்த நாட்டின் அரசகுலத்தைச் சேர்ந்தவள்.
62
00:05:47,097 --> 00:05:49,224
இது என்னுடைய இடம்.
63
00:05:53,687 --> 00:05:55,606
நம் மகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
64
00:06:13,415 --> 00:06:17,920
ஓஆஹூ பேரரசு
65
00:06:27,554 --> 00:06:28,764
மகனே...
66
00:06:29,306 --> 00:06:31,016
நீ கவலையுடன் இருக்கிறாய்.
67
00:06:32,100 --> 00:06:35,812
ஓஆஹூ நமக்கு எதிராகப் போர் தொடுக்கத்
தயாராகவில்லை.
68
00:06:36,980 --> 00:06:40,150
நாம இங்கே வருவதற்காக
நீங்க பொய் சொல்லியிருக்கீங்க.
69
00:06:41,235 --> 00:06:43,654
இது முதுமொழி வாக்கை நிறைவேற்றன்னு
எனக்குத் தோணல.
70
00:06:45,030 --> 00:06:48,200
பலரும் உன்னைப் போலவேதான்
நினைப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.
71
00:06:59,628 --> 00:07:01,547
அந்த முதுமொழி வாக்கின்படி ஒரு பேரரசர்
72
00:07:02,130 --> 00:07:08,554
நம்மை வழி நடத்துவார்னு, பல
தலைமுறைகளாகக் காத்திருந்தோம்,
73
00:07:11,014 --> 00:07:13,934
ஆனால் எனக்கு உதித்தது,
74
00:07:16,103 --> 00:07:18,397
அவரும் அந்த முதுமொழி வாக்கை நிறைவேற்ற,
75
00:07:19,398 --> 00:07:23,861
தன்னையே தியாகம் செய்யத் துணிந்த
ஒரு அரசராகத் தான் இருக்க வேண்டும் என்று.
76
00:07:26,697 --> 00:07:30,492
மற்ற அரசர்கள் தோற்று போனதைப் போல,
77
00:07:32,828 --> 00:07:34,830
நான் தோற்கமாட்டேன்.
78
00:08:05,652 --> 00:08:07,486
நீ இங்கே கவனம் செலுத்து.
79
00:08:07,487 --> 00:08:10,866
உன் எண்ணங்களைக் கண்டுபிடிக்க
அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதே.
80
00:08:11,116 --> 00:08:13,869
நான் என்ன நினைக்கிறேன் என்று
அவர்களுக்குத் தெரியும்.
81
00:08:14,536 --> 00:08:16,079
இதுக்கு அவசியமே இல்லை.
82
00:08:16,580 --> 00:08:19,249
நாம் இப்போது வேண்டுமானாலும் கிளம்பலாம்.
83
00:08:19,833 --> 00:08:23,628
அந்தப் பன்றி நபர்கள் நம்மை
கண்காணிக்கும் போது போக வேண்டாம்.
84
00:08:23,629 --> 00:08:26,131
பன்றியின் குடலை அறுக்கும் உத்தி
நமக்குத் தெரிந்தது தானே.
85
00:08:27,758 --> 00:08:30,468
அவற்றை தீப் பாறைகள்ல போட்டு
சுட்டு எடுக்கவும் தெரியும்.
86
00:08:30,469 --> 00:08:31,595
போதும் நிறுத்து.
87
00:08:31,929 --> 00:08:34,014
நாம என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்.
88
00:08:35,224 --> 00:08:39,895
காயேகிலி என்னை ஆலயத்துக்கு வரும்படி
பணித்துள்ளார்,
89
00:08:40,520 --> 00:08:41,938
எனவே நான் அங்கே போகிறேன்.
90
00:08:59,414 --> 00:09:01,208
நான் அரசருக்குத் தகவல் சொல்கிறேன்.
91
00:10:06,607 --> 00:10:08,192
வெளியே காத்திரு.
92
00:10:26,793 --> 00:10:28,086
காஇயானா?
93
00:11:33,735 --> 00:11:35,112
அவனை திரும்பி
அழைத்து வாருங்கள்.
94
00:11:35,904 --> 00:11:37,990
நம்மிடம் போர் படையும்,
கப்பற் படையும் இருக்கிறது.
95
00:11:38,657 --> 00:11:40,117
எட்டு கடற் பிரிவுகளையும் தேடுவதற்கு
ஆட்களை அனுப்பவும்.
96
00:11:41,702 --> 00:11:44,454
உடனே அவனைத் தேடிப் பயணிக்கும்
அவசியம் இல்லை, பிரபுவே.
97
00:11:45,163 --> 00:11:47,541
அவன் எங்கே போகிறான் என எனக்குத் தெரியும்.
98
00:11:48,041 --> 00:11:51,795
காஇயானா, ஏக்கேயை மாவீயின்
பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளான்.
99
00:11:52,671 --> 00:11:54,923
அவன் மனைவி குப்புஒகி, தன் தங்கையில்லாமல்
100
00:11:55,299 --> 00:11:57,301
எங்கேயும் போகமாட்டாள்.
101
00:11:57,759 --> 00:12:01,221
காஇயானா காயிவி கடற்வீச்சு உள்ள போதே
மாவீயை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளான்.
102
00:12:01,513 --> 00:12:04,348
அவனைப் பிடித்து உயிருடன் கொண்டு
வருகிறோம்.
103
00:12:04,349 --> 00:12:05,267
வேண்டாம்.
104
00:12:06,185 --> 00:12:07,811
என் சித்தர்களின்படி.
105
00:12:08,562 --> 00:12:11,607
நமக்குத் தேவையானது காஇயானாவின்
உயிர் இல்லை,
106
00:12:12,232 --> 00:12:15,944
அவன் எலும்புகளுக்குள் புதைந்திருக்கும் மானா,
அந்த அமானுஷ்ய ஆற்றல் தான் நமக்குத் தேவை.
107
00:12:17,070 --> 00:12:18,572
அவற்றை எனக்குக் கொண்டு தாருங்கள்.
108
00:12:49,061 --> 00:12:50,312
அது என்னது?
109
00:12:59,821 --> 00:13:00,906
ஃபார்வர்ட்!
110
00:13:12,251 --> 00:13:16,296
மாவீ பேரரசு
111
00:13:18,298 --> 00:13:19,882
அரசரின் வீரர்கள் உடனே நம்மை
பின்தொடர்ந்து வருவார்கள்.
112
00:13:19,883 --> 00:13:20,926
சீக்கிரம் போங்க!
113
00:13:22,302 --> 00:13:23,220
ஏக்கே!
114
00:13:23,595 --> 00:13:24,763
- ஏக்கே!
- ஏக்கே!
115
00:13:26,723 --> 00:13:27,558
ஏக்கே!
116
00:13:28,392 --> 00:13:29,726
- ஏக்கே!
- ஏக்கே!
117
00:13:34,857 --> 00:13:36,233
அவள் இங்கே இல்லை.
118
00:13:37,568 --> 00:13:39,152
காயேகிலியின் போர் வீரர்கள் கொண்டு போயிருப்பாங்களோ?
119
00:13:41,905 --> 00:13:43,949
ஆனால் அந்நிய ஊடுருவல் இருந்த
அறிகுறிகளே இல்லையே.
120
00:13:45,242 --> 00:13:46,535
நாம் வேகமா போகணும்.
121
00:13:49,621 --> 00:13:50,455
அவங்களைக் கண்டுபிடியுங்க!
122
00:13:53,667 --> 00:13:55,710
அவள் எங்கே?
123
00:13:55,711 --> 00:13:59,547
அவள் விளையாட்டுச் சிறுமியில்ல,
அவள் கிடைப்பாள்.
124
00:13:59,548 --> 00:14:00,590
இதோ!
125
00:14:00,591 --> 00:14:02,634
நேத்து இரவு இரண்டாவது பௌர்ணமி.
126
00:14:03,719 --> 00:14:05,596
நான்கு பௌர்ணமியில் இரண்டாவது பௌர்ணமி.
127
00:14:08,348 --> 00:14:12,519
அந்த இரவுலதான் அவள் வழக்கமா, அவங்கக் கொடுக்கும்
மூலிகைகளுக்காக தெய்வங்களுக்கு படையல் கொடுப்பாள்.
128
00:14:13,145 --> 00:14:17,733
ஏக்கே பள்ளத்தாக்குல தான் இருக்கா, அவள்
அறுவடை செய்ததை மீண்டும் நட்டு வைக்கிறாள்.
129
00:14:18,150 --> 00:14:20,652
அவளை லாஆவோலிலப் பாரக்கலாம்.
130
00:15:12,496 --> 00:15:13,830
அவன் இங்கே இருக்கான்!
131
00:15:14,248 --> 00:15:15,207
அவன் இங்கே தான் இருக்கான்!
132
00:15:55,122 --> 00:15:56,164
நாம காஇயானாவுக்கு உதவி செய்யணும்.
133
00:15:57,291 --> 00:15:58,876
அவன் நம்மை கண்டுபிடித்து விடுவான்.
134
00:15:59,418 --> 00:16:02,296
நாம சண்டை போட்டால், நாம எல்லோரும்
இறந்து போவோம்!
135
00:16:02,713 --> 00:16:04,214
குப்புஒகி சொல்றது சரிதான்.
136
00:16:04,673 --> 00:16:05,674
நாம போகணும்.
137
00:16:05,924 --> 00:16:07,134
நாம ஏக்கேயைக் கண்டுபிடிக்கணும்.
138
00:17:10,821 --> 00:17:11,697
நாம ரெண்டா குழுவா பிரிவோம்.
139
00:17:11,698 --> 00:17:14,660
நான் நதியின் போக்குடன் ஒரு குழுவை
வழி நடத்திப் போகிறேன்.
140
00:17:17,704 --> 00:17:20,082
காஇயானா உன் கையால சாகக்கூடாது.
141
00:17:21,250 --> 00:17:22,416
அவனைக் கண்டுபிடிச்ச உடனே
142
00:17:23,460 --> 00:17:24,877
நீ அவனை நேரடியா எங்கிட்ட அழைச்சுட்டு வா.
143
00:17:46,108 --> 00:17:47,401
நாம அவனைக் கண்டுபிடிக்குறபோது,
144
00:17:48,151 --> 00:17:51,363
அவனுடைய குடலை நம்ம மூதாதயரின்
பற்களால அவனை கிழித்துப் போடுறேன்.
145
00:18:19,850 --> 00:18:23,353
உள்ளே போயிட்டு வெளியே
வந்துடணும், யார் கவனைத்தையும் ஈர்க்கக் கூடாது.
146
00:18:24,188 --> 00:18:26,440
நமக்கு கேப்டன் குக்கின் கதி நமக்கு வரக் கூடாது.
147
00:18:27,983 --> 00:18:32,029
கண்டிப்பா தேவைன்னா மட்டும்
ஆயுதங்களைப் பயன்படுத்துங்க.
148
00:18:32,654 --> 00:18:35,365
இன்னும் நம் பயணம் முடியும்வரை,
இதை நிரப்பிக்கொண்டிருக்கணும்.
149
00:18:35,908 --> 00:18:37,701
எனவே கவனமா இருங்க.
150
00:18:53,383 --> 00:18:54,927
காஆஹுமானு,
151
00:18:55,719 --> 00:18:57,721
நான் புதுசா எடுத்த வாதுமைக் கொட்டைப் பருப்பு
எண்ணை எடுத்துட்டு வந்திருக்கேன்.
152
00:18:58,972 --> 00:19:00,891
உனக்குத் தேவைப்படும்னு நினைச்சேன்.
153
00:19:02,893 --> 00:19:04,936
எனக்கு இன்னைக்குத் திருமணம் நடக்கப் போறதில்லையே.
154
00:19:04,937 --> 00:19:06,230
இல்ல, ஆனால்,
155
00:19:06,605 --> 00:19:08,607
வருங்காலத்தைத் திட்டமிட்டுக்கொள்ள,
156
00:19:09,525 --> 00:19:11,818
நீ ஆருடம் சொல்பவரைப் போய் சந்திக்கணும்.
157
00:19:14,530 --> 00:19:16,698
நீ சீக்கிரமே ஒரு தளபதியின் மனைவியாகப் போற,
158
00:19:18,158 --> 00:19:22,120
அதனால, குழம்பியிருக்கும் ஒரு அபலைப் பெண்ணா
அவரிடம் போகாதே.
159
00:19:35,133 --> 00:19:40,180
இதை நீ எதிர்பார்க்கலைன்னு
எனக்குத் தெரியும்,
160
00:19:41,431 --> 00:19:43,642
ஆனால் நீ இதை செய்தாகணும்.
161
00:19:45,227 --> 00:19:47,144
உனக்குள்ள அது ஒரு போராட்டத்தை ஏற்படுத்தி
இருக்குன்னு எனக்குத் தெரியும்.
162
00:19:47,145 --> 00:19:49,523
அதை அடக்கச் சொல்லி நீங்க எங்கிட்ட சொல்றீங்க.
163
00:19:49,940 --> 00:19:52,192
இல்ல, காஆஹுமானு.
164
00:19:52,901 --> 00:19:58,699
சில சமயங்கள்ல நமக்கு மிஞ்சுவது
அது போன்ற போராட்டங்கள் மட்டும்தான்.
165
00:21:21,573 --> 00:21:22,407
தவுலா?
166
00:21:25,369 --> 00:21:26,620
நான் காஆஹுமானு,
167
00:21:27,746 --> 00:21:30,082
தலைவி நமஹன்னாவின் மகள்.
168
00:21:31,208 --> 00:21:32,876
நான் உங்க அறிவுரையைப் பெறுவதற்காக
வந்திருக்கேன்.
169
00:21:36,547 --> 00:21:43,262
அரசருடைய உறவனாவள், அவருடைய சித்தர்களிடமே
அறிவுரைகளை பெற முடியுமே.
170
00:21:44,596 --> 00:21:46,598
என்னிடம் எதற்காக வந்தாய்?
171
00:21:46,932 --> 00:21:49,184
நான் அரசவையில் இருப்பவர்களுடன்
வாழ்ந்ததே கிடையாது.
172
00:21:49,810 --> 00:21:51,770
அவர்கள் என்னைக் கட்டுப்படுத்தவில்லை.
173
00:21:53,981 --> 00:21:57,693
அப்படியென்றால் நீ என்னிடம்
எதையும் கேட்கலாம்.
174
00:22:00,404 --> 00:22:06,450
ஹவாய்ஈ பேரரசின் தளபதியை திருமணம்
முடிப்பதற்காக, என் தந்தை
175
00:22:06,451 --> 00:22:07,911
என்னை ஊரைவிட்டு அனுப்ப இருக்கிறார்.
176
00:22:11,582 --> 00:22:13,876
நான் சந்தோஷமா இருப்பேனா?
177
00:22:14,293 --> 00:22:18,255
வரப்போவதில் துன்பத்தை மட்டுமே
என்னால் காண முடிகிறது.
178
00:22:23,427 --> 00:22:26,972
உன் தந்தை மற்றும் தளபதி, இருவருமே
உன்னால் வருத்தமடைவார்கள்.
179
00:22:27,598 --> 00:22:30,475
நீ தளபதிக்கு ஒரு வாரிசைப் பெற மாட்டாய்.
180
00:22:34,730 --> 00:22:37,191
அப்படியென்றால் எனது
எதிர்காலமே இருண்டுவிட்டது.
181
00:22:38,775 --> 00:22:42,862
உன்னை துன்பத்தில் தள்ளுவதற்கு
பல பாதைகள் உள்ளன,
182
00:22:42,863 --> 00:22:45,866
ஆனால் ஒரு பாதை உன்னை சுதந்திரத்திற்கு
அழைத்துச் செல்லக்கூடியது.
183
00:22:46,283 --> 00:22:48,160
அதை நான் எப்படிக் கண்டறிய முடியும்?
184
00:22:48,660 --> 00:22:51,037
நீ அதை தனித்துக் கண்டுபிடிப்பது இயலாது.
185
00:22:51,038 --> 00:22:53,373
உனக்கு ஒரு வழிகாட்டி வருவார்.
186
00:23:16,647 --> 00:23:18,690
ஆழ்ந்த பயத்தைக் காண்கிறேன்.
187
00:23:19,358 --> 00:23:20,275
என்னிடமா?
188
00:23:21,902 --> 00:23:23,070
என் குடும்பத்திலா?
189
00:23:23,904 --> 00:23:26,365
தெய்வங்களிடம்.
190
00:23:27,407 --> 00:23:29,868
தெய்வங்களுக்கு பயத்தைத் தருவது
என்னவாக இருக்கக்கூடும்?
191
00:23:30,744 --> 00:23:31,787
உன்னை.
192
00:23:35,707 --> 00:23:39,378
நீ இந்த உலகத்தை உடைத்துவிடுவாய்.
193
00:25:12,012 --> 00:25:15,265
காயேகிலியின் போர் வீரர்கள் உன்னை
பிடிச்சுட்டாங்கன்னு நினைச்சோம்.
194
00:25:16,058 --> 00:25:18,644
காயேகிலியின் போர் வீரர்கள் ஏன்...
195
00:25:20,103 --> 00:25:22,272
ஓஆஹூ பேரரசுல ஏதோ நடந்துள்ளது.
196
00:25:24,900 --> 00:25:26,443
காஇயானா எங்கே?
197
00:28:05,811 --> 00:28:06,645
அவனைக் கண்டுபிடியுங்க!
198
00:29:07,998 --> 00:29:10,417
உனக்கு ஒண்ணுமாகலயே?
199
00:29:10,834 --> 00:29:11,835
என்னை விடு.
200
00:29:12,503 --> 00:29:13,879
உனக்கு அடிபட்டிருக்கு.
201
00:29:16,423 --> 00:29:21,219
அரசரின் வீரர்கள் என்னைத் துரத்தறாங்க.
நீ எனக்கு உதவி செய்தால், உன்னை கொன்னுடுவாங்க.
202
00:29:21,220 --> 00:29:22,136
போ.
203
00:29:22,137 --> 00:29:25,057
உன் மரணத்துக்கு நான்
காரணமாக இருக்க விரும்பல.
204
00:29:27,684 --> 00:29:30,646
அதே போல உன் மரணத்துக்கும்
நான் காரணமாக விரும்பல.
205
00:29:31,480 --> 00:29:34,650
அவங்க உன்னைக் கண்டுபிடிக்க முடியாத
ஒரு இடத்துக்கு நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.
206
00:29:35,442 --> 00:29:37,277
உன்னால நடக்க முடியுமா?
207
00:29:47,496 --> 00:29:48,330
இங்கேயே ஓய்வெடுத்துக்கோ.
208
00:30:32,165 --> 00:30:33,500
நாம இன்னும் தேடிட்டு இருக்கோம்.
209
00:30:37,045 --> 00:30:39,047
காஇயானா நம்மை பரிகாசம் செய்யறான்.
210
00:30:39,715 --> 00:30:42,551
மாவீயின் மிகச் சிறந்த வீரர்களால கூட
ஒரு அடிபட்ட மனிதனைக் கண்டுபிடிக்க முடியலை.
211
00:30:45,387 --> 00:30:47,222
அவன் தன் உயிருக்காக போராடறான்.
212
00:30:49,892 --> 00:30:50,893
நாம அவனைக் கண்டுபிடிச்சுடலாம்.
213
00:30:59,234 --> 00:31:03,822
அவன் என் தீவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்,
என் வீட்டுக்குள்ள எலி ஊடுருவவதைப் போல இருக்கு.
214
00:31:22,007 --> 00:31:23,342
நான் போகணும்.
215
00:31:24,134 --> 00:31:25,093
பொறு.
216
00:31:25,594 --> 00:31:27,429
நீ இன்னும் பூரணமா குணமாகல.
217
00:31:37,397 --> 00:31:40,192
அரசனின் ஆட்கள் உன்னை ஏன்
துரத்தணும்?
218
00:31:43,195 --> 00:31:44,696
ஒரு சுறாமீனுடைய குடும்ப முத்திரை
உன் மேலே இருக்கு.
219
00:31:46,031 --> 00:31:48,408
மாவீ பேரரசின் மிகச் சிறந்த
பாதுகாப்பாளரான ஒரு தளபதி.
220
00:31:56,083 --> 00:31:57,167
யார் நீ?
221
00:31:58,168 --> 00:32:00,003
நான் யாரும் இல்லை.
222
00:32:00,796 --> 00:32:03,966
ஆனால் உனக்கு வம்சாவளி பச்சைக்குத்தல்
பத்தியும் சிறந்த தளபதிகளைப் பத்தியும் தெரியுதே.
223
00:32:06,927 --> 00:32:12,558
என் தாய் ஒரு பெரும் தலைவி,
அரசர் காயேகிலியின் சகோதரி.
224
00:32:13,392 --> 00:32:16,395
எனக்கு சபையில் உள்ள அரசவம்சத்தினரைத் தெரியும்,
225
00:32:18,230 --> 00:32:21,650
ஆனால் நான் உன்னை அங்கே பார்த்ததே இல்லையே.
226
00:32:21,942 --> 00:32:26,405
எனக்குள் காயேகிலியின் இரத்தம் ஓடுகிறது,
ஆனால் அவன் என் குடும்பம் இல்லை.
227
00:32:27,322 --> 00:32:31,869
நான் இது போல ஒரு குகையிலதான் பிறந்தேன்.
228
00:32:33,579 --> 00:32:37,457
அரசரின் கோபத்திலிருந்து என்னைக்
காப்பாத்த, என்னை ஒளிச்சு வச்சுட்டாங்க.
229
00:32:37,708 --> 00:32:38,625
அவருக்கு என்ன கோபம்?
230
00:32:40,669 --> 00:32:41,962
என் தந்தை மீது.
231
00:32:43,755 --> 00:32:48,302
என் தந்தை ஹவாய்ஈ பேரரசின் தளபதி,
மாவீ பேரரசின் எதிரி.
232
00:32:50,804 --> 00:32:53,932
என் வாழ்நாள் முழுவதும் நான் அரசர் காயேகிலியைப்
பத்திய பயத்திலேயே கழித்துள்ளேன்.
233
00:33:03,775 --> 00:33:05,319
நாம இருவருமே ஒரே மாதிரி துன்பத்துல
இருந்திருக்கோம் போலயிருக்கே.
234
00:33:06,945 --> 00:33:12,618
நான் காயேகிலியின் போர் தளபதியா
பணியாற்றினேன்.
235
00:33:13,827 --> 00:33:16,622
ஆனால் என்னால இனிமேலும் அவரிடம்
இருக்க முடியாது.
236
00:33:20,000 --> 00:33:23,253
போரிலிருந்து ஓடிச் செல்லும் ஒரு போர் தளபதி.
237
00:33:25,297 --> 00:33:27,758
நீ முரண்களின் தளபதின்னு நினைக்கிறேன்.
238
00:33:29,801 --> 00:33:32,012
நாம இருவருமே காயேகிலியால
பாதிக்கப்பட்டிருக்கோம் என்பதால,
239
00:33:32,888 --> 00:33:35,182
உன் பெயரைத் தெரிஞ்சுக்கணும்னு
நான் நினைக்கிறேன்.
240
00:33:39,311 --> 00:33:40,562
காஇயானா ஆஅஹூஊலா.
241
00:33:43,440 --> 00:33:44,358
காஇயானா...
242
00:33:46,026 --> 00:33:47,819
நான் தான் காஆஹுமானு.
243
00:33:48,737 --> 00:33:50,364
காஆஹுமானு.
244
00:34:09,091 --> 00:34:10,300
உன்னால நகர முடியுதா?
245
00:34:16,849 --> 00:34:19,893
உன்னை அரசரின் ஆட்கள் பிடிச்சாங்கன்னா,
நீ உன் சுயநினைவுடன் இருக்கணும்.
246
00:34:20,435 --> 00:34:25,065
நீ இன்னும் கொஞ்சம் இங்கேயே
ஓய்வெடுப்பதுதான் புத்திசாலித்தனமா படுது.
247
00:34:30,904 --> 00:34:37,327
குக்கும் அந்த வெள்ளைக்காரர்களும் வந்தபோது,
என் தந்தை அங்கே இருந்தார்.
248
00:34:37,911 --> 00:34:41,206
நான் அப்போ சிறுமிதான், ஆனால் எனக்கு
நினைவிருக்கு,
249
00:34:41,748 --> 00:34:48,422
அவங்ககிட்ட இருக்குற ஆயுதங்களைப் பத்தி அவர்
பேசுறபோது, அவர் கண்ணுல பீதியைப் பார்க்கிருக்கேன்.
250
00:34:52,634 --> 00:34:55,512
அந்த வெள்ளைக்காரங்க எல்லாம்
ரொம்ப சுலபமா தோற்று போயிட்டாங்க.
251
00:34:57,054 --> 00:35:00,600
இன்னும் அதிக எண்ணிக்கையோட அவங்க
திரும்பி வருவாங்கன்னு உனக்கு பயமில்லையா?
252
00:35:00,601 --> 00:35:03,604
என் பயமெல்லாம் இங்கேதான்.
253
00:35:05,647 --> 00:35:09,484
என் குடும்பம் எனக்காக லாஆவோல
காத்துட்டு இருக்காங்க.
254
00:35:12,279 --> 00:35:17,200
அவங்களை காயேகிலியின் ஆட்கள் வந்து
பிடிக்கிறதுக்கு முன்னாடி நான் அங்கே போயிடணும்.
255
00:35:17,201 --> 00:35:19,745
அதுக்கு அப்புறம் எங்கே போவ?
256
00:35:21,038 --> 00:35:24,208
எங்க அப்பாகிட்ட என்னைக் கூட்டிட்டுப் போக,
எனக்காக ஒரு படகு காத்துட்டு இருக்கும்.
257
00:35:24,708 --> 00:35:28,795
உன் குடும்பம் என்னுடன் வந்து,
ஹவாய்ஈ பேரரசில் அடைக்கலம் பெறலாம்.
258
00:35:35,969 --> 00:35:38,222
எனக்கு அங்கே ஒரு புது வாழ்க்கையை
ஆரம்பிக்கப் போறேன்.
259
00:35:40,891 --> 00:35:42,851
ஒருவேளை உனக்கு அப்படித் தானோ என்னவோ.
260
00:36:06,083 --> 00:36:09,752
அழுகிப் போனதை எடுக்காதீங்க, மக்களே.
நாம புதிய பழங்களைத் தான் எடுக்கணும்.
261
00:36:09,753 --> 00:36:11,129
இதுதான் நமக்கான உணவுன்னு
நினைவுல இருக்கட்டும்.
262
00:37:19,865 --> 00:37:21,782
சரிதான், முடிந்ததை எல்லாம்
அவ்வளவையும் எடுத்துக்கோங்க.
263
00:37:21,783 --> 00:37:23,952
வாங்க, மக்களே. உங்க பைகளை எல்லாம்
கொண்டு வாங்க.
264
00:37:26,872 --> 00:37:28,165
கேப்டன்.
265
00:37:36,882 --> 00:37:39,092
வெள்ளையர்கள்
திரும்பி வந்துட்டாங்க.
266
00:38:02,282 --> 00:38:04,952
மார்லே. நீ என்ன செய்யற?
267
00:38:05,869 --> 00:38:08,330
மார்லே, துப்பாக்கியைக் கீழே போடு.
268
00:38:13,168 --> 00:38:15,086
இவங்க
எல்லாம் துன்பப்படுறாங்க.
269
00:38:15,087 --> 00:38:17,548
அவங்க இங்கே உணவுக்காகவும்,
ஊட்டத்துக்காகவும் வந்திருக்காங்க.
270
00:38:19,716 --> 00:38:22,927
அப்படின்னா அந்த எலி-மூஞ்சிக்காரன்
271
00:38:22,928 --> 00:38:25,848
ஏன் நம்மை பார்த்து ஒரு குச்சியைக் காட்டுறான்?
272
00:38:31,645 --> 00:38:33,187
மார்லே...
273
00:38:33,188 --> 00:38:34,398
வேண்டாம்!
274
00:38:39,486 --> 00:38:42,614
இப்போ இந்தத் தீவுல இருக்குற மொத்த மக்களுக்கும்
நாம இங்கே வந்திருப்பதை அறிவிச்சிட்ட.
275
00:38:44,825 --> 00:38:45,659
இப்படி வா!
276
00:38:47,411 --> 00:38:49,997
நாங்க உங்களுக்கு
எந்தத் தீங்கையும் செய்ய மாட்டோம். சரியா?
277
00:39:18,108 --> 00:39:20,235
சீக்கிரமே அவங்க நம்மை தாக்க வந்துடுவாங்க.
278
00:39:33,248 --> 00:39:35,042
அது ஜானுடைய துப்பாக்கி.
279
00:39:38,420 --> 00:39:40,005
நாம இந்தத் தீவை விட்டுப் போறோம்.
280
00:39:44,801 --> 00:39:46,345
நீ என்ன செய்யற?
281
00:39:48,472 --> 00:39:50,181
என் குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடி,
282
00:39:50,182 --> 00:39:53,185
அவங்களை ஹவாய்ஈக்கு பாதுகாப்பா
அழைச்சுட்டுப் போயிடு.
283
00:39:53,810 --> 00:39:55,728
நீ தனியாவா போகப் போற?
284
00:39:55,729 --> 00:39:57,897
நீ இல்லாம உன் குடும்பம் வர மாட்டாங்க.
285
00:39:57,898 --> 00:39:59,983
இதை குப்புஒகிகிட்ட கொடு.
286
00:40:00,943 --> 00:40:01,777
குப்புஒகி.
287
00:40:02,611 --> 00:40:04,780
நான் அவங்களை வேற பக்கமா கூட்டிட்டுப் போறேன்.
288
00:40:05,405 --> 00:40:06,281
போ.
289
00:40:08,158 --> 00:40:09,076
சீக்கிரம்!
290
00:40:20,629 --> 00:40:21,839
நாம இனியும் காத்திருக்க முடியாது.
291
00:40:22,130 --> 00:40:25,133
காஇயானாவுக்கு காடுகளை நல்லா தெரியும்.
292
00:40:25,634 --> 00:40:27,135
அவன் மட்டும்தான் நம்மளை கண்டுபிடிப்பான்னு
எந்த உறுதியும் இல்லை.
293
00:40:27,761 --> 00:40:30,388
நீ இங்கேயே இரு, நான் அவனை தேடிட்டு வரேன்.
294
00:40:30,389 --> 00:40:31,682
நாஹி பொறு.
295
00:40:33,559 --> 00:40:34,935
நாம அவனை கண்டுபிடிப்போம்.
296
00:40:35,519 --> 00:40:38,313
நாம இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்கணும்.
297
00:41:01,336 --> 00:41:02,963
ஒரு மனைவி காத்துட்டு இருக்கா.
298
00:41:03,547 --> 00:41:06,425
அவனைத் தேடிக் கொண்டு வர,
ஒரு சகோதரன் போராடுறான்.
299
00:41:09,136 --> 00:41:10,011
நமாக்கே!
300
00:41:10,012 --> 00:41:11,054
நாஹி!
301
00:41:18,687 --> 00:41:20,188
நாஹி!
302
00:41:20,189 --> 00:41:21,772
நிறுத்துங்க, நாஹி!
303
00:41:21,773 --> 00:41:22,733
போதும்!
304
00:41:27,321 --> 00:41:28,780
குப்புஒகி.
305
00:42:57,035 --> 00:42:57,995
பொறுங்க.
306
00:43:00,163 --> 00:43:01,164
தவறிட்டேன்...
307
00:43:02,416 --> 00:43:03,541
நான் வழி தவறிட்டேன்.
308
00:43:03,542 --> 00:43:04,918
என் குழு...
309
00:43:08,714 --> 00:43:10,590
நமக்கு இந்த ஆளைத் தெரியாது.
310
00:43:10,591 --> 00:43:13,343
அவன் அவனுடைய இனத்துடன் சேரட்டும்.
311
00:43:14,970 --> 00:43:17,097
வெள்ளையர்கள் திரும்பி வந்திருக்காங்க.
312
00:43:17,472 --> 00:43:19,683
காயேகிலியின் ஆட்களும் அவங்களைப்
பார்த்துட்டாங்க.
313
00:43:21,310 --> 00:43:24,396
இவன் மூலமா அவங்க நாம இங்கே
இருப்பதை கண்டுபிடிக்கலாம்.
314
00:43:25,022 --> 00:43:26,398
நாம போகணும்.
315
00:43:28,150 --> 00:43:29,193
வாங்க.
316
00:43:42,206 --> 00:43:43,665
கிளம்பத் தயாரா இருக்கு!
317
00:43:53,592 --> 00:43:54,510
ஃபார்வர்ட்!
318
00:45:36,945 --> 00:45:40,532
ஒரு துரோகிக்குரிய சரியான மரணம் தான் இது.
319
00:46:41,969 --> 00:46:43,470
சடலத்தைக் கண்டுபிடி.
320
00:46:45,973 --> 00:46:47,391
நாம ஓஆஹூ பேரரசை நோக்கிப் போகலாம்.
321
00:47:16,044 --> 00:47:20,424
ஒ, ஒ, ஒ.
அமைதி, நிதானம், நிதானம்.
322
00:47:52,331 --> 00:47:53,165
அதோ!
323
00:47:54,416 --> 00:47:55,250
மாவீ!
324
00:47:55,667 --> 00:47:57,251
பரவாயில்லை, மகனே.
325
00:47:57,252 --> 00:47:58,754
சரிதான். எங்ககிட்ட நீ பாதுகாப்பா இருக்கலாம்.
326
00:48:02,216 --> 00:48:05,593
நாம திரும்பிப் போகப் போறதில்லை. சரியா.
கீழே கார்கோல கம்பளிகள் இருக்கு, இன்னும்...
327
00:48:05,594 --> 00:48:07,679
பறந்துகிடக்கும் பெரும்கடலை போய் சேர
காத்து சரியா வீசுது.
328
00:48:09,640 --> 00:48:13,477
நாங்க மட்டும் உதவி செய்யலன்னா, நீ செத்திருப்ப,
எனவே, அதை உனக்கு செய்த பதிலுதவியா வச்சுக்கோ.
329
00:49:33,974 --> 00:49:35,976
தமிழாக்கம் அகிலா குமார்
329
00:49:36,305 --> 00:50:36,857
Watch Online Movies and Series for FREE
www.osdb.link/lm